பெற்றோர் இன்றி பாட்டியின் பராமரிப்பில் வளர்க்கப்படும் ராஜுவிற்கு(பிரபாஸ் ), தன் பாட்டி கங்கம்மா தான் சகலமும் ஞாபக மறதியுடன் இருக்கும் பாட்டி கங்காவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பாக வீட்டை விட்டும் தன்னை விட்டும் பிரிந்து சென்ற கணவர் கனகராஜ் மட்டும் மறக்காமல் நினைவில் இருக்கிறார் ,தன்னுடைய கணவர் என்றாவது ஒருநாள் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுடன் கங்கம்மா காத்திருக்கிறார் ,தன்னை ஆசையுடன் வளர்த்த பாட்டிக்காக ,அவரது விருப்பத்திற்கு இணங்க ,தனது தாத்தாவை தேடி பிரபாஸ் கிளம்புகிறார், அப்படி சென்ற இடத்தில் நிதி அகர்வால் மாளவிகா போன்றவர்களை சந்திக்கிறார்,பின்பு தனது தாத்தாவை தேடி ஒரு பாழடைந்த அரண்மனைக்கு செல்கிறார். சமுத்திரகனியும் அவரை தேடி வருகிறார் இதற்குப் பின் பிரபாஸால் தன்னுடைய தாத்தாவை கண்டுபிடிக்க முடிந்ததா?ராஜாவின் தாத்தா எப்படிப்பட்டவர் ?சமுத்திரகனி அவரை தேடி எதற்கு வருகிறார் இது போன்ற வினாக்களுக்கு விடையை செல்கிறது ராஜா சாப் படத்தின் மீதி கதை .

ராஜா என்னும் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார் புதிய பரிமாணத்தில் காமெடி, நடனம் ,நடிப்பு என தன்னுடைய ரசிகர்களை மட்டும் அல்லாமல் பிற திரை ரசிகர்களையும் அவர் தன் சிறப்பான நடிப்பால் கவர்ந்துள்ளார் .மாளவிகா மோகனன் ,நிதி அகர்வால் ,ரித்திக் குமார் என்னும் நாயகிகள் மூன்று பேரும் கிளாமர் கலந்து கதாபாத்திரத்தில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் ரசிகர்களை ஏமாற்றாமல் நடித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர பாட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெரினா வஹாப். கங்கராஜா வாக நடித்துள்ள சமுத்திரகனி ,கனகராஜாக நடித்துள்ள சஞ்சய்தத் என பலரும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.

தமனின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது கதையோடு பயணிக்கும் பின்னணி இசையும் நன்றாவே உள்ளது. ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் சிறப்பான முறையில் படமாக்கி ,ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார் .காமெடி, சென்டிமென்ட், நகைச்சுவை ,ஆக்சன் என எல்லா கமர்சியல் அம்சங்களும் நிறைந்த ஜனரஞ்சகமான படமாக, ஃபேண்டஸி ஹாரர் காமெடி ஜானலில் இந்த படத்தை இயக்குனர் மாருதி உருவாக்கியுள்ளார். படத்தின் முதல் பாதியை விட இரண்டாவது பாதி விறுவிறுப்பாகவும் ,படத்தின் முடிவில் நிறைவான கிளைமாக்ஸ் உடனும், ரசிகர்களுக்கு முழு நீள பொழுதுபோக்கை தரக்கூடிய படமாக இந்த ராஜா சாப் அமைந்துள்ளது
