ஸ்ரீராம் கார்த்திக்,மனுஷா ஸ்ரீ, பாத்திமா, வைசாலி ரவிச்சந்திரன், ஜீவா ரவி , லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி மற்றும் பலர் நடிப்பில் ,ரமேஷ் இளங்காமணி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மெஸன்ஜர்.
கதையின் நாயகனாக நடித்துள்ள ஸ்ரீராம் கார்த்திக் தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வியால், தன் வாழ்க்கையே முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் தற்கொலைக்கு முயலும் பொழுது, அவரது மெசன்ஜருக்கு ஒரு மெசேஜ் வருகிறது ,அதில் தற்கொலைக்கு நீங்கள் முயற்சிக்க வேண்டாம் உங்களை நேசிக்க பலர் இருப்பார்கள் என்ற செய்தி வருகிறது . அந்த மெசேஜ் செய்தியை பார்த்தவுடன் தன்னுடைய தற்கொலை செய்யும் எண்ணத்தினை நாயகன் மாற்றிக் கொள்கிறார் ,அதற்குப் பிறகு தனக்கு இந்த தகவலை அனுப்பிய பெண் யார் ?என்று தேட ஆரம்பிக்கிறார் அப்படி அவர் தேடும்பொழுது அவருக்கு அந்த செய்தியை அனுப்பி இருந்த பெண் ஏற்கனவே ஒரு விபத்தில் இறந்து போயிருந்தது தெரிந்து ,ஆச்சரியமும் ,அதிர்ச்சியும் அடைகிறார். உயிருடனே இல்லாத ஒருவர் எப்படி மற்றவர்களுக்கு தகவலை அனுப்ப முடியும் ?அந்த தகவலை நாயகனுக்கு யார் தான் அனுப்பி இருப்பார்கள் என்பதை படத்தின் மீதி கதை சொல்லுகிறது .

சக்திவேல் என்னும் கதாபாத்திரத்தில் இளம் நாயகனாக நடித்திருக்க கூடிய ஸ்ரீராம் கார்த்திக் சமகால இளைஞர்களை பிரதிபலிக்கும் விதமாக தன்னுடைய கதாபாத்திரத்தில் நன்கு நடித்துள்ளார். அதேபோல நாயகிகளாக தீப்திகுமாரி என்னும் கதாபாத்திரத்தில் மனுஷா ஸ்ரீயும், ஆனந்தி என்னும் கதாபாத்திரத்தில் பாத்திமாவும் நன்கு நடித்துள்ளார்கள் .மேலும் வைசாலி ரவிச்சந்திரன், ஜீவா ரவி ,காவல்துறை அதிகாரியாக பிரபாகர் என்னும் கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன் மற்றும் பிரியதர்ஷினி போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை நன்கு வெளிப்படுத்தி உள்ளார்கள். இந்தப் படத்திற்கு இசை அபூபக்கர்.M,.இவரது இசையில் பாடல்கள் கேட்கும் படியாகவும் , காட்சிகளுக்கு ஏற்ப பின்னணி இசையும் நன்கு அமைக்கப்பட்டுள்ளது .இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் பாலகணேசன், தன்னுடைய பங்களிப்பில் படத்தின் காட்சிகளை அழகாக பதிவு செய்துள்ளார். காதல் கதையில் ஒரு புது ட்விஸ்டை இணைத்து அதில் இருந்து நீளும் திரைக்கதை காட்சிகளைக் கொண்டு படத்தை நன்கு உருவாக்கியுள்ளார் இயக்குனர் ரமேஷ் இளங்காமணி.
மொத்தத்தில் இந்த மெஸன்ஜர்-நவீன தவல் தொழில் நுட்பட காதல்.
