Saturday, May 30

செய்திகள்

கிரியா லாவின் ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ நிகழ்வின் தொடக்க நிகழ்வு!

கிரியா லாவின் ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ நிகழ்வின் தொடக்க நிகழ்வு!

செய்திகள்
கிரியா லாவின் ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ நிகழ்வின் தொடக்க நிகழ்வு!கிரியா லா மார்ச் 1, 2025 அன்று ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ என்ற தலைப்பில் அரை நாள் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. வரவிருக்கும் வருடாந்திர கூட்டத்திற்கு முன்னோடியாக இந்த நிகழ்வு சர்வதேச டிரேட்மார்க் சங்கத்தால் நடத்தப்பட்டது. இது மே 17 முதல் மே 21, 2025 வரை கலிபோர்னியாவின் சான் டியாகோவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இசைத் துறையைச் சேர்ந்த பல்வேறு வல்லுநர்கள் கலந்து கொண்டனர். டர்ன்கே மியூசிக் மற்றும் பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் அதுல் சுரமணி மற்றும் சரிகம இந்தியா லிமிடெட் முன்னாள் துணைத் தலைவர் சஞ்சய் வாத்வா, ஏபி இன்டர்நேஷனலின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் ஜெ, தென்னிந்திய இசைக் கம்பெனிகள் சங்கத்தின் (SIMCA) செயலாளர் சுவாமிநாதன், தேசிய விருது பெற்ற கிளாசிக்கல் பி...
தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி! – ஷபீர் சாம்பியன் பட்டம் வென்றார்

தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி! – ஷபீர் சாம்பியன் பட்டம் வென்றார்

விளையாட்டு
சென்னையில் நடைபெற்ற முதல் மாநில அளவிலான தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி! முதலாவது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள ’லெட்ஸ் பவுல்’ டென்பின் பவுலிங் விளையாட்டு மையத்தில் நடைபெற்று வந்த நிலையில், இதன் இறுதிப் போட்டி இன்று (பிப்ரவரி 26) ஆம் தேதி நடைபெற்றது. சிறந்த மூன்று விளையாட்டுகளின் அடிப்படையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஷபீர் தன்கோட் - விஷ்ணு.எம் மோதினார்கள். இதில், முதல் இரண்டு விளையாட்டுகளில் தலா ஒரு வெற்றியுடன் இருவரும் சமநிலையில் இருந்தனர். (162-173 & 212-201) மூன்றாவது விளையாட்டில், ஷபீர் தன்கோட், தன்னை எதிர்த்து போட்டியிட்ட விஷ்ணுவை 5 பின்கள் என்ற குறுகிய வித்தியாசத்தில் (180-175) வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வென்றார். முன்னதாக முதல் அரையிறுதியில் சிறந்த மூன்று விளையாட்டுகளின் அடிப்படையில் விளையாடிய விஷ்ணு, தன்னை எதிர்த்து ...
ஃபிக்கி (FICCI) ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வணிக மாநாடு (MEBC)–சவுத் கனெக்ட் 2025’-ஐ துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஃபிக்கி (FICCI) ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வணிக மாநாடு (MEBC)–சவுத் கனெக்ட் 2025’-ஐ துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

செய்திகள்
சென்னையில் ஃபிக்கி (FICCI) ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வணிக மாநாடு (MEBC)–சவுத் கனெக்ட் 2025’-ஐ துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் FICCI ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (தெற்கு) அமைப்பின் தலைவராக நடிகர் கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டார் சென்னையில்  நடைபெற்ற ‘ஃபிக்கி (FICCI) ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வணிக மாநாடு (MEBC)–சவுத் கனெக்ட் 2025’-ஐ தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின், நடிகர் மற்றும் இயக்குநர் கமல் ஹாசனுடன் இணைந்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் FICCI ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (தெற்கு) அமைப்பின் தலைவராக கமல் ஹாசன் அறிவிக்கப்பட்டார். உலகளாவிய பொழுதுபோக்கு சந்தையில் இந்தியாவின் இடத்தை வடிவமைப்பதில் பிராந்திய மொழிகள் திறன்வாய்ந்த சக்திகளாக உருவாகி வருவதையும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை பெரும் மாற்றத்திற்கு உள்ளாகி வருவதையும் கருத்தில் கொண்டு, இந...
கோரிக்கை விடுத்த கமல்ஹாசன், பரிசீலிப்பதாகச் சொன்ன துணை முதல்வர்

கோரிக்கை விடுத்த கமல்ஹாசன், பரிசீலிப்பதாகச் சொன்ன துணை முதல்வர்

சினிமா, செய்திகள்
கோரிக்கை விடுத்த கமல்ஹாசன், பரிசீலிப்பதாகச் சொன்ன துணை முதல்வர்இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) நடத்திய சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்குத்துறை மாநாடு (MEBC - South Connect) சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய திரு. கமல்ஹாசன், தொழிற்துறையினரின் கோரிக்கைகளுக்குச் செவி மடுக்கிற, அவற்றைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்கிற அரசாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது என்பதால், இந்த மேடையைப் பயன்படுத்திக்கொண்டு நான் சார்ந்திருக்கிற திரையுலகு சார்பாக ஒரு கோரிக்கை விடுக்கிறேன். மத்திய அரசின் ஜிஎஸ்டி போன்ற வரிகளால் திரைத்துறை அல்லற்படுகிறது. இத்துடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் சேரும்போது இரட்டை வரிவிதிப்பாகி விட...
‘ஃபிக்கி (FICCI) மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) – சவுத் கனெக்ட் 2025’ நிகழ்வை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார்.

