காலங்களில் அவள் வசந்தம் – விமர்சனம்
ஷ்யாம் என்ற கதாபாத்திரத்தில் படத்தின் நாயகனாய் கௌசிக் ராம் நடித்திருக்கிறார். இவர் திரை படங்களில் வருவது போன்றே யதார்த்தமான இயல்பு வாழ்க்கையிலும் காதல் வரும் என்று நினைக்கிறார்.திரைப்படங்களில் பார்ப்பதை போலவே காதலிக்க வேண்டும் என்று லிஸ்ட் எடுத்து வைத்துக்கொண்டு இருக்கும் நிலையில் ஹிரோஷினி என்ற பெண்ணிடம் தன் காதலை சொல்லுகிறார், ஆனால் அஞ்சலியுடன் திருமணம் செய்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது வெள்ளி திரையில் வருவதைப் போலவே தன் இல்லற யதார்த்த திருமண வாழ்க்கையினையும் வாழ நினைக்க்கும் நாயகனுக்கு நிஜ வாழ்க்கை இதுதான் என்று உணர வைக்கிறார் நாயகி அஞ்சலி .ஆனால் இதனால் அஞ்சலிக்கும் கௌசிக்கிற்கும் மன முறிவு ஏற்பட்டு விவாகரத்து வரை செல்கிறது. இந்த நிலையில் ஹிரோஷினியை கௌசிக் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிற...









