Tuesday, May 26

Author: admin

கெத்து தினேஷ் நடிப்பில், “கருப்பு பல்சர்” திரைப்படம் ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகிறது !!

கெத்து தினேஷ் நடிப்பில், “கருப்பு பல்சர்” திரைப்படம் ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகிறது !!

சினிமா
கெத்து தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் “கருப்பு பல்சர்” ஜனவரி 30 திரையில் !! Yasho Entertainment சார்பில், Dr. சத்யா முரளி கிருஷ்ணன் தயாரிப்பில், கெத்து தினேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில், கமர்ஷியல் கொண்டாட்மாக உருவாகியுள்ள “கருப்பு பல்சர்” திரைப்படம், ஜனவரி 30 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டைக் அறிவிக்கும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். மேலும் அவர்களோடு இணைந்து தமிழர் நன்நாள் பொங்கலை வெகு விமரிசையாக கொண்டாடினர். படத்தின் களமும் பொங்கலையும் ஜல்லிக்கட்டு மதுரையும் மையமாக கொண்டிருப்பதால் இந்த கொண்டாட்டம் படக்குழுவை பெரிதும் உற்சாகப்படுத்தியது. பிரபல இயக்குநர் எம் ராஜேஷ் அவர்களிடம் உதவி இயக்குநராகவும், அவரது படங்களில் திரைக்கதையிலும் பணியாற்றிய முரளி கிரிஷ் இப்படத்தில் இயக்குநராக...
*ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம்!*

*ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம்!*

சினிமா
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் ஜப்பானில் ஜனவரி 16 அன்று ‘புஷ்பா குன்ரின்’ என்ற பெயரில் வெளியாகிறது. ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘புஷ்பா 2: தி ரூல்’ தற்போது ஜப்பானிலும் வெளியாக தயாராக உள்ளது. இந்திய பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த இந்த படம் இந்திய ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டமாக மாறியது. படத்தின் தொடக்கத்தில் புஷ்பாவின் அறிமுக சண்டைக்காட்சி ஜப்பானில் படமாக்கப்பட்டது மட்டுமல்லாது, அதில் அல்லு அர்ஜுன் ஜப்பானிய மொழியிலும் சரளமாக வசனம் பேசும்படியும் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ஜனவரி 16ஆம் தேதி ஜப்பானில் படம் வெளியாகவுள்ள நிலையில், குடும்பத்துடன் டோக்கியோ சென்றுள்ள நடிகர் அல்லு அர்ஜூன் தனது ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படத்தை புரமோட் செய்து வருகிறார். டோக்கியோ நகரத்தின் அழகிய ஸ்கைலைன் இடம்பெற்ற புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ இன்...
*ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் (Icon Star Allu Arjun) × லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) கூட்டணியில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) வழங்கும் பிரம்மாண்ட மெகா திரைப்படம் !!*

*ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் (Icon Star Allu Arjun) × லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) கூட்டணியில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) வழங்கும் பிரம்மாண்ட மெகா திரைப்படம் !!*

சினிமா
*ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் (Icon Star Allu Arjun) × லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) கூட்டணியில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) வழங்கும் பிரம்மாண்ட மெகா திரைப்படம் !!* இந்திய சினிமாவில் சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் பிரம்மாண்டமான திரைப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்கள் ஒன்றிணையும் இந்த கனவு கூட்டணி, ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான திரையனுபவத்தை வழங்கும் என பெரும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. பவர்ஃபுல் வீடியோவுடன் இந்தப் பிரம்மாண்டமான திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் ( Mythri Movie Makers)  நிறுவனம் பன்னி வாஸ் ( Bunny Vas )  உடன் இணைந்து தயாரிக்கு...
*’திரெளபதி2’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!*

*’திரெளபதி2’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!*

சினிமா
*’திரெளபதி2’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!* நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த 'திரௌபதி 2' திரைப்படம் 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை திரையில் பிரம்மாண்டமாக கொண்டுவரவுள்ளது.  இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று ஆக்‌ஷன் கதையான ’திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். பலமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது.    நிகழ்வில் பேசிய நடிகர் YG மகேந்திரன், "இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிறியது என்றாலும் கதை கேட்ட போதே வைப் நன்றாக இருந்தது. படத்தின் பாடல்களையும் ட்ரைலரையும் தற்பொழுது பார்க்கும் பொழுது மோகன் படத்தை அடுத்த லெவலுக்கு...
*“வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு  விழா !!*

*“வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு  விழா !!*

சினிமா
*“வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு  விழா !!* ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக உலகமெங்கும் ஜனவரி 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று  பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் *கலை இயக்குநர் கிரண் பேசியதாவது..,* எனக்கு பிடித்த இயக்குநர் நலன், அவரது இரண்டாவது படத்தில் என்னை நடிக்க வைத்தார் அவர் இப்படத்தில் ஆர்ட் டைரக்டராக வேலை செய்யச் சொன்னார். இந்தக்கதை கேட்ட போது எப்படி இப்படத்தில் கார்த்தி நடிக்கப்போகிறார் என்று தான் தோன்றியது. நான் ரஜினி ரசிகன்,  என் அம்மா எம் ஜி ஆர் ரசிகர். ஷீட்டிங்கில் கார்த்...
எழுத்தாளர் இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ நூல் வெளியீடு & அறிமுக விழா

எழுத்தாளர் இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ நூல் வெளியீடு & அறிமுக விழா

