இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் லட்சுமி கிரியேஷன் சார்பில் உருவாகி இருக்கும் படம் தமிழ் குடிமகன்.
இறந்தவர்களின் உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்யும் தொழிலை கொண்டிருக்கும் கதையின் நாயகனாய் சின்னச்சாமி(சேரன்). நன்கு படித்துள்ள சின்னச்சாமிக்கு வாழ்வில் முன்னேற வேண்டும் என்பது இலட்சிய கனவாக இருந்தது ,அவருடைய தங்கை டாக்டருக்கு படித்து வரும் நிலையில் ஊர் தலைவராக இருக்கும் லாலின் மகனை காதலிக்கிறார். இந்த விபரத்தை லால் குடும்பத்தினர் அறிந்ததால் சின்னச்சாமியின் தங்கையை கடுமையாகத் தாக்குகிறார்கள். இதற்க்குப்பின் இனிமேல் யாருக்கும் இறுதிச்சடங்கு செய்யவே கூடாது என்று சின்னசாமி முடிவெடுக்கிறார். இந்தவேளையில் லாலின் தந்தை உயிரிழந்து விடுகிறார். சின்னசாமி மீண்டும் இறுதிச்சடங்கை செய்தாரா? இல்லையா? இதற்க்குப்பின் அவரது நிலைமை என்னவானது ? என்னும் கேள்விகளுக்கு விடை சொல்லுகிறது மீதி படத்தின் கதை.

கதையின் நாயகன் சின்னசாமியாக சேரன் அவருக்கே உரித்தான கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்துள்ளார்,மேலும் ஸ்ரீ பிரியங்கா,லால், எஸ்ஏசந்திரசேகர் ,வேலராமமூர்த்தி,ரவிமரியா என பலரும் தங்களது கதாபாத்திரங்களின் தனித்தன்மைக்கு ஏற்ற வகையில் நிறைவாக நடித்துள்ளார்கள்.

எவ்வளவுதான் வளர்ச்சிப்பாதையில் சமூகம் சென்று கொண்டுந்தாலும் இன்னமும் கிராமபுறங்களில் கடைப்பிட்டுவரும் சமூக வாழ்வியல் பிரச்சனைகளை பற்றி பேசும் கதைகளத்தை எடுத்துக்கொண்டு அதை சிறந்த திரைக்கதையாக்கி இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார்.
ராஜேஷ்யாதவின் ஒளிப்பதிவும் சாம் சி.எஸ் இசையும் சமூக வாழ்வியல் கதைக்கு ஏற்ற காட்சி வடிவ ங்களுக்கு தேவையான பங்களிப்பை கொடுத்துள்ளன.
நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் சமூக வாழ்வியல் சூழல்களை பேசும் இந்த படத்தை அனைத்து குடிமக ன்களும் குடும்பத்துடன் பார்க்கலாம்.
