Sunday, April 26

Author: admin

’80ஸ் ரீயூனியன்’: கொரோனாவுக்கு பிறகு முதல் முறையாக மும்பையில் சந்தித்த எண்பதுகளில் கோலோச்சிய தென்னிந்திய மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள்

’80ஸ் ரீயூனியன்’: கொரோனாவுக்கு பிறகு முதல் முறையாக மும்பையில் சந்தித்த எண்பதுகளில் கோலோச்சிய தென்னிந்திய மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள்

சினிமா
1980களில் திரை வானில் தடம் பதித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து தங்கள் நட்பை கொண்டாடி வந்தனர். '80ஸ் ரீயூனியன்' என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வின் 10-வது ஆண்டு கொண்டாட்டத்தை 2019-ல் சிரஞ்சீவி தனது ஹைதராபாத் இல்லத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார். அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்காத நினைவாக அந்த நிகழ்ச்சி இடம்பெற்றது. அடுத்த வருட நிகழ்ச்சிக்கு அனைவரும் காத்திருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் '80ஸ் ரீயூனியன்' நடைபெறவில்லை. இந்நிலையில், மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு மும்பையில் அனைவரும் சந்தித்தனர். பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நான்கு தென் மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்களுக்கு விருந்தளித்து உபசரித்தனர். பாலிவுட்டை சேர்ந்த தங்கள் நண்பர்கள் சிலரையும் சனிக...
வருண் தவான் நடிக்கும் ‘பெடியா’ (ஓநாய்) படத்திலிருந்து இந்த ஆண்டின் கலகலப்பான பாடல்

வருண் தவான் நடிக்கும் ‘பெடியா’ (ஓநாய்) படத்திலிருந்து இந்த ஆண்டின் கலகலப்பான பாடல்

சினிமா
காடுன்னா திரில்லு தானடா: மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் 'பெடியா' (ஓநாய்) படத்திலிருந்து இந்த ஆண்டின் கலகலப்பான பாடல் காற்றினிலே வரும் கீதம் நமக்கு தெரியும். ஆனால் இது காட்டினிலே வரும் கீதம். ஆம், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் 'பெடியா' (ஓநாய்) படத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஆண்டின் கலகலப்பான பாடல் தான் 'காடுன்னா திரில்லு தான டா...' 'பெடியா' திரைப்படத்தை நவம்பர் 25 அன்று தமிழகமெங்கும் பிரமாண்டமான முறையில் தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. வருண் தவானும் அவரது ஓநாய் கூட்டமும் நடனமாடும் 'காடுன்னா திரில்லு தான டா...' பாடல் சுறுசுறுப்பான இசையும் விற...
காளிகாம்பாள் கோவிலில் ஹன்சிகா, டைரக்டர் கண்ணன் சாமி தரிசனம்.

காளிகாம்பாள் கோவிலில் ஹன்சிகா, டைரக்டர் கண்ணன் சாமி தரிசனம்.

சினிமா
இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் முதன் முறையாக இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கிறார். கதாநாயகியை மையமாக வைத்து இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்குகியது. இதில் ஹன்சிகா நாயகியாக நடிக்கிறார். முதன் முறையாக இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கிறார். இது எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லராக இருக்கும். இயக்குனர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் பேனரில் புரொடக்ஷன் நம்பர் 10 ஆக இப்படத்தை இயக்கி தயாரித்து வருகிறார். படத்தின் கதை கருவை எழுத்தாளர் மா.தொல்காப்பியன் எழுதியுள்ளார். தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் முழு நீள திரைக்கதையாக பல சுவாரசியமான கூறுகளுடன் உருவாக்கி வசனம் எழுதியுள்ளார். பாடலாசிரியர் ஸ்ரீனி செல்வராஜ், மூவரும் இந்த திரைக்கதையை ஆலோசித்து 6 மாதங்களுக்கும் மேலாக உழைத்து, ஆர்.கண்ணனிடம் பைண்ட் ஸ்கிரிப்டை வழங்கியுள்ளனர். அவர், இன்று முதல் சென்...
”காவல் துறையில் இருந்தவனுக்கு கலைத்துறை தந்த வெற்றி” – ’டாக்டர்’ பட புகழ் கராத்தே கார்த்தி பேட்டி

