Saturday, May 2

’செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’- திரை விமர்சனம்

தேவி பிரசாத் ஷெட்டி இயக்கத்தில், சீதாராம் பென்சி கேஸ் நம்பர் 18 மற்றும் கேஸ் ஆஃப் கொண்டனா என்னும் பட பாகங்களின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள படம் ’செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’.

உடுப்பி பகுதியில் காவல்துறை அதிகாரியாக இருப்பவர் கதையின் நாயகன் விஜய் ராகவேந்திரா,அந்தப் பகுதியில் பலர் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள், கொடூரமான முறையில் நடத்தப்பட்ட இந்த கொலைகளை செய்திருப்பது ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று உடற்கூறாய்வு பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது .மேலும் கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் குறிப்பிட்ட வயதினைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள் .இந்தக் கொலைகளை செய்பவர் யார் ? எதற்காக இந்த கொலைகள் செய்யப்படுகின்றன ?இதன் பின்னணி என்ன? இவைகளை கண்டறிய கதையின் நாயகன், காவல்துறை அதிகாரி விஜயராகவேந்திரா களமிறங்குகிறார். அவரால் கொலையாளியை பிடிக்க முடிந்ததா ?அதன் பின் நடந்தது என்ன? இந்த கொலைகளுக்கான காரணமும் பின்னணியும் என்ன? என்பதை விறுவிறுப்பாக சொல்கிறது ’செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’ படத்தின் மீதி கதை .

இந்தப் படத்தில் கதையின் நாயகனாக இன்ஸ்பெக்டர் சீதாராம் என்னும் கதாபாத்திரத்தில் விஜய ராகவேந்திரா நடித்துள்ளார், தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு முற்றிலும் பொருந்தக் கூடிய வகையில் நேர்த்தியான நடிப்பை இவர் படம் முழுவதும் வெளிப்படுத்தி உள்ளார். மேலும் கோபாலகிருஷ்ணதேஷ் பாண்டே ,உஷா பண்டாரி போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் மிகை இல்லா நடிப்பை நிறைவாக கொடுத்து நன்கு நடித்துள்ளார்கள்.

கதைக்கும் ,காட்சிகளுக்கும் பொருத்தமாக சிறப்பான கேமரா கோணங்களையும் ஒளி அமைப்பினையும் நேர்த்தியான முறையில் அமைத்து ரசிகர்களை படத்தோடு ஒன்றி போகச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஹேமந்த் ,அதேபோல இசையமைப்பாளர் நவநீத் சாமியின் பின்னணி இசை படம் பார்க்கும் ரசிகர்களை கதையோட்டத்துடன் ஒன்றி பயணிக்க வைத்துள்ளது .

விறுவிறுப்பான திரை கதையுடன், எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் கதைக்களத்தினை எடுத்துக்கொண்டு, அதனை சிறப்பான முறையில் படமாக்கி உள்ளார் இயக்குனர் தேவி பிரசாத் ஷெட்டி .

மொத்தத்தில் ’செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’ ,புலனாய்வு திரில்லர் கதை ரசிகர்களுக்கு, ஒரு சிறப்பான திரை விருந்து.

Spread the love