எஸ்.சாம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் யோலோபடத்தில் தேவ், தேவிகா, பிரேம்குமார், படவா கோபி, விஜே நிக்கி, சுபாஷினி கண்ணன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சகீஷனா சேவியர் இசை அமைத்திருக்கிறார். கதை -ராம்ஸ் முருகன்.ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி,
யோலோ என்ற யூடியூப் சேனலை நடத்திக் கொண்டு வரும் தேவும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தேவிகாவும் கதையின் மைய கதாபாத்திரங்கள் , படவா கோபியின் மகள் தேவிகா. இவரை பெண் பார்ப்பதற்காக விஜே நிக்கியின் குடும்பம் தேவிகா வீட்டிற்கு வருகிறார்கள் தேவிகாவை பார்த்த நிக்கியின் சகோதரி, உங்களுக்குதான் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதே, என்று கூறுவதை கேட்ட தேவிகா வீட்டினருக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது மேலும் நிக்கியின் சகோதரி, தேவ் என்பவரோடு தேவிகாவுக்கு திருமணம் ஆனதோடு ஹனிமூனுக்கு கூட வந்திருந்தார்கள் என்றெல்லாம் சொல்ல தேவிகாவிற்கு இது போல தனக்கு திருமணம் நடந்ததாக நினைவே இல்லை. தங்களுக்கே தெரியாமல் எப்படி இந்த நிகழ்வு நடந்ததது என தேவும் ,தேவிகாவும் குழப்பமும் அதிர்ச்சியும் அடைகிறார்கள். உண்மையிலேயே இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றதா ? இல்லையா? என்பது தான் இந்த படத்தினுடைய மீதி கதை.
நாயகன் தேவ், நாயகி தேவிகா தற்கால இளம் தலை முறையினரை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களில் அளவாக நடித்துள்ளார்கள் மற்றும் விஜே நிக்கி,பிரேம்குமார், படவா கோபி, சுபாஷினி கண்ணன் என் பலரும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவின்றி நடித்துள்ளார்கள் இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர் இசையில் அமைந்துள்ள பாடல்கள் இளம் ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ளது .ஒளிப்பதிவாளர் சூரஜ் நல்லுசாமி, இயக்குனரின் எண்ணங்களுக்கு ஏற்ப காட்சிகளை அமைப்பதில் தன் பங்குக்கு உறுதுணையாக இருந்துள்ளார். ரொமான்டிக் காமெடி களத்தில் இன்றைய இளம் தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படமாக சாம் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
மொத்தத்தில் யோலோ -ரொமான்டிக் காமெடி படம்.