”காவல் துறையில் இருந்தவனுக்கு கலைத்துறை தந்த வெற்றி” – ’டாக்டர்’ பட புகழ் கராத்தே கார்த்தி பேட்டி

சினிமா
’டாக்டர்’ பட நடிகருக்கு மலையாள சினிமா தந்த வரவேற்பு எங்கோ எப்படியோ இருந்தவர்கள், இருக்க வேண்டியவர்களை தமிழ் சினிமா பல சமயங்களில் இவர் தனக்கானவர் என தேர்வு செய்துகொள்ளும் அப்படி ஒரு அக்மார்க் கலைஞனாக கலைத்தாயாளும், திறன்மிகு படைப்பாளர்களாலும் தேர்வு செய்துகொள்ளப்பட்டவர் கராத்தே கராத்தி. ‘டாக்டர்’ படத்தில் வில்லனுக்கு வலதுகரமாக கோமதி அக்கா கேரக்டரில் வருவாரே அவர்தான் கராத்தே கார்த்தி. இதற்குமுன் ‘என்னை அறிந்தால்’, ‘கைதி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ‘சித்திரை செவ்வானம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘கூமன்’ மலையாள படத்தில் இவரது கதாபாத்திரம் மிக முக்கியமானது. இவரது நடிப்பு மலையாளம் மற்றும் தமிழ்த் திரைக்கலைஞர்கள் பாராட்டை பெற்று வருகிறது. ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் மிரட்டும் கராத்தே கார்த்தி, கராத்தே, பாக்ஸிங்கில் பல பதக்கங...
முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்-திரை விமர்சனம்

முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்-திரை விமர்சனம்

சினிமா
எப்படியாவது மிகப்பெரிய வழக்கறிஞராக ஆக வேண்டும் என்ற கனவோடு ,தன் தாயுடன் வாழ்ந்து வரும் வினீத்சீனிவாசன் , வருமானமின்றி வாழ்க்கையை நடத்திவரும் வேளையில் அவரது அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்குப் பணம் தேவைப்படுகிறது இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் பல விபத்துகளை சாலை விபத்துகளாக மாற்றி காப்பீட்டுப் பணம் பெற்றுத்தரும் ஒருவரின் பழக்கம் ஏற்படுகிறது. அவரும் அந்த வழி மூலமே அம்மாவின் சிகிச்சையை முடித்த பிறகு ,நாமும் விபத்துகளையும் சாலை விபத்துகளாக மாற்றி அதற்கு காப்பீடு பெற்று பணம் சம்பாதித்தால் என்ன என்று முடிவெடுக்கிறார்.ஆனால் அதே வழியில் ஏற்கனவே செய்துவரும் வழக்கறிஞர் சுராஜ் வெஞ்சரமூடுவுக்கு இவர் போட்டியாக இறங்குகிறார் வினீத்சீனிவாசனின் வளர்ச்சியை கண்டு பொறுமுகிறார் சுராஜ்.இந்த சூழ்நிலைக்கு பின் பின்பு வினீத்சீனிவாசனுக்கு ஏற்படும் இடையூறுகள் என்ன ? அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் முகு...
“ராம் ஸ்டுடியோஸ்” நிறுவனத்தின் “நேத்ரா ஷூட்டிங் ஹவுஸ் ” திறப்பு விழா

“ராம் ஸ்டுடியோஸ்” நிறுவனத்தின் “நேத்ரா ஷூட்டிங் ஹவுஸ் ” திறப்பு விழா

சினிமா
கே.கே. நகரில் பிரமாண்டமான ஷூட்டிங் ஹவுஸ் "ராம் ஸ்டுடியோஸ்" நிறுவனத்தின் "நேத்ரா ஷூட்டிங் ஹவுஸ் " திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்... சென்னையில் புறநகரில் மட்டுமே அதிகமான ஷூட்டிங் ஹவுஸ்கள் இருக்கின்றன. அங்கு படப்பிடிப்பை நடத்தினால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அதிகமான நேரம், மற்றும் எரிபொருள்,வீணாகி வருகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் , குறிப்பிட்ட நாட்களில் படப்பிடிப்பை முடிக்க முடியாமல் போகிறது என்பது அனைத்து சினிமா தொழிலாளர்களுக்கும் தெரிந்த விஷயம். தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திரு.மஸ்கட் C.ராமலிங்கம் அவர்களின் " ராம் ஸ்டுடியோஸ் நிறுவனம்" எண்.452, R.K.சண்முகம் சாலை, கே.கே நகரில் " நேத்ரா ஷூட்டிங் ஹவுஸ் " என்ற சொகுசு ஷூட்டிங் பங்களாவை உருவாக்கி உள்ளது. பார்க்கிங் உட்பட அனைத்து வசதிகளையும் கொண்டு இதை உருவாக்கியுள்ளனர்.இதை தவிர வெளிப்புற படப...
நான் கண்ட உண்மை சம்பவம் தான் நாடு படத்தின் கதை ; இயக்குனர் சரவணன்

