Sunday, April 26

Author: admin

வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்தது

வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்தது

சினிமா
EINFACH ஸ்டுடியோஸின் ப்ரதாப் கிருஷ்ணா & மனோஜ் குமார் வழங்கும் அறிமுக இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்தது. வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடக்கத்தில் ஆரம்பித்து அதன் பெரும்பாலான காட்சிகள் தற்போது ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ மோகன் ஹபு அவர்களின் பிரபலமான கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கன்னடம் தான் இதன் மூலக் கதை என்றாலும் தெலுங்கு மற்றும் தமிழிலும் தயாள் பத்மநாபனே இயக்குகிறார். தெலுங்கில் இந்தப் படத்தை அல்லு அரவிந்த் ஆஹா ஒரிஜினல் தளத்திற்காகத் தயாரிக்கிறார். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ‘கொன்றால் பாவம்’...
சோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘அனல் மேலே பனித்துளி’ திரைப்படம் நவம்பர் 18ம் தேதி வெளியாகிறது

சோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘அனல் மேலே பனித்துளி’ திரைப்படம் நவம்பர் 18ம் தேதி வெளியாகிறது

சினிமா
சோனி லிவ் ஓடிடி தளம் வட்டார ரீதியிலான படங்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய வகையில் தற்போது ‘அனல் மேலே பனித்துளி’ படத்தை வெளியிட இருக்கிறது. இந்தக் கதை எதிர்பாராத விதமான கதைக்களத்துடனும் திருப்பங்களுடனும் பாலியல் வன்புணர்வில் இருந்து மீண்ட ஒருவர் எவ்வாறு தன் வாழ்வை கடந்து வருகிறார் என்பதை இந்தக் கதை சொல்கிறது.  வெற்றிமாறன் தயாரித்திருக்கக்கூடிய இந்தத் திரைப்படம் இந்த மாதம் நவம்பர் மாதம் 18ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. சென்னையைப் பின்னணியாகக் கொண்ட இந்தக் கதை, நீதிக்கான போராட்டத்தின் வழியில் தன்னை மாற்றிக் கொள்ளாத மதியின் (ஆண்ட்ரியா ஜெரிமையா) கடினமான கதையைக் கூறுவதாக அமைந்துள்ளது. இதுமட்டுமல்லாது, இந்த வழக்கை மதி கைவிட்டு தன் வழக்கமான வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்று விரும்புவர்களையும் காட்சிப்படுத்துகிறது. இந்தத் தடைகளை எல்லாம் தாண்டி தன்னுடைய கடைசி மூச்சு இருக்க...
நாகசைதன்யா, வெங்கட்பிரபு, ஸ்ரீனிவாசா சித்தூரி, ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸின் பைலிங்குவல் படத்தின் முக்கியமான ஆக்‌ஷன் ஷெட்யூல் துவக்கம்

நாகசைதன்யா, வெங்கட்பிரபு, ஸ்ரீனிவாசா சித்தூரி, ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸின் பைலிங்குவல் படத்தின் முக்கியமான ஆக்‌ஷன் ஷெட்யூல் துவக்கம்

சினிமா
முதல் முறையாக இயக்குநர் வெங்கட் பிரபுவும், நடிகர் நாக சைதன்யாவும் இணைந்திருக்கக்கூடியத் திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில், மிகப்பெரிய தயாரிப்புச் செலவில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களுடன் உருவாகி வருகிறது. பவன் குமார் வழங்ககூடிய இந்தத் திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். நாக சைதன்யா கதையின் நாயகனாக நடிக்க, நடிகர்  அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்கிறார். கதையின் மிக முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகளுக்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்‌ஷன் காட்சிகளுக்கான படப்பிடிப்பில் அரவிந்த் சுவாமி இணைந்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகள் மகேஷ் மாத்யூ மாஸ்டரின் மேற்பார்வையில் படமாக்கப்பட்டுள்ளது. நாக சைதன்யா மற்றும் அரவிந்த் சுவாமி இருவரையும் திரையில் இணைந்து பார்ப்பது நிச்சயம் ப...
இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட Dr. ஐசரி K. கணேஷ் வெற்றி

