Sunday, April 26

Author: admin

11 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார் நடிகர் விஷால்!

11 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார் நடிகர் விஷால்!

சினிமா
11 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார் நடிகர் விஷால்!இந்த விழா போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து நடத்துவோம் - நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான நடிகர் விஷால் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (06.11.2022) 11 ஜோடிகளுக்கு பட்டு வேஷ்டி, பட்டு சேலையுடன் சீர்வரிசையோடு இலவச திருமணம் நடத்தி வைத்தார். அந்த விழாவில் அவர் பேசியதாவது: இங்கு வந்திருக்கும் அனைத்து தெய்வங்களுக்கும், திருமணம் ஆன 11 தம்பதிகளுக்கும், இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய என் தம்பி கண்ணனுக்கும், மற்ற மாநில செயலாளர்கள் அத்துணை பேருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மாநகராட்சி ஊழியர்ர்களுக்கும், நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஹரி, கண்ணன் மற்றும் 22 பேருக்கும் நன்றி. ஏனென்றால் எ...
‘பொன்னியின் செல்வன்’ நன்றி தெரிவிக்கும் விழா

‘பொன்னியின் செல்வன்’ நன்றி தெரிவிக்கும் விழா

சினிமா
‘பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று’ வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிக்கை மட்டும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் லைகா குழும தலைவர் சுபாஸ்கரன், திருமதி பிரேமா சுபாஸ்கரன், இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் சீயான் விக்ரம், இரா. பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி, லைகா நிறுவனத்தின் தமிழக தலைமை நிர்வாக அதிகாரி ஜிகேஎம் தமிழ்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜி கே எம் தமிழ் குமரன் பேசுகையில், '' பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இது போன்ற பிரம்மாண்டமான வெற்றியை எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியைக் கொண்டாடுவதில் லைகா குழுமம் பெரு மகிழ்ச்சியடைகிறது. பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க பல ஜாம்பவான்கள் முயற்சி ...
‘லவ் டுடே’ திரை விமர்சனம்

‘லவ் டுடே’ திரை விமர்சனம்

சினிமா
அந்த காலத்தில் உன்னுடைய நண்பன் யார் என்று சொல்லு? உன்னை பற்றி சொல்லுகிறேன் என்று சொல்லுவார்கள், இன்றைய காலகட்டத்தில் உன்னுடைய மொபைல் போனை கொடு உன்னை பற்றி சொல்லுகிறேன் என்று சொல்லுவார்கள், இந்த கருத்தை பிரதிபலிக்கும் கதைதான் பிரதீப்பின் லவ் டுடே. கதையின் நாயகன் பிரதீப்பும், கதையின் நாயகி இவானாவும் காதலிக்கிறார்கள்.இவர்களது காதலை அறியும் இவனாவின் அப்பாவான சத்யராஜுக்குத் தெரிந்தவுடன் அவர் காதலர்களுக்கு ஒரு நிபந்தனை வைக்கிறார்அந்த நிபந்தனை,காதலர்கள் இருவரும் அவர்களது மொபைல் போன்களை ஒருநாள் மாற்றி வைத்துக் கொள்ளும்படியும், அதற்குப் பின்னும் அவர்களின் காதல் தொடர்ந்தால், அவர்கள் திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்கிறார்.அதன்படியே போனை மாற்றிக்கொள்ளும் காதலர்கள் ஒருவர் மற்றவரின் போனை பார்க்க, ஒருவரை பற்றி மற்றவர் அறிந்துகொள்ளுகிறார்கள் .இதனால் அவர்களது காதல் என்னவானது ?சத்யராஜின் நிபந்தனையால் ஒர...
உண்மையாக உழைத்தால் சினிமாவிலும் அரசியலிலும் ஜெயிக்கலாம் – பிரஜின் நடிக்கும்  ‘ D3 ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்  நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் பேச்சு

உண்மையாக உழைத்தால் சினிமாவிலும் அரசியலிலும் ஜெயிக்கலாம் – பிரஜின் நடிக்கும் ‘ D3 ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் பேச்சு

சினிமா
' D3 'படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கிருஷ்ணவேணி திரையரங்கத்தில் இன்று நடைபெற்றது.இது பற்றிய விவரம் வருமாறு: நடிகர் பிரஜின் பிரதான நாயகனாக நடித்து ' D 3 'என்கிற சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் உருவாகியுள்ளது.இப்படத்தை பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். பீமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் மனோஜ் எஸ், சாமுவேல் காட்சன் தயாரித்துள்ளனர். ஜே. கே .எம் .புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்துக்கு மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஸ்ரீஜித் எடவானா இசையமைத்துள்ளார். கலை இயக்கம் - ஜெயசீலன் , ஸ்டண்ட் -ராம்போ விமல், படத்தொகுப்பு ராஜா ஆறுமுகம் . 'D3 ' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆர்.மனோகர், தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாகுவார் தங்கம், இயக்குநர் மோ...
அகிலனின் நூற்றாண்டு விழாவை நூறு இடங்களிலாவது கொண்டாட வேண்டும் * பிருந்தா சாரதி