நான் கண்ட உண்மை சம்பவம் தான் நாடு படத்தின் கதை ; இயக்குனர் சரவணன்

சினிமா
ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் 'நாடு'. இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத 'எங்கேயும் எப்போதும்' என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, அழகுச்சிலை மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்து இயக்குனர் சரவணனுடன் இணைந்து பயணிக்கும் இசையமைப்பாளர் சத்யா தான் இந்த படத்திற்கும் இசை அமைத்துள்ளார். சக்திவேல் ஒளிப்பதிவை கவனிக்க, தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் இளையராஜா இந்த படத்தின் கலை வடிவமைப்பை கவனித்துள்ளார். பொன் கதிரேசன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இந்தப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நட...
 9 தமிழ் திரை பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட “ரங்கோலி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !!!

 9 தமிழ் திரை பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட “ரங்கோலி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !!!

சினிமா
ரசிகர்களின் பாராட்டை குவிக்கும் ரங்கோலி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !!! Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அருண் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் அதர்வா, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், நடிகர் சதீஷ் நடிகை வாணி போஜன், நவீன் சந்த்ரா கார்த்திக் ரத்னம் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். ஸ்கூல் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையை, அவர்களது குடும்பங்களை சுற்றிய கதைகளை நம் தமிழ் சினிமா சொல்வதே இல்லை. இப்படம் அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் ஒரு அருமையான குடும்பப்படமாக இப்போதைய பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. குடும்ப...
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் டாக்டர். ஐசரி கே கணேஷ் வழங்கும் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் டாக்டர். ஐசரி கே கணேஷ் வழங்கும் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’

சினிமா
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் டாக்டர். ஐசரி கே கணேஷ் வழங்கும் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி ’எல்.கே.ஜி.’, ‘மூக்குத்தி அம்மன்’ மற்றும் ‘வீட்ல விசேஷங்க’ ஆகிய மூன்று படங்கள் மூலம் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியைக் கொடுத்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக வட்டத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வரக்கூடிய டாக்டர் ஐசரி கே கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ’சிங்கப்பூர் சலூன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் இணைந்திருக்கிறார்.இந்த வெற்றிகரமான கூட்டணியில் புதிய இயக்குநர் இணைந்திருப்பது சுவாரஸ்யம் தரக்கூடிய ஒன்று. வழக்கமாக ஆர்.ஜே. பாலாஜி அவரது படங்களுக்கு அவரே இயக்குநராக அல்லது அவரது முதன்மை/ உதவி இயக்குநர்களுடன் கூட்டணி சேர்வார். இந்த முறை ஆ...
புதிய பரிமாணத்தில் சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம்

புதிய பரிமாணத்தில் சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம்

சினிமா
Labyrinth film productions தயாரிப்பில், இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில், நடிகர் சந்தானத்தின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் ''ஏஜென்ட் கண்ணாயிரம்'' இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ரியா சுமந்த்  நடித்துள்ளார். மேலும் முனிஷ் காந்த், குக் வித் கோமாளி புகழ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். வரும் 25 ஆம் தேதி வெளியாகியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.இதில் இயக்குனர் மனோஜ் பீதா கலந்து கொண்டு படம் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொண்டார்.  அப்போது அவர் கூறியதாவது:- தெலுங்கு முன்னணி இயக்குனரான அணுதீப் இயக்கத்தில், நடிகர் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் வெளியாகி பிளாக்பாஸ்டர் வெற்றி பெற்ற 'ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா' படத்தின் தமிழ் மறு ஆக்கம் தான் இந்த ஏஜென்ட் கண்ணாயிரம் படம். அந்த தெலுங்கு படத்தின் உர...