Monday, April 27

Author: admin

“லவ்” ( Love ) திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !!!

“லவ்” ( Love ) திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !!!

சினிமா
RP Films சார்பில் R.P.பாலா தயாரித்து இயக்க, நடிகர் பரத், நடிகை வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “லவ்” ( Love ). மாறுபட்ட திரைக்கதையில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. இவ்விழாவினில் எடிட்டர் அஜய் மனோஜ் பேசியதாவது.. பரத் சார் படத்துல நானும் ஒரு பார்ட்டா இருக்குறது ரொம்ப சந்தோசம். தயாரிப்பாளர் இயக்குநர் R.P.பாலா மற்றும் பரத் அவர்களுக்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் பாருங்கள் நன்றி. ஒளிப்பதிவாளர் P G முத்தையா பேசியதாவது… மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். படமெடுக்கும் போதே நிறைய சுவாரஸ்யங்கள் இருந்தது. இறுதிக்காட்சிகளில் வாணி போஜன் அட்டகாசமாக நடித்துள்ளார். அவரை விட்டு கண்ணை எடுக்க முடியவில்லை. பரத்தும் நானும் ஃப்ரண்ட்ஸ், இந்தப்படத்தில் அவர் பி...
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி. செளத்ரி வழங்கும் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் டிசம்பர் 9,2022-ல் வெளியாகும் ‘வரலாறு முக்கியம்’ படத்திற்கு 300 ஸ்கிரீன்ஸ் ஒதுக்கப்பட்டுள்ளது

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி. செளத்ரி வழங்கும் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் டிசம்பர் 9,2022-ல் வெளியாகும் ‘வரலாறு முக்கியம்’ படத்திற்கு 300 ஸ்கிரீன்ஸ் ஒதுக்கப்பட்டுள்ளது

சினிமா
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி. செளத்ரி புரொடக்‌ஷனின் 'வரலாறு முக்கியம்' திரைப்படம்தான் தற்போது இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட்டிங்கில் பேசுபொருளாக உள்ளது. இளைஞர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் டிசம்பர் 9, 2022-ல் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது மேலும் படத்திற்கு 300 ஸ்கிரீன்ஸ் ஒதுக்கப்பட்டுள்ளது.  படத்தின் பாடல்கள் கேரளத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளரான ஷான் ரஹ்மான் ('ஜிமிக்கி கம்மல்' பாடல் புகழ்) இசையமைத்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள படத்தின் ட்ரைய்லர் பார்வையாளர்களை ஈர்த்து, படம் குறித்தான எதிர்ப்பார்பையும் அதிகரித்துள்ளது. மேலும் 100% எண்டர்டெயினராக இருக்கும் என்ற உத்திரவாதத்தையும் ட்ரைய்லர் கொடுத்துள்ளது. கமர்ஷியல் மற்றும் பக்கத்து வீட்டு பையன் போன்ற கதாபாத்திரங்களை நடிகர் ஜீவா தேர்ந்தெடுத்து நடிக்கும் போது அந்தப் படங்கள் அவருக்கு வெற்றியையே தந்துள்ளன.  அந்த வ...
தமிழின் முதல் சினிமாடிக் ஐயப்பன் பாடல் “ஆருயிர் ஐயப்பா” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழின் முதல் சினிமாடிக் ஐயப்பன் பாடல் “ஆருயிர் ஐயப்பா” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஆன்மீகம், சினிமா
தமிழில் எத்தனையோ ஐயப்பன் பற்றிய பக்திப் பாடல்கள் வந்துள்ளன.‌ ஆனால் முதல் முறையாக மிகப் பிரமாண்டமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டு முதல் சினிமாடிக் ஐயப்பன் பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது ஆருயிர் ஐயப்பா ஆல்பம் பாடல். இந்த பாடலை ஸ்ரீ விஷ்ணு தயாரித்து இயக்கியுள்ளதோடு நடித்தும் இருக்கிறார். மேலும் இவருடன் இணைந்து வசந்த் பாடலை எழுதியுள்ளார். போடா போடி, பாரிஜாதம் உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ள இசை அமைப்பாளர் தரண் இந்த பாடலுக்கு இசை அமைத்துள்ளார். விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் சாம் விஷால் மற்றும் முத்துச்சிற்பி இருவரும் பாடியுள்ளதோடு நடித்தும் உள்ளனர். பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு ஏராளமான குழந்தைகள் மற்றும் நடனக் கலைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலுக்கு நடன இயக்குனர் அசோக்ராஜா நடனம் அமைத்துள்ளார். ஐயப்பனின் புகழ் பாடும் இந்த ஆருயிர் ஐயப்பா ஆல்பம் பாடலின் ஃபர்ஸ்ட் ல...
அமீரின் உயிர் தமிழுக்கு படத்தை வெளியிடும் சுரேஷ் காமாட்சி

