அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் டிமான்டி காலனி படத்தின் இரண்டாவது பாகத்தில் ,அருள் நிதி, பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
படத்தின் முதல் பாகத்தின் டைட்டிலை மட்டும் வைத்துக்கொண்டு, முதல் பாகத்தின் கதைக்கு சற்றும் தொடர்பும், எந்தவொரு இணைப்பும் இல்லாமல் இருக்கும், பல இரண்டாம் பாகப் படங்களுக்கு மத்தியில் முதல் பாக கதை முற்று பெற்ற இடத்திலேயிருந்து இரண்டாம் பாக கதையினை துவங்கியிருக்கும் முயற்சியானது, தொடர்ச்சியாக டிமாண்டி காலனி படம் பார்க்கும் ரசிகர்களை பெரிதும் கவரும். இந்த தொடர் கதை யுக்திக்காக இயக்குனரை மனதார பாராட்டலாம்.படத்தின் முதலாவது பாகத்தில் சீனிவாசன் (அருள்நிதி) இறப்பது போல் நிறைவு பெற்று இருக்கும் ஆனால், இந்த பாகத்தில் கோமா நிலையில் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். அவருடைய சகோதரர் ரகு (மற்றுமொரு அருள்நிதி) தந்தையின் சொத்துகளை தான் மட்டுமே அடைய வேண்டும் என்று போராடுகிறார். டெர்பி(பிரியா பவானி ஷங்கர்)தனது காதல் கணவரை பிரிந்த துக்கம் தாங்க முடியாமல் துறவி ஒருவரின் உதவியுடன் அவரின் ஆன்மாவுடன் பேச முயற்சிக்கிறார்,.இதன் பின்னர் நடக்கும் பல விறுவிறுப்பான அமானுஷ்ய சம்பவங்களை சொல்லுகிறது டிமான்டி காலனி 2-ன் மீதி கதை.
கதையின் நாயகன் அருள் நிதி, கொடுக்கப்பட்ட மாறுபட்ட கதாபாத்திரங்களின் தன்மைக்கு ஏற்றவண்ணம் சிறப்பாக இந்த படத்தில் நடித்துள்ளார் .பிரியா பவானி ஷங்கருக்கு பல பரிமாணங்களில் நடிப்பை வெளிப்படுத்த கிடைக்கும் வாய்ப்பை அவரும் நன்கு பயன்படுத்தியுள்ளார் என்றே சொல்லலாம் . மேலும் முத்துக்குமார், அருண் பாண்டியன், அர்ச்சனா ரவிச்சந்திரன், மீனாட்சி கோவிந்தராஜன் போன்றவர்களின் நடிப்பும் நன்கு உள்ளது.
ஹாரர் திரில்லர் படங்களுக்கு தேவையான தொழில் நுட்ப பலத்தினை சரியான அளவீட்டில் ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன், படத்தொகுப்பாளர் குமரேஷ், இசையமைப்பாளர் சாம் சி.எஸின் கூட்டணி சிறப்பான முறையில் கொடுத்துள்ளது.
திகிலான கதைக்கு ஏற்ற ,விறுவிறுப்பான பல திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையுடன் , தேர்ந்த தொழில் நுட்பகலைஞர்களின் துணையோடு சிறந்த,பொழுதுபோக்கு படமாக இயக்குனர் அஜய் ஞானமுத்து இப்படத்தை நன்கு உருவாக்கியுள்ளார்
இந்த டிமான்டி காலனி 2.படம் ஹாரர் திரில்லர் பட ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு திரைவிருந்து.
