Saturday, June 20

” தடை அதை உடை “- திரை விமர்சனம்

இயக்குனர் அறிவழகன் முருகேசனின் இயக்கத்தில் அங்காடித்தெரு மகேஷ் திருக்குறள் குணா பாபு, கே எம் பாரிவள்ளல் ,திருவாரூர் கணேஷ் ,மகாதீர் முஹம்மத் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ” தடை அதை உடை “. இந்தப் படத்திற்கு இசை சாய் சுந்தர், பாடல்கள் அறிவழகன் ,ஒளிப்பதிவு தங்கபாண்டியன், சோட்டா மணிகண்டன்.

 

செங்கல் சூளையில் வேலை பாத்துட்டு இருக்குற மூணு சாதாரண இளைஞர்கள் youtube மூலமா வீடியோக்களை வெளியிட்டு வராங்க அதோட திரைப்பட உலகத்திலும் தங்களுடைய வெற்றி பயணித்தை தொடரணும் நினைக்கிற அவங்களுடைய முதல் முயற்சி தோல்வியில முடியுது, அவங்க சொல்ற கதையாக இந்த படத்தினுடைய கதை செல்கிறது முதல் கதையில ஆதிக்க வர்க்கத்தினர் உடைய தடைகளை எல்லாம் மீறி கொத்தடிமையாய் இருந்த ஒருத்தன் தன்னோட போராட்டத்தின் மூலமாக தன் வம்சத்தை கல்விக்கு திருப்பிட முயலும் கதை சொல்லப்படுகிறது .அடுத்து youtube ல காணொளி போடும் ஒரு பெண் தன்னுடைய பிரச்சனையை குறிப்பிட அதற்கு வரும் ஆபாச பின்னோட்டகளால் மனம் உடைந்து அந்தப் பெண் எடுக்கும் முடிவு ,அதற்கு காரணமானவர்களை அந்த பெண்ணின் தம்பி தேடுவது என்று செல்கிறது. இந்தப் படத்தில் அங்காடித் தெரு படத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்திருந்த மகேஷ் சில வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது அவரும் தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தில் நன்கு நடித்துள்ளார் .மேலும் குணா பாபு ,கே. எம் .பாரிவள்ளல் திருவாரூர் கணேஷ் ,மகாதீர் முகமது உட்பட படத்தில் நடித்திருக்கும் ஏனைய கலைஞர்களும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் நன்கு நடித்துள்ளார்கள்.

இந்த படத்துக்கு இசை சாய் சுந்தர் படத்தின் பாடல்களை இயக்குனர் அறிவழகன் எழுதி இருக்கிறார். ஒளிப்பதிவாளர்கள் தங்கபாண்டியன் மற்றும் தோட்டா மணிகண்டன் இருவரும் கிராமிய காட்சிகளை அழகாக பதிவு செய்துள்ளார்கள் .தொலைத்தொடர்புக்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் ,விழிப்புணர்வுக்கும் பயன்படக்கூடிய சமூக ஊடகங்கள் ,அதற்கு மாற்றாக சமூக வாழ்வியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்யும் எதிர்மறை மாற்றங்கள் மக்களை எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பதை காட்சி வழியில் படமாக்கி உள்ளார் இயக்குனர் அறிவழகன் முருகேசன்.

மொத்தத்தில் ” தடை அதை உடை ” இன்றைய சமூக வாழ்வியலை பிரதிபலிக்கும் கண்ணாடி.

Spread the love