‘ஃபிக்கி (FICCI) மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) – சவுத் கனெக்ட் 2025’ நிகழ்வை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார்.

செய்திகள்
தென்னிந்திய பொழுதுபோக்கு துறையின் மிகப்பெரிய நிகழ்வான 'ஃபிக்கி (FICCI) மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) - சவுத் கனெக்ட் 2025’ பிப்ரவரி 21-22 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார், கமல்ஹாசன் பங்கேற்கிறார் முன்னணி தேசிய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI), சென்னையில் மிகப்பெரிய அளவில் நடத்தவுள்ள 'ஃபிக்கி (FICCI) மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) - சவுத் கனெக்ட் 2025’ நிகழ்வை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார். தென்னிந்திய பொழுதுபோக்கு துறையின் மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படும் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சி பிப்ரவரி 21-22 தேதிகளில் சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடைபெற உள்ளது. துவக்க விழாவில் துணை முதல்வருடன் இந்நிகழ்வின் (MEBC)...
இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செயல்படும், புலம் பெயர்ந்தோர் பாதுகாப்பு அமைப்பின் (PoE) தமிழ்நாடு பிரிவு, நடத்தும் விழிப்புணர்வு நடை, சென்னை எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்றது.

இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செயல்படும், புலம் பெயர்ந்தோர் பாதுகாப்பு அமைப்பின் (PoE) தமிழ்நாடு பிரிவு, நடத்தும் விழிப்புணர்வு நடை, சென்னை எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்றது.

செய்திகள்
இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செயல்படும், புலம் பெயர்ந்தோர் பாதுகாப்பு அமைப்பின் (PoE) தமிழ்நாடு பிரிவு, நடத்தும் விழிப்புணர்வு நடை இன்று( பிப்.8) காலை 7.30 மணிக்கு சென்னை எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்றது.வெளிநாட்டில்  அதிக சம்பளத்துக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி மோசடிகள் தொடர்ந்து நடக்கின்றன. சட்ட விரோதமாக செயல்படும் சில முகவர்கள் இது போன்ற மோசடிகளில் ஈடுபடுகிறாரகள். இவர்கள் மீது,  மத்திய அரசின் புலம் பெயர்ந்தோர் நல அமைப்பு (PoE) நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் மோசடி பேர்வழிகளிடம் மக்கள் ஏமாந்துவிடாமல் இருக்க விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக, இன்று சென்னை எலியட்ஸ் கடற்கறையில் விழிப்புணர்வு நடை ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மாணவர்கள், வேலை தேடுபவர்கள், பொது மக்கள் என அனைவரும்  கலந்து கொண்டனர். நிகழ்வில் கிருஷ்ணமூர்த்தி, கமிஷனர், நான்...
தமிழ்நாடு வெளிவிவகார அமைச்சின் கீழ் உள்ள புலம்பெயர்ந்தோர் பாதுகாவலர் அமைப்பு (PoE), பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ குடியேற்றத்திற்கான வாக்கத்தானை (Walkathon) பிப்ரவரி 8, 2025 அன்று சென்னை எலியட்ஸ் கடற்கரையில் காலை 7:30 மணிக்கு முன்னெடுக்கிறது!

தமிழ்நாடு வெளிவிவகார அமைச்சின் கீழ் உள்ள புலம்பெயர்ந்தோர் பாதுகாவலர் அமைப்பு (PoE), பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ குடியேற்றத்திற்கான வாக்கத்தானை (Walkathon) பிப்ரவரி 8, 2025 அன்று சென்னை எலியட்ஸ் கடற்கரையில் காலை 7:30 மணிக்கு முன்னெடுக்கிறது!

செய்திகள்
தமிழ்நாடு வெளிவிவகார அமைச்சின் கீழ் உள்ள புலம்பெயர்ந்தோர் பாதுகாவலர் அமைப்பு (PoE), பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ குடியேற்றத்திற்கான வாக்கத்தானை (Walkathon) பிப்ரவரி 8, 2025 அன்று சென்னை எலியட்ஸ் கடற்கரையில் காலை 7:30 மணிக்கு முன்னெடுக்கிறது!வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மோசடி குறிப்பாக டேட்டா என்ட்ரி, சிஸ்டம் ஆபரேட்டர் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இதே போன்ற வேலைகளுக்கான மோசடிகள் போன்ற விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த வாக்கத்தான் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மோசடிகள் இதற்கு முன்பு பல இந்திய குடிமக்களை இணைய அடிமைத்தனம் மற்றும் சுரண்டலுக்கு இட்டுச் சென்றுள்ளது. PoE அலுவலகம் சட்டவிரோத முகவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற மோசடி திட்டங்களுக்கு பலியாகாமல் தனிநபர்களைப் பாதுகாக்க விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகிறது. இந்த