கருப்பு பல்சர்-திரைவிமர்சனம்
தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் “கருப்பு பல்சர்”
சுத்திகரிக்கப்பட்ட நீரை விற்பனை செய்து வரும் கதையின் நாயகன் அட்டகத்தி தினேஷ் நாயகி ரேஷ்மாவை மேட்ரிமோனியல் மூலமாக சந்தித்து பின்பு காதலிக்கிறார்கள். ரேஷ்மாவிடம் தினேஷ் தன்னிடம் கருப்பு பல்சர் ஒன்று இருப்பதாக பொய் ஒன்றை கூறி விடுகிறார், அந்த பைக்கில் தினேஷுடன் பயணிக்க வேண்டும் என்ற ரேஷ்மாவின் ஆசையினை நிறைவேற்றுவதற்காக பழைய கருப்பு பல்சர் ஒன்றையும் தினேஷ் விலைக்கு வாங்குகிறார். ஆசையாக பைக் வாங்கிய பிறகு தினேஷின் வாழ்க்கையில் பலவிதமான அமானுஷ்ய சம்பவங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக நடக்கின்றன அந்த பைக்கின் பின்புலக் கதை என்ன?அதன் பின் தினேஷ் வாழ்வில் நடந்த சம்பவங்கள் என்ன? என்பதே படத்தின் மீதி கதை.
படத்துக்கு படம் தன்னுடைய நடிப்பில் நல்லதொரு ஏற்றத்துடன் பயணிக்கும் தினேஷ் ,இந்த படத்தில் நாயகனாக நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்,லப்பர்...