அமீரின் உயிர் தமிழுக்கு படத்தை வெளியிடும் சுரேஷ் காமாட்சி

சினிமா
மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஜீவி-2 படத்தை தயாரித்து வெளியிட்ட சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்ஷன் நிறுவனம் தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ‘ஏழுகடல் ஏழுமலை’ மற்றும் நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ராஜாகிளி ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ என்கிற படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளார் சுரேஷ் காமாட்சி. மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் அவரே இந்த படத்தை இயக்கியும் உள்ளார். இதற்கு முன்னதாக யூடியூப் விமர்சகர் இளமாறன் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ஆன்டி இண்டியன் படத்தை ஆதம்பாவா தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமீர், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அ...
செல்வராகவன் – நட்டி கலக்கும் ‘பகாசூரன்’ டிரைலர் வெளியீடு

செல்வராகவன் – நட்டி கலக்கும் ‘பகாசூரன்’ டிரைலர் வெளியீடு

சினிமா
‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G இவர், ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் அடுத்ததாக தயாரித்து இயக்கும் படம் ‘பகாசூரன்’. இந்தப் படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். ‘ ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல்ஜெயந்த், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைக்க, ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்திற்கு எஸ்.தேவராஜ் எடிட்டிங் செய்ய, கலை இயக்குனராக எஸ்.கே பணியாற்றுகிறார். மிரட்டல் செல்வா சண்டை பயிற்சி செ...
ரசிகர்களுக்கு ‘இரட்டை’ விருந்தளிக்கும் ஸ்ருதிஹாசன்

ரசிகர்களுக்கு ‘இரட்டை’ விருந்தளிக்கும் ஸ்ருதிஹாசன்

சினிமா
'உலகநாயகன்' கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசனின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'வால்டேர் வீரய்யா' மற்றும் 'வீரசிம்ஹா ரெட்டி' என இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவிருக்கிறது. இணைய தலைமுறையினரின் கையடக்க கணினி முதல் அவர்கள் பணியாற்றும் மடிக்கணினி வரை டிஜிட்டல் திரை நாயகியாக காட்சியளிக்கும் நடிகையான ஸ்ருதிஹாசன், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் முன்னணி நட்சத்திர நடிகையும் ஆவார். மில்லியன் கணக்கிலான மக்களை தன் சமூக வலைதள பக்கங்களின் பின் தொடர்பாளர்களாக கொண்டிருக்கும் இவர், தன்னை பற்றிய செய்திகளையும், தான் உணர்ந்த உணர்வுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நேர்மையானவர். இதற்கு சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்ட காணொளிகளும், எண்ணங்களும் சாட்சி. இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் த...
ஜுனியர் எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவாகாவுள்ள பெயரிடப்படாத திரைப்படத்தின் பூஜை இன்று துவங்கியது !!! கிரைம் திரில்லர் படமாக உருவாகவுள்ளது.

ஜுனியர் எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவாகாவுள்ள பெயரிடப்படாத திரைப்படத்தின் பூஜை இன்று துவங்கியது !!! கிரைம் திரில்லர் படமாக உருவாகவுள்ளது.