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட Dr. ஐசரி K. கணேஷ் வெற்றி

செய்திகள்
இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பிற்கான தேர்தல் இன்று டெல்லி இந்திய ஒலிம்பிக் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது. இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவருமான Dr. ஐசரி K. கணேஷ் அவர்கள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குஜராத் மாநிலத்தை சேர்ந்த திரு. சஞ்சய் சுப்பிரிய அவர்களை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார். Dr. ஐசரி K. கணேஷ் அவர்களுக்கு ஆதரவாக 20 மாநிலங்களும், திரு. சஞ்சய் சுப்பிரிய அவர்களுக்கு ஆதரவாக 15 மாநிலங்களும் வாக்களித்துள்ளனர். மேலும் Dr. ஐசரி K. கணேஷ் அணியில் செயலாளர், பொருளாளர், துணை தலைவர்கள் (5), இணை செயலாளர்கள் (3), உறுப்பினர்கள் என அனைவரும் வெற்றி பெற்று இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தனி முத்திரை பதித்தனர்....
யூகி திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!!

யூகி திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!!

சினிமா
UAN Film House தயாரிப்பாளர் Mr.Rajadas Kurias தயாரிப்பில், கதாசிரியர் பாக்கியராஜ் கதையில், ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில், கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி,பவித்ரா லக்‌ஷ்மி, இணைந்து நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் “யூகி”. வாடகை தாய் பின்னணியில் உணர்வுப்பூர்வமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்… 11:11 Productions தயாரிப்பாளர் பிரபு திலக் பேசியதாவது… இங்கு வந்து உங்களை சந்திப்பது மிக மகிழ்ச்சி. இப்போது திரைத்துறை மிக நன்றாக இருக்கிறது. பெரிய படங்கள் மட்டுமே ஓடும் என்ற நிலையில் லவ் டுடே போன்ற படங்கள் ஓடுவது பெரிய நம்பிக...
சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுக்கும் நடிகர் ஜெய்!

சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுக்கும் நடிகர் ஜெய்!

சினிமா
தமிழ் சினிமாவில் தனி கதாநாயகன், இன்னொரு கதாநாயகனுடன் சேர்ந்து நடிப்பது, பல நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடிப்பது எனப் பல படங்களில் பார்த்து ரசித்த நடிகர் ஜெய்  கூடிய விரைவில் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்க உள்ளார். ராகுல் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் சார்பாக K திருக்கடல் உதயம் படத்தைத் தயாரிக்க, சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் Movie BREAKING NEWS. இந்தப் படத்தில் நடிகர் ஜெய் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடிகர் ஜெய் ரோபோக்களுடன் சண்டையிடும் ஆக்‌ஷன் காட்சிகள் மிக பிரம்மாண்டாகவும் அற்புதமாகவும் படமாக்கி உள்ளனர். படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன. படத்தின் கதாநாயகியாக தெலுங்கின் பானு ஸ்ரீ நடிக்கிறார். ராகுல் தேவ், தேவ் கில் வில்லன்களாகவும் சிநேகன் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். மேலும், பழ கருப்பையா, இந்திரஜா, ஜெய் பிரகாஷ்...
நடிகரும் தயாரிப்பாளருமான மதுரை டாகடர்.சரவணன் இல்லத்திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி

நடிகரும் தயாரிப்பாளருமான மதுரை டாகடர்.சரவணன் இல்லத்திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி

செய்திகள்
நடிகரும் தயாரிப்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ மதுரை டாக்டர்.சரவணன் அவர்களின் மகன் டாக்டர். S. அம்ரித்குமார், டாக்டர். M.D.சாதூர்யாவின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி மதுரை வேலம்மாள் மெடிக்கல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் ராஜகண்ணப்பன், முன்னாள் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார், நாஞ்சில் சம்பத் போன்ற அரசியல் பிரமுகர்களும் திரை நட்சத்திரங்களான சூரி, விதார்த், இயக்குனர் பேரரசு, சோனியா அகர்வால், யாஷிகா ஆனந்த், சஞ்சனா சிங், கடலோர கவிதைகள் ரேகா, சீதா, வனிதா விஜயகுமார், நளினி, அறந்தாங்கி நிஷா,ஷகிலா, அங்காடிதெரு மகேஷ். பிளாக் பாண்டி, ரோபோ சங்கர், சோனா, கூல் சுரேஷ், சிங்கம்புலி, ரமேஷ் கண்ணா, பருத்திவீரன் சரவணன், கஞ்சா கருப்பு மற்றும் திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்....
சினிமா வாயிலாக குழந்தைகளை, ஆளுமைத் திறன் மிக்கவர்களாக திகழ வைக்கும்  நிகழ்வுகளுக்கு என் ஆயுட்காலம் முழுவதும் தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பணியாற்றுவேன் -சீனு ராமசாமி

சினிமா வாயிலாக குழந்தைகளை, ஆளுமைத் திறன் மிக்கவர்களாக திகழ வைக்கும் நிகழ்வுகளுக்கு என் ஆயுட்காலம் முழுவதும் தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பணியாற்றுவேன் -சீனு ராமசாமி

கல்வி
வணக்கம், “சினிமா ரசனை கல்வி” எது சிறந்த சினிமா வாழ்வியல் ? சினிமா வழிகாட்டும் சினிமா, குழந்தைகள் விழிப்புணர்வு சினிமா, வாழ்வுக்கு நெருக்கமான யதார்த்த சினிமா, என நம்மை உயர்த்தும் ரசனையில் மேம்பட வைக்கும் சினிமா கலையை மாணவர்களுக்கு அடையாளம் காட்டும் விதமாக இயக்குநர் பாலுமகேந்திரா அவர்கள் சினிமா ரசனைக் கல்வியை தொடங்க வேண்டுமென தன் வாழ்நாளெல்லாம் வலியுறுத்தி வந்தார். நானும், நாங்களும் இக்கருத்தினை வலியுறுத்தினோம். இன்று அது நனவானது. நல்ல சினிமாவை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாக பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக தமிழக அரசுப் பள்ளியான சென்னை -92, விருகம்பாக்கம், ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளில் மாதந்தோறும் ஒளிபரப்படுகிறது. 14.11.2022 அன்று “குப்பச்சிக்களு” என்ற கன்னட திரைப்படம் திரையிடப்பட்டது. இந்நிகழ்விற்கு சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர். S.மார்ஸ் மற்றும் நேர...
டாக்டர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் புதிய படத்தில் ஹிப் ஹாப் தமிழா

டாக்டர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் புதிய படத்தில் ஹிப் ஹாப் தமிழா

சினிமா
'வெந்து தணிந்தது காடு' படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா கதையின் நாயகனாக நடிக்கிறார். 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா கதையின் நாயகனாக நடிக்கிறார். இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருக்கும் ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் தயாராகும் ஏழாவது படம் இது. ‘எல் கே. ஜி’, ‘கோமாளி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வெந்து தணிந்தது காடு’ என வரிசையாக பல திரைப்படங்களைத் தயாரித்து, தமிழ் திரையுலகில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தரமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வரும் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான...
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சினிமா
இயக்குநர் பாபி கொல்லி ( கே. எஸ். ரவீந்திரன்) இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'வால்டேர் வீரய்யா'. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. கமர்சியல் எண்டர்டெய்னராகத் தயாராகி வரும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை பற்றிய புதிய தகவலை 'ராக்ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் தன்னுடைய இணைய பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவருடைய இணைய பக்கத்தில், ':மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நடிகை ஊர்வசி ரௌத்லா இணைந்து கலக்கியிருக்கும் பாடலின் லிரிக்கல் வீடியோ இந்த வாரம் வெளியிடப்படும்'' என பதிவிட்டிருக்கிறார். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் அதிவேக நடனத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கும். இந்...