அகிலனின் நூற்றாண்டு விழாவை நூறு இடங்களிலாவது கொண்டாட வேண்டும் * பிருந்தா சாரதி

இலக்கியம்
நவம்பர் 5, சென்னை சாகித்திய அகாடமியும் சென்னை லயோலா கல்லூரி தமிழ்த் துறையும் இணைந்து எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நவம்பர் 4, 5 மழைக்கு ஊடாகவும் தேதிகளில் சிறப்பாக நடத்தின. அகிலனின் நாவல்கள், சிறுகதைகள் , கட்டுரைகள் மற்றும் அவரது பன்முகப் படைப்புகள் குறித்துப் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நிகழ்த்தப்பட்டது. 'திரையில் அகிலனின் நாவல்கள்' அமர்வில் கலந்து கொண்டு கட்டுரை வாசிக்கும் முன்பு சிறிய உரை ஒன்றை நிகழ்த்தினேன். அது வருமாறு: "ஓர் எழுத்தாளன் என்பவன் வாசக மனங்களில் கனவுகளை விதைக்கிறவன். அதுவும் பெருந்திரளான மக்களால் வாசிக்கப்படும் ஓர் எழுத்தாளனால் பகிர்ந்துகொள்ளப்படும் கருத்துக்கள் சமூக மனதில் ஆழமாக விதைக்கப்பட்டு பெரும் விளைச்சலை வழங்குகின்றன . இங்கே நேற்று பேசிய எழுத்தாளர் திலகவதி அவர்கள் தான் மாணவப் பருவத்தில் படித்த அகிலனுடைய பெண் கதாபாத்திரங்கள் ...
‘லைகா’ சுபாஸ்கரன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து அமரர் கல்கியின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி நன்கொடை.

‘லைகா’ சுபாஸ்கரன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து அமரர் கல்கியின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி நன்கொடை.

சினிமா
அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளர் மணிரத்னம் இணைந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' எனும் பெயரில் இரண்டு பாகங்களைக் கொண்ட திரைப்படமாக தயாரித்திருக்கிறது. இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் சாதனையை படைத்திருக்கிறது. இந்நிலையில் லைகா குழுமம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும், அமரர் கல்கியின் புகழையும், அவரது சேவைகளையும், பாரம்பரியத்தையும் போற்றும் வகையில் இயங்கி வரும் அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மகிழ்ச்சியுடன் முன்வந்...
படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கார்கி பட இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன்

படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கார்கி பட இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன்

சினிமா
சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் கார்கி. இப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கி இருந்தார். இப்படம் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன் கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இளைஞர்கள் மட்டும் இல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் கொண்டாடும் படமாக கார்கி அமைந்தது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு பெருந்துணையாக இருந்த நிர்வாக தயாரிப்பாளர் அனந்த பத்மநாபன் அவர்களுக்கு படத்தின் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் கார் ஒன்றை அளித்துள்ளார். மேலும் இப்படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரையும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல இருக்கிறார். இது படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது....
மிரள் படத்தில் நிறைய உணர்வுபூர்வமான அம்சங்கள் இருக்கிறது -மிரள் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பில்  நடிகர் பரத்

மிரள் படத்தில் நிறைய உணர்வுபூர்வமான அம்சங்கள் இருக்கிறது -மிரள் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் பரத்

சினிமா
மிரள் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! Axess Film Factory G டில்லி பாபு தயாரிப்பில், M சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் “மிரள்”. புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழு நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். இவ்விழாவினில்.. நடிகை வாணி போஜன் பேசியதாவது..., இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் மிகப்பெரிய நன்றியை கூறிக்கொள்கிறேன். இந்த படம் மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. ஒட்டு மொத்த படக்குழுவும் முழு அர்பணிப்பை கொடுத்து, இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இணைந்து நடிப்பதற்கு பரத் மிகச்சிறந்த நடிகர், அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. உங்கள் எல்லோருடைய ஆதரவும் எங்களுக்கு தேவை. அனைவருக்கும் நன்றி. விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி  சக்திவேலன்  கூறியதாவது.. Axess Fi...
வருண் தவான் நடிக்கும் ‘பெடியா’ படத்திலிருந்து பரவசமூட்டும் காதல் மெல்லிசை பாடல் ‘எனக்காய் பிறந்தவளே நீயா’ வெளியீடு

வருண் தவான் நடிக்கும் ‘பெடியா’ படத்திலிருந்து பரவசமூட்டும் காதல் மெல்லிசை பாடல் ‘எனக்காய் பிறந்தவளே நீயா’ வெளியீடு

சினிமா
மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் 'பெடியா' படத்திலிருந்து பரவசமூட்டும் காதல் மெல்லிசை பாடல் 'எனக்காய் பிறந்தவளே நீயா' வெளியீடு 'பெடியா' திரைப்படத்தை நவம்பர் 25 அன்று தமிழகமெங்கும் பிரமாண்டமான முறையில் ஸ்டுடியோ கிரீன் வெளியிடுகிறது ,மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கும் 'பெடியா' திரைப்படத்தின் பரபரப்பான டீசர் அனைவரின் பேசு பொருளான நிலையில், அப்படத்திலிருந்து 'எனக்காய் பிறந்தவளே நீயா' எனும் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த மெல்லிசை காதல் பாடலை மிகவும் சிறப்பான முறையில் கார்த்திக் பாடியுள்ளார். அழகான பாடல் வரிகளும் உணர்வுப்பூர்வமான இசையும் கேட்பவர்களை பரவசமடைய வைக்கின்றன. 'எனக்காய் பிறந்தவளே நீயா' பாடலை கேட்கும் போது அது எவ்வாறு படம...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘சிக்லெட்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘சிக்லெட்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக்

சினிமா
தலைமுறை இடைவெளியை மையப்படுத்தித் தயாராகும் 'சிக்லெட்ஸ்' தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நட்சத்திர நடிகர்களான அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு, பிரபாஸ், வெங்கடேஷ் ஆகியோரின் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சாத்விக் வர்மா, தமிழில் முதன்முறையாக கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'சிக்லெட்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஸ்ரீகாந்த் அடாலாவின் இணை இயக்குநரும், 'திறந்திடு சிசே' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'சிக்லெட்ஸ்'. இதில் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகரான சாத்விக் வர்மா கதையின் நாயகர்களில் ஒருவராக நடிக்கிறார். இவர் ‘பாகுபலி 1’ மற்றும் ‘...