இலக்கியம், சினிமா
எழுத்தாளர் இரா. சரவணன் எழுதிய 'சங்காரம்' நூல் வெளியீடு & அறிமுக விழா 'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே', 'நந்தன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், எழுத்தாளருமான இரா. சரவணன் எழுதிய 'சங்காரம்' எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் எழுத்தாளரும், பத்திரிக்கையாளரும், பதிப்பாளருமான நக்கீரன் கோபால் , மக்களவை உறுப்பினரும், இலக்கியவாதியுமான திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், 'ஆனந்த விகடன்' ஆசிரியர் முருகன், 'ஜூனியர் விகடன்' ஆசிரியர் கலைச்செல்வன், கவிஞர் வெயில், நடிகர்கள் சசிகுமார், சூரி, திருமதி கலா சின்னதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஜூனியர் விகடன் எனும் வார இதழில் ஐம்பது வாரத்திற்கும் மேலாக எழுதப்பட்டு, வாசகர்களிடம் பேராதரவை பெற்ற  தொடர்.. தற்போது' சங்காரம்' எனும் நூலாக தயாராகி இருக்கிறது.‌ வன்முறையும், ...
*கவிஞர், இயக்குனர் சீனு ராமசாமியின் கவிதை நூல் வெளியீடு*

*கவிஞர், இயக்குனர் சீனு ராமசாமியின் கவிதை நூல் வெளியீடு*

இலக்கியம், கல்வி
*கவிஞர், இயக்குனர் சீனு ராமசாமியின் கவிதை நூல் வெளியீடு* திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பொங்கல் தின விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கவிஞரும் இயக்குனருமான சீனு ராமசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இயக்குநர் சீனு ராமசாமி எழுதியுள்ள நிலத்தவள் என்னும் கவிதை நூல் இவ்விழாவில் வெளியிடப்பட்டது. நூலை கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ், சே‌.ச. வெளியிட, கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. பெற்றுக் கொண்டார். கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம. ஆரோக்கியசாமி சேவியர், இணை முதல்வர் முனைவர் த.குமார், ஆசிரியர் சங்கத் தலைவர் முனைவர் டோம்னிக், அலுவலக சங்கத் தலைவர் திரு இளங்கோ சேவியர் ஜோதி, முனைவர் விமல் ஜெரால்டு, முனைவர் ஜான் கென்னடி, மாணவர் பேரவைத் தலைவர் ஆசிக் டோனி உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்....
*நடிகர் ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா*

*நடிகர் ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா*

சினிமா
*நடிகர் ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா* *கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணை தயாரிப்பில் நடிகர் ஜீவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.* இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பப்லு அஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந...
’தி ராஜா சாப்’ -திரை விமர்சனம்

’தி ராஜா சாப்’ -திரை விமர்சனம்

சினிமா
பெற்றோர் இன்றி பாட்டியின் பராமரிப்பில் வளர்க்கப்படும் ராஜுவிற்கு(பிரபாஸ் ), தன் பாட்டி கங்கம்மா தான் சகலமும் ஞாபக மறதியுடன் இருக்கும் பாட்டி கங்காவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பாக வீட்டை விட்டும் தன்னை விட்டும் பிரிந்து சென்ற கணவர் கனகராஜ் மட்டும் மறக்காமல் நினைவில் இருக்கிறார் ,தன்னுடைய கணவர் என்றாவது ஒருநாள் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுடன் கங்கம்மா காத்திருக்கிறார் ,தன்னை ஆசையுடன் வளர்த்த பாட்டிக்காக ,அவரது விருப்பத்திற்கு இணங்க ,தனது தாத்தாவை தேடி பிரபாஸ் கிளம்புகிறார், அப்படி சென்ற இடத்தில் நிதி அகர்வால் மாளவிகா போன்றவர்களை சந்திக்கிறார்,பின்பு தனது தாத்தாவை தேடி ஒரு பாழடைந்த அரண்மனைக்கு செல்கிறார். சமுத்திரகனியும் அவரை தேடி வருகிறார் இதற்குப் பின் பிரபாஸால் தன்னுடைய தாத்தாவை கண்டுபிடிக்க முடிந்ததா?ராஜாவின் தாத்தா எப்படிப்பட்டவர் ?சமுத்திரகனி அவரை தேடி எதற்கு வருகிறார் இது போன்ற வினா...
பராசக்தி -திரை விமர்சனம்

பராசக்தி -திரை விமர்சனம்

சினிமா
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்து மறைந்த மன்னர்களையும், வரலாற்றுச் சம்பவங்களையும் நாம் இப்பொழுது படித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றுதான், அதற்கு முற்றிலும் பொருந்தக்கூடிய, ஏன்?அதை விட முக்கியமானது, ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பு,நமது தகப்பனும், பாட்டனும் வாழ்ந்த காலத்தில், நம்முடைய மொழி சந்தித்த பிரச்சனைகளையும் ,அதற்காக குரல் கொடுத்த தியாக உள்ளங்களின் வாழ்வியல் சம்பவங்களையும்,அந்த சூழலையும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது இன்னமும் முக்கியமானது .அத்தகைய ஒரு காலகட்டத்தினை மறு உருவாக்கம் செய்துள்ளதே இந்த பராசக்தி திரைப்படமாகும். புறநானூறு என்கிற படைக்கு தலைவனா இருக்கிறார் சிவகார்த்திகேயன்,1965 இல் நடக்கிற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஒரு ரயிலை மறிச்சு ,மக்களை எல்லாம் இறக்கி விட்டுட்டு அந்த  ட்ரெயினை கொளுத்துறாங்க, இந்த சம்பவத்தில் அதே வண்டியில் வரும் போலீஸ் ஆபீஸரான ரவிமோகனுக...