சினிமா
Third Eye Creations சார்பில் MD விஜய் தயாரிப்பில், கிரிஷா குரூப் ஜீனியர் எம்.ஜி.ஆர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, இயக்குநர் தமிழ் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம், “Production No. #2” இன்று இனிதே பூஜையுடன் துவங்கியது. எம்.ஜி.ஆரின் தோட்டமான சென்னை ராமவரம் தோட்டத்தில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள இப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் ஜீனியர் எம்.ஜி.ஆர், நடிகர் ஆனந்த்பாபு, இயக்குநர் மோகன் ஜி, சந்தோஷ் பிரதாப், விஜய் டிவி புகழ், உதயா, சிலுமிசம் சிவா, வையாபுரி, இயக்குநர் தமிழ், , பிக்பாஸ் டேனியல் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர். பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் கிரிஷா குரூப் நாயகியாக நடிக்கிறார் அறிமுக இயக்குநர் தமிழ் தியாகராஜன் இயக்குகிறார். முக்கிய வேடத்...
50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைக்கும் பிரசாந்த் வர்மாவின் பான் இந்திய திரைப்படமான ‘ஹனு-மேன்’ டீசர்

50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைக்கும் பிரசாந்த் வர்மாவின் பான் இந்திய திரைப்படமான ‘ஹனு-மேன்’ டீசர்

சினிமா
படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி வரும் பான் இந்திய திரைப்படமான ' ஹனு-மேன்' படத்தின் டீசர் வெளியாகி பெரும் சாதனையை படைத்திருக்கிறது. படைப்பாற்றல் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட அசல் இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படம் 'ஹனு-மேன்'. இளம் நட்சத்திரம் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படம், பான் இந்திய திரைப்படமாக தயாராகி இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் தமிழ் உள்ளிட்ட ஏனைய இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டது.‌ படத்தின் டீசர் தேசம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. டீசரில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சிகளும் வசீகரத்துடன் இருந்தது. டீசரில் ஹனு-மேனின் அறிமுகம் அனைவரையும் கவர்ந்தது. இதற்காக இயக்குநர் பிரசாத் வர்மாவிற்கு பிரத்யேகமான பார...
‘காஃபி வித் காதல்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ உலக டிஜிட்டல் பிரீமியரை ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது

‘காஃபி வித் காதல்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ உலக டிஜிட்டல் பிரீமியரை ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது

சினிமா
இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ‘காபி வித் காதல்’ திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. குஷ்பு, ஏ.சி.எஸ். அருண்குமார் மற்றும் ஏ.சி.சண்முகம் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு, தமிழில் ரொமான்ஸ் காமெடி திரைப்படமாக உருவான “காபி வித் காதல்” திரைப்படத்தை சுந்தர் சி எழுதி இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோருடன் மாள்விகா ஷர்மா, அமிர்தா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா சண்முகநாதன் மற்றும் திவ்யதர்சினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். டிசம்பர் 9 ஆம் தேதி டிஜிட்டலில் வெளியாகவுள்ள ரொமான்ஸ் காமெடி திரைப்படமான இந்த ‘காஃபி வித் காதல்’ ஒரு அருமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும். ஸ்ரீகாந்த் [மியூசிக் டீச்சர்], ஜீவா [ஐடி] மற்றும் ஜெய் [ பிஸினஸ்மேன்] ஆகிய 3...
மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து கலா பிரதர்ஷினி நடத்திய இசை மேதை பத்மஸ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா

மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து கலா பிரதர்ஷினி நடத்திய இசை மேதை பத்மஸ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா

செய்திகள்
மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் கலா பிரதர்ஷினி சார்பாக இசை மேதை பத்மஸ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா சென்னையில் ஞாயிறு மாலை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கலைமாமணி பார்வதி ரவி கண்டசாலா சிறப்பாக செய்திருந்தார். சென்னை மியூசிக் அகாடெமியில் நடைபெற்ற இந்நிகழ்வை முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு துவக்கி வைத்தார். கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் இந்த நூற்றாண்டின் சிறந்த இசையமைப்பாளர் என்பதில் சந்தேகமில்லை என்று நிகழ்ச்சியில் பேசிய வெங்கையா நாயுடு கூறினார். "கண்டசாலா அவரது இசையால் இன்னும் வாழ்கிறார். இந்திய இளைஞர்கள் அவரது வாழ்க்கையைப் படிக்க வேண்டும். இந்த விழாவில் அவரது பாடல்களைக் கேட்டதும் என் குழந்தைப் பருவ ஞாபகங்கள் வந்து விட்டன. எந்த சந்தேகமும் வேண்டாம் இந்த நூற்றாண்டின் இசை மேதை கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ். பல தலைமுறையினர் அவரின...