எப்படியாவது மிகப்பெரிய வழக்கறிஞராக ஆக வேண்டும் என்ற கனவோடு ,தன் தாயுடன் வாழ்ந்து வரும் வினீத்சீனிவாசன் , வருமானமின்றி வாழ்க்கையை நடத்திவரும் வேளையில் அவரது அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்குப் பணம் தேவைப்படுகிறது இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் பல விபத்துகளை சாலை விபத்துகளாக மாற்றி காப்பீட்டுப் பணம் பெற்றுத்தரும் ஒருவரின் பழக்கம் ஏற்படுகிறது. அவரும் அந்த வழி மூலமே அம்மாவின் சிகிச்சையை முடித்த பிறகு ,நாமும் விபத்துகளையும் சாலை விபத்துகளாக மாற்றி அதற்கு காப்பீடு பெற்று பணம் சம்பாதித்தால் என்ன என்று முடிவெடுக்கிறார்.ஆனால் அதே வழியில் ஏற்கனவே செய்துவரும் வழக்கறிஞர் சுராஜ் வெஞ்சரமூடுவுக்கு இவர் போட்டியாக இறங்குகிறார் வினீத்சீனிவாசனின் வளர்ச்சியை கண்டு பொறுமுகிறார் சுராஜ்.இந்த சூழ்நிலைக்கு பின் பின்பு வினீத்சீனிவாசனுக்கு ஏற்படும் இடையூறுகள் என்ன ? அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் படத்தின் எஞ்சிய கதை.
படத்தின் நாயகனாக இளம் வழக்கறிஞர் பாத்திரத்தில் நடித்திருக்கும் வினித் சீனிவாசனின் உடல் மொழியும் தோற்றமும் அவரது கதாப்பாத்திரத்தின் வெற்றிக்கு பெரிதும் துணை நின்றுள்ளது
வினீத்சீனிவாசனின்இணையாக வரும் அர்ஷா பைஜூம் , வழக்கறிஞராக நடித்திருக்கும் சுராஜ் வெஞ்சரமூடும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாப்பாத்திரங்களில் நிறைவாக நடித்துள்ளார்கள்.
படத்தின் மிகப்பெரிய பலமாக இருப்பது திரைக்கதை என்றுதான் சொல்லவேண்டும் ,விமல் கோபாலகிருஷ்ணனுடன் இணைந்து இந்த படத்தின் திரைக்கதையை திறம்பட எழுதி இருக்கும் இயக்குனர் அபிநவ் சுந்தர் நாயக் படத்தை திறம்பட இயக்கியுள்ளார்
‘விசுவஜித் ஒடுக்கத்திலின் தத்ரூபமான ஒளிப்பதிவும் இசையமைப்பாளர் சிபி மேத்யூ அலெக்சின் இசையும் படத்தின் காட்சிஅமைப்புகளுடன் ஒன்றிணைந்த்து செல்லும் வகையில் சிறப்பாக உள்ளது.
முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் எல்லா தரப்பு ஆடியன்ஸையும் நிச்சயம் கவரும்.