Saturday, May 30

செய்திகள்

தமிழ்நாடு தேக்வாண்டோ சங்கத்திற்கான(2023 – 27) புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல்  சென்னையில் நடைபெற்றது.

தமிழ்நாடு தேக்வாண்டோ சங்கத்திற்கான(2023 – 27) புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல்  சென்னையில் நடைபெற்றது.

செய்திகள்
தமிழ்நாடு தேக்வாண்டோ சங்கத்திற்கான(2023 - 27) புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல்  சென்னையில் நடைபெற்றது. இத்தேர்தலில் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவருமான Dr. ஐசரி K. கணேஷ் அவர்கள் தமிழ்நாடு தேக்வாண்டோ சங்கத்தின் தலைவராக மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். Dr. ஐசரி K. கணேஷ் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற இந்திய தேக்வாண்டோ சம்மேளன தேர்தலில் அமோக வெற்றி பெற்று தலைவராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. செயலாளராக திரு. P. செல்வமணி, பொருளாளராக திரு S. கோதண்டன், துணைத் தலைவர்களாக திரு. P. வினோஜ், திரு. P. சேகர், திரு. K. மனோகர் மற்றும் Dr. C. சரவணன், இணைச் செயலாளர்களாக திரு. S. ஜோதி பாசு, திரு. J. எஸ்ரா ஸ்டாலின், திரு. B. ஜெயராம் மற்றும் திரு. B.S. சுதர்சன் மற்றும் செயற்குழு உறுப்பினராக 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்....
திரு.டத்தோ ராதாரவி தலைமையில் DBL – DUBBING BADMINTON LEAGUE இறகுப்பந்து போட்டி  நடத்தப்பட்டது.

திரு.டத்தோ ராதாரவி தலைமையில் DBL – DUBBING BADMINTON LEAGUE இறகுப்பந்து போட்டி நடத்தப்பட்டது.

சினிமா, விளையாட்டு
டப்பிங் யூனியன் உறுப்பினர்களுக்காக அதன் தலைவர் திரு.டத்தோ ராதாரவி தலைமையில் DBL - DUBBING BADMINTON LEAGUE என்ற இறகுப்பந்து போட்டி ஆண்,பெண் இரு பாலருக்கும் இணைத்து நடத்தப்பட்டது. "ஜெயா டிவி" யின் பின்புறம் உள்ள "ரக்கஸ் ஹெர்லி" என்ற இறகுப்பந்து அரங்கில் ஏப்ரல் 16ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றது. சம்மேளனம் மற்றும் திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி மற்றும் இசையமைப்பாளர் தீனா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். திரு.ஆர்.கே.செல்வமணி அவர்கள் பேசுகையில்,இந்த போட்டியை பார்த்தபோது தன்னையும் மறந்து ஆட்டத்தில் லயித்துப்போனதாக கூறினார். இதன் சிறப்பம்சம் என்னவென்றால்,வெற்றி தோல்வியைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொருவரும் மற்றவர்களை ஊக்குவித்ததை பார்ப்பதற்கு கண்கொள்ளாகாட்சியாக இருந்தது.இதுதான் யூனியன் என்பது...ஒரு குடும்பமாக இருப்பது. இன்று ந...
சர்வதேச ஓவிய கண்காட்சியில் ஷாம்லியின் படைப்புகள்

சர்வதேச ஓவிய கண்காட்சியில் ஷாம்லியின் படைப்புகள்

சினிமா, செய்திகள்
ஓவிய கலைஞராக மிளிரும் ஷாம்லி சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதை பெற்றவர் பேபி ஷாம்லி. இவர் குமரியான பிறகு கதையின் நாயகியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். பொருத்தமான வாய்ப்பிற்காக காத்திருக்கும் காலகட்டத்தில்.., ஓவியம் மற்றும் நாட்டிய கலைகளை ஆர்வத்துடன் கற்கத் தொடங்கினார். ஓவிய துறையில் மேதையான ஏ. வி. இளங்கோவின் வழிகாட்டலுடன் ஓவியம் வரைவதில் கவனம் செலுத்தினார். இந்தத் துறையில் இடைவிடாத பயிற்சி, விடாமுயற்சி, அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பு.. ஆகியவற்றின் காரணமாக அவர் ஏராளமான ஓவிய படைப்புகளை உருவாக்கத் தொடங்கினார். அவர் வரைந்த ஓவிய படைப்புகளை தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் வண்ணமயமான சட்டகத்தில் பொருத்தி காட்சிப்படுத்தியிருக்கிறார். ‌ இவரது படைப்புகளில் இடம்பெறும் பெண்கள்.. தங்களின் சுதந்திரமான ஆன்மாவை வெளிப்படுத்துவது போல் உள்ளன. சில படைப்புகளில் பெண்கள் தங்களுடைய சமூக...
 கிரிக்கெட்டர் அஷ்வின் தலைமையில் ’22 யார்ட்ஸ்’ அமைப்பு கிரிக்கெட்டிற்கான சிறப்பு கோடைக்கால பயிற்சி முகாமை ஏப்ரல் 14 அன்று ஆரம்பிக்க உள்ளது

 கிரிக்கெட்டர் அஷ்வின் தலைமையில் ’22 யார்ட்ஸ்’ அமைப்பு கிரிக்கெட்டிற்கான சிறப்பு கோடைக்கால பயிற்சி முகாமை ஏப்ரல் 14 அன்று ஆரம்பிக்க உள்ளது

விளையாட்டு
கிரிக்கெட் ரசிகரான ஆதித்யா ரவி தன்னுடைய 16-வது வயதில் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற ஆசையில் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். 2014 இல் R. அஷ்வின் வழிகாட்டியாக இருந்த ஜென் நெக்ஸ்ட் கிரிக்கெட் இன்ஸ்டிடியூட் மூலம் ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்டார். மேலும், லீக் அணியில் திறமையை வெளிப்படுத்த அவருக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டது. இருப்பினும், அடுத்தடுத்த ஆண்டுகளில்,வாய்ப்புகள் மற்றும் எங்கு அணுகுவது என்பது அவருக்குத் தெரியாததால், லீக் அணியில் சேருவது அவருக்கு மிகவும் கடினமாகவே இருந்தது. இதுபோன்ற இக்கட்டான காலக்கட்டத்தில் தோன்றிய யோசனையே '22 யார்ட்ஸ்'. தமிழ்நாடு முழுவதும் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை அங்கீகரிக்கும் வகையிலும், திறமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் தளமாகவும் '22 யார்ட்ஸ்' அமைந்தது. பின்பு தங்கள் வீரர்களின் திறமைகளை சுவைக்க மேட்ச் எக்...
தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட மாண்புமிகு முதல்வர் திரு. M.K. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட மாண்புமிகு முதல்வர் திரு. M.K. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி

சினிமா, செய்திகள்
சென்னை அருகே அதிநவீன திரைப்பட நகரம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் விரைவில் அமைக்கப்படும் என்று தமிழ் சினிமாவிற்கு சிறப்பான ஒரு செய்தியை நேற்று சட்டசபையில் வெளியிட்ட மாண்புமிகு முதலமைச்சர் திரு.M.K. ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.M.P. சாமிநாதன் அவர்களுக்கும் முதலில் எங்களின் மனமார்ந்த நன்றி. தமிழக ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை 2020-21-ம் ஆண்டுகளுக்கு பிறகு, வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. 2022-ல் 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தமிழில் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளன. இந்த வளர்ச்சி மேலும் தொடர்ந்து தமிழ் சினிமா துறை ரூபாய் 5,000 கோடிக்கு மேல் வியாபாரம் செய்யும் துறையாக விரைவில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தைகைய வளர்ச்சியை எட்ட முட்டுக்கட்டையாக இருப்பது, தமிழ் நாட்டில் ஸ்டூடியோக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே. த...
சென்னை தி.நகரில் உள்ள முக்தா சில்க்ஸின் 27வது ஸ்டோர்

சென்னை தி.நகரில் உள்ள முக்தா சில்க்ஸின் 27வது ஸ்டோர்

செய்திகள்
நடிகை பிரியங்கா மோகன் மற்றும் நகைச்சுவை நடிகர் புகழ் ஆகியோர் முக்தா சில்க்ஸின் 27வது ஸ்டோரை திறந்து வைத்தனர் சென்னை தி.நகரில் உள்ள முக்தா சில்க்ஸின் 27வது ஸ்டோரை தமிழ் சினிமாவின் மிக அழகான மற்றும் சென்ஷேனலான நடிகை பிரியங்கா மோகன் மற்றும் நகைச்சுவை நடிகர் புகழ் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் முக்தா ஆர்ட் ஸ்டுடியோவின் நிறுவனர் மற்றும் தலைமை வடிவமைப்பாளரான சஷி வங்கபள்ளி கலந்து கொண்டார். கிட்டத்தட்ட 15,000 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் பட்டுப் புடவைகளும் அந்த சூழலும் ஒரு தெய்வீகத் தன்மையை கொண்டுள்ளதாக நடிகை பிரியங்கா மற்றும் நகைச்சுவை நடிகர் புகழ் இருவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பார்வையாளர்களும் சிறப்பு அழைப்பாளர்களும் செட்டிநாட்டின் ஸ்பரிசத்துடன் கூடிய அந்த சூழலின் அழகியல் உணர்வைக் கண்டு பரவசமடைந்தனர். நடிகை பிரியங்கா மோகன் தனது ஒளிரும் புன்...
குழந்தைகளுக்கான பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

குழந்தைகளுக்கான பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

செய்திகள்
சென்னை வி ஆர் சென்னை மாலில் துளிர் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ரோட்டரி கிளப் ஆப் சென்னை celebrities, ரோட்டரி டிஸ்ட்ரிக் 3232, , பாபுரோ solutions புராஜக்ட் இந்தியா டிரஸ்ட் அமைப்பு மற்றும் சென்னை, டி நகரிலுள்ள ஶ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி, ஆகிய அமைப்புகள் இணைந்து சென்னை VR மஹாலில் குழந்தைகளுக்கான பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது... இந்த நிகழ்ச்சியில் திரைப்படப் பாடகர் பிரசன்னா, வானொலி தொகுப்பாளர் தீனா, நடிகர் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்...600க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ஷசுன் கல்லூரி ஊடகவியல் துறை மாணவிகள், குழந்தை பாலியல் குற்றங்களை எவ்வாறு தடுப்பதென்று மைமின் மூலம் நடித்து நடனம் ஆடி காண்பித்தனர...
இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவங்கியுள்ள புதிய ஸ்டூடியோ, ‘குட்லக் ஸ்டூடியோஸ்’ !!

இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவங்கியுள்ள புதிய ஸ்டூடியோ, ‘குட்லக் ஸ்டூடியோஸ்’ !!

சினிமா, செய்திகள்
நடிகர் சூர்யா துவங்கி வைத்த, இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரியின் புதிய ஸ்டூடியோ, 'குட்லக் ஸ்டூடியோஸ்'  திரைத்துறை பணிகளான ரெக்கார்டிங், டப்பிங், எடிட்டிங் பணிகளை நவீன வசதிகளுடன் திறம்பட செய்யும் புதிய குட்லக் ஸ்டூடியோவை இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவங்கியுள்ளனர். தமிழின் பெரும் அரசியல் ஆளுமைகள் கலந்துகொண்ட இவ்விழாவில் நடிகர் சூர்யா, தமிழ் நாடு சட்டப்பேரவை தலைவர் மாண்புமிகு எம்.அப்பாவு எம்.எல் .ஏ தமிழக அமைச்சர்கள் மாண்புமிகு அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் mla, மாண்புமிகு பி.கே.சேகர் பாபு mla,மாண்புமிகு டி.மனோ தங்கராஜ் mla, டைரக்டர் ஹரி தந்தை கோபாலகிருஷ்ணன், ஹரியின் மாமனார் நடிகர் விஜயகுமார், ரிய ஹரி, ஶ்ரீதேவி விஜயகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள். புதிய ஸ்டூடியோவை தமிழ் நாடு சட்டப்பேரவை தலைவர் மாண்புமிகு எம். அப்பாவு எம்.எல்.ஏ தலைமையில் நடிகர் சூர்யா ரிப்பன் கட் செய்து துவக்கி வைத்...
கீழடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் இன்று பார்வையிட்டனர்.

கீழடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் இன்று பார்வையிட்டனர்.

செய்திகள்
கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர் கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டது. உலகதரத்தில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் கடந்த மார்ச் மாதம் ஆறாம் தேதி அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று முதல் பார்வையாளர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழர்களின் தொல்லியல் வரலாற்றை பறைசாற்றும் இந்த அருங்காட்சியகத்தை தமிழ் மொழிக்கு இலக்கிய சேவையை இடையறாது செய்து வரும் நடிகர் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி சிவக்குமார், நடிகர் சூர்யா, திருமதி ஜோதிகா சூர்யா, அவர்களின் வாரிசுகளான தேவ் மற்றும் தியா ஆகியோர்களும் பார்வையிட்டனர். இவர்களுடன் மதுரை மக்களவைத் தொகுதி ...
சென்னை மாநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் “Drive Against Drugs” போதைப் பொருளுக்கெதிரான விழிப்புணர்வு ஆவணப்படங்களுக்கான போட்டி மற்றும் சிறுவர்களுக்கான காமிக்ஸ் வெளியீட்டு விழா !!

சென்னை மாநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் “Drive Against Drugs” போதைப் பொருளுக்கெதிரான விழிப்புணர்வு ஆவணப்படங்களுக்கான போட்டி மற்றும் சிறுவர்களுக்கான காமிக்ஸ் வெளியீட்டு விழா !!

செய்திகள்
இன்றைய நம் சமூகத்தில் போதைப்பொருள் மிக முக்கியமான பிரச்சனையாக மாறியுள்ளது. சமூகத்தில் போதைப்பொருளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாணவர்களுக்காக பிரத்தியேகமாகக் குறும்பட போட்டி சென்னை மாநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது. இப்போட்டியைத் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார். 300க்கும் அதிகமான மாணவர்களின் குறும்படங்களிலிருந்து, நான்கு படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது மற்றும் பரிசு வழங்கப்பட்டது. மேலும் சிறுவர்களுக்கான காமிக்ஸ் வெளியிடப்பட்டது. இவ்விழாவினில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். மேலும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் அன்பு, காவல் துறை இணை ஆணையர் ரம்யா பாரதி மற்றும் திரு பவன்குமார் ரெட்டி ஐபிஎஸ் ஆகியோர் கலந்து கொ...