Sunday, April 26

தெய்வ மச்சான்- விமர்சனம்

`தபால்’ கார்த்தியாக (விமல்) . அவரது தங்கையாக குங்குமத்தேன் கதாபாத்திரத்தில் அனிதாசம்பத் நடித்துள்ளார்கள் தங்கையின் திருமணத்துக்காக பல வரன்கள் பார்த்தாலும் எதுவும் கை கூடாத நிலைஉள்ளது இந்த நிலையில் கார்த்தியின் கனவில்`சாட்டைக்காரன் வந்து , யார் இறக்க போகிறார்கள் என்பதை முன் கூட்டியே சொல்கிறான். சாட்டைக்காரனின் கூற்றுபடியே இழப்புகளும் ஏற்படுகின்றன, இப்படிப்பட்ட நிலையில் தங்கைக்குப் பிடித்த வரனும் கிடைப்பதால் , அண்ணன் `தபால்’ கார்த்தி மகிழ்ச்சி அடைகிறார், ஆனால் திருமணத்திற்கு முன்பு கார்த்தியின் கனவில் வரும் சாட்டைக்காரன் உன் தங்கையின் கணவனும் இறந்து விடுவான்” என்று கூறுகிறான். இதைக் கேட்டு அதிர்ச்சியுறும் கார்த்தி, தங்கையின் கணவனான தன் மச்சானை காப்பாற்ற முயல்கிறான் ,அதில் கார்த்திக்கு வெற்றி கிடைத்ததா ? என்ற வினாவிற்கு விடை சொல்லுகிறது படத்தின் மீதிகதை

யதார்த்தனமான கிராமத்து இளைஞனை பிரதிபலி க்கும் கதாபாத்திரத்தில் நன்கு பொருந்திப்போகும் விமல் இந்த படத்திலும் கார்த்தி பாத்திரத்தில் கதையுடன் ஒன்றி நடித்துள்ளார்.

தங்கை குங்குமத்தேன் என்னும் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனிதா சம்பத் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தியுள்ளார்,நடிகர் பால சரவணனின் காமெடிகாட்சிகள் ரசிக்கும்படி உள்ளன, பாண்டியராஜன் ,ஆடுகளம் நரேன்,வத்சன் வீரமணி, வேல ராம மூர்த்தி ,தீபா போன்றோரின் பாத்திரபடைப்புகளும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் அமைந்த்துள்ளன .

இயல்பான கதைக்கு, பொருத்தமான நடிகர்களை கொண்டு ,செண்டிமெண்ட் கலந்த காமெடி படத்தை இயக்குநர் மார்டின் நிர்மல் குமார் கொடுத்துள்ளார், கேமில் ஜே அலெக்ஸின் கேமரா கதைக்கு ஏற்ற காட்சிகளை சிறப்புற பதிவு செய்துள்ளது ,இசையமைப்பாளர் அஜீஸின் பின்னணி இசை கதையின் ஓட்டத்துக்கு ,உதவியுள்ளது


கிராமத்து பின்னணியிலான நகைச்சுவை திரைப்படமான தெய்வமச்சான் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படம் .

Spread the love