Sunday, April 26

Author: admin

’யசோதா’ படம் பற்றியும் ,  தன்னை பற்றியும்  சமந்தாவின் மனம் திறந்து உரையாடல்

’யசோதா’ படம் பற்றியும் , தன்னை பற்றியும் சமந்தாவின் மனம் திறந்து உரையாடல்

சினிமா
’யசோதா’ பற்றி சமந்தா: கதையின் நாயகியாக  சமந்தா நடித்திருக்கும்  ‘யசோதா’ திரைப்படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் மூத்தத் தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் மூவிஸ் பேனரின் கீழ் தயாரிக்கின்றனர். ‘மெலோடி பிரம்மா’ மணிஷர்மா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தன்னுடைய உடல்நிலை குறித்து வெளிப்படையாக சமந்தா தெரிவித்த பின்னர் முதன் முறையாக அவரைப் பற்றியும் படம் பற்றியும் ஊடகத்திடம் மனம் திறந்து உரையாடியுள்ளார். வணக்கம் சமந்தா, உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது? உடல்நிலை பற்றி விசாரித்ததற்கு நன்றி! நன்றாக தேறி வருகிறேன். சீக்கிரமாக பரிபூரணமாக குணமடைந்து விடுவேன். ‘யசோதா’ படம் வெளியாவதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ‘யசோதா’ படத்தின் டீசர் & ட்ரைய்லருக்கு கிடைத்துள...
‘’யசோதா’ படத்தின் கதையினை  கேட்ட 45 நிமிடங்களிலேயே சமந்தா நடிக்க ஒத்துக் கொண்டார்” -தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத்

‘’யசோதா’ படத்தின் கதையினை கேட்ட 45 நிமிடங்களிலேயே சமந்தா நடிக்க ஒத்துக் கொண்டார்” -தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத்

சினிமா
கதையின் நாயகியாக சமந்தா நடித்திருக்கக்கூடிய ‘யசோதா’ திரைப்படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் மூத்தத் தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத், ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் தயாரித்திருக்கிறார். வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் படத்தில் நடித்திருக்கின்றனர். தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் சினிமாத் துறையில் 40 வருடங்களாக இருக்கிறார். நேரடித் தெலுங்கு படங்கள் உட்படப் பல மொழிமாற்றம் செய்த நாற்பத்தைந்திருக்கும் மேற்பட்டப் படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். ‘ஆதித்யா 369’ போன்ற கல்ட் க்ளாஸிக் படங்களையும் அவர் தயாரித்து இருக்கிறார். இப்போது அவர் பான் இந்தியா படமான ‘யசோதா’ வை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் நவம்பர் 11ம் தேதி வெளியிட இருக்கிறார். ‘யசோதா’ படம்...
‘விஜயானந்த்’ படத்தின் முதல் பாடலுக்கான வீடியோ வெளியீடு

‘விஜயானந்த்’ படத்தின் முதல் பாடலுக்கான வீடியோ வெளியீடு

சினிமா
'விஜயானந்த்' படத்தின் சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியீடு கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகியிருக்கும் 'விஜயானந்த்' எனும் படத்தில் இடம்பெறும் முதல் பாடலுக்கான வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. 'ட்ரங்க்' எனும் ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'விஜயானந்த்'. இதில் 'ட்ரங்க்' படப் புகழ் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, வி. ரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் தமிழ் பதிப்பு ...
டிஸ்னி ஹாட் ஸ்டார் – கவிதாலயா தயாரிப்பில் உதய் மகேஷ் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார், அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு துவங்கியது

டிஸ்னி ஹாட் ஸ்டார் – கவிதாலயா தயாரிப்பில் உதய் மகேஷ் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார், அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு துவங்கியது

சினிமா
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த கவிதாலயா மற்றும் முன்னணி ஓடிடி தளமான ஹாட் ஸ்டார் இணைந்து தயாரிக்க உதய் மகேஷ் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார், அனஸ்வரா ராஜன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. புஷ்பா கந்தசாமி மற்றும் கந்தசாமி பரதன் தயாரிக்கும் இப்படத்தை நாளை, சக்கர வியூகம் உள்ளிட்ட படங்களை இயக்கியவரும், ஃபேமிலி மேன் -2 , ஆஃபிஸ் உள்ளிட்ட தொடர்களிலும் பல வெற்றிப்படங்களிலும் நடித்தவருமான உதய் மகேஷ் கதை - திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவரின் கதை-திரைக்கதையில் கே பாலச்சந்தர் இயக்கிய சாந்தி நிலையம் மிகவும் பிரபலமான தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய இளைஞர்களின் நாயகன் ஜி வி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்க ஜோடியாக அனஸ்வ...
 நடிகர் தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘ஹனு-மேன்’ டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

 நடிகர் தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘ஹனு-மேன்’ டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

சினிமா
சூப்பர் ஹீரோவாக தேஜா சஜ்ஜா நடிக்கும் 'ஹனு-மேன்' டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு தெலுங்கின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஹனு-மேன்' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஹனு-மேன்'. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். சூப்பர் ஹீரோ ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்...
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகும் கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படத்தை ராஜு முருகன் இயக்குகிறார்!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகும் கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படத்தை ராஜு முருகன் இயக்குகிறார்!

சினிமா
தரமான, அர்த்தமுள்ள திரைப்படங்கள் மூலம் தொடர்ந்து முத்திரை பதித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் அடுத்த பிரம்மாண்டப் படைப்பான 'ஜப்பான்' படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமா இதுவரை பாத்திராத கதாபாத்திரங்கள், அவர்களிருக்கும் பிரச்சினைகள், அறம் சார்ந்த தீர்வு என தனது திரைப்படங்கள் மூலம் படைப்பாற்றலும், சமூகப் பொறுப்பும் சேர்ந்து இயங்க முடியும் என்பதை நிரூபித்து வரும் இயக்குநர் ராஜு முருகன். அப்படி, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க, ராஜு முருகன் இயக்கத்தில் 2016ல் வெளிவந்து தமிழில் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்ற படம் 'ஜோக்கர்'. தற்போது மீண்டும் இதே கூட்டணி 'ஜப்பான்' மூலம் மீண்டும் இணைகிறது. 2007ஆம் ஆண்டு நாயகனாக அறிமுகமானதிலிருந்து ஜனரஞ்சகமான, அதே நேரம் வித்தியாசமானப் படங்கள் மூ...
கார்த்திக் வெளியே தெரிந்த பிளேபாய்.. ராம்கி வெளியே தெரியாத பிளேபாய் ; நட்டி நடராஜ் நடிக்கும் குருமூர்த்தி பட  விழாவில்  ஆர்கே செல்வமணி

கார்த்திக் வெளியே தெரிந்த பிளேபாய்.. ராம்கி வெளியே தெரியாத பிளேபாய் ; நட்டி நடராஜ் நடிக்கும் குருமூர்த்தி பட விழாவில் ஆர்கே செல்வமணி

சினிமா
ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க மற்றும் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த படத்தை இயக்குநர் கே.பி.தனசேகரன் இயக்கியுள்ளார். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர் , இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புஷ்பா படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இந்தப்படத்தின் படத்தொகுப்பை எஸ்.என்.பாசில் கவனித்துள்ளார் இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இச...
கிராமத்து அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘பாண்டிய வம்சம்’..!

கிராமத்து அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘பாண்டிய வம்சம்’..!

சினிமா
கிராமத்து அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள 'பாண்டிய வம்சம்'..! ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பாக ஏ.சிவபிரகாஷ் மற்றும் கேப்டன் எம் பி ஆனந்த் இணைந்து தயாரித்திருக்கும் 'பாண்டிய வம்சம்' திரைப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை பசும்பொன் முத்துராமலிங்க திருக்கோவிலில் அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணை தலைவர் டாக்டர் . பி. வி. கதிரவன் Ex MLA வெளியிட்டார். பாண்டிய வம்சம் திரைப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கி நடித்துள்ளார் ஏ. சிவபிரகாஷ். இதில் நாயகியாக ரக்ஷிதா பானு  மற்றும் ஆலியா ஹயாத் நடித்துள்ளனர். முழு நீள வில்லனாக மனோஜ் குமார் நடித்துள்ளார், மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயகுமார், போஸ் வெங்கட் மற்றும் குட்டி புலி சரவணன் சக்தி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதையைப் பற்றி இயக்குனர் கூறுகையில், "இப்படம் கிராமத்தில் உள்ள அரசியலை மையமாக...
கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்ட இதிகாசம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் துபாய் சர்வதேச மாநாட்டில் வெளியிடப்படுகிறது

கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்ட இதிகாசம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் துபாய் சர்வதேச மாநாட்டில் வெளியிடப்படுகிறது

இலக்கியம்
கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாகும். 23 மொழிகளில் சாகித்ய அகாடமி அதை மொழிபெயர்த்து வருகிறது. இந்தி - உருது -மலையாளம் - கன்னடம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து இப்போது ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்திருக்கிறது; கீதா சுப்ரமணியம் மொழிபெயர்த்திருக்கிறார். துபாயில் நவம்பர் 9, புதன்கிழமை அட்லாண்டிஸ் ஹோட்டலில் நடைபெறும் ‘ரைஸ்’ மாநாட்டில் ‘தி சாகா ஆஃப் தி காக்டஸ் லேண்ட்’ என்ற கள்ளிக்காட்டு இதிகாசத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்படுகிறது. உலகத் தொழில் முனைவோர் பங்குபெறும் இந்த மாநாட்டில், கவிஞர் வைரமுத்து நூலை வெளியிட 32நாடுகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொள்கிறார்கள். மாநாட்டின் தலைவர் தொழிலதிபர் சிவகுமார், ரைஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அருட்தந்தை ஜெகத் கஸ்பர், துணைத் தலைவர்கள் ஆல்பிரட் பெர்க்மென்ஸ், ஜோஸ் மைக்கேல் ராபின், சாகுல் ஹமீது, பஷீர் கான...
திரைப்பட இயக்குனர் எழுத்தாளர் ராசி அழகப்பன் அவர்களின் “சந்திப்பில் கிடைத்த சிகரங்கள்” நூல் வெளியீட்டு விழா

திரைப்பட இயக்குனர் எழுத்தாளர் ராசி அழகப்பன் அவர்களின் “சந்திப்பில் கிடைத்த சிகரங்கள்” நூல் வெளியீட்டு விழா

இலக்கியம்
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை நிறுவனர் மற்றும் தலைவராகக் கொண்டு செயல்பட்டு வரும் வெற்றித் தமிழர் பேரவையின் புதுச்சேரிப் பிரிவின் சார்பாக (04-11-2022) அன்று வெள்ளிக் கிழமை மாலை புதுவைத் தமிழ் சங்க அரங்கத்தில் திரைப்பட இயக்குனர் எழுத்தாளர் ராசி அழகப்பன் அவர்களின் “சந்திப்பில் கிடைத்த சிகரங்கள்” நூல் வெளியீட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. புதுச்சேரி, வெற்றித் தமிழர் பேரவையின் அமைப்பாளர் தீந்தமிழ்த் தென்றல் தி.கோவிந்தராசு அவர்களின் வரவேற்புரையோடு நிகழ்ச்சி தொடங்கியது. புதுச்சேரி அரசின் மேனாள் சட்டப்பேரவைத் தலைவர் தகைமிகு வே..பொ. சிவக்கொழுந்து அவர்கள் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்று தலைமையுரை ஆற்றினார். எழுத்தாளர் ராசி அழகப்பனின் சந்திப்பில் கிடைத்த சிகரங்கள் நூலினைப் புதுச்சேரி அரசின் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் தகைமிகு க.லட்சுமி நாராயணன் அவர்கள் வெளியிட்டுச் சிறப்புரை வழங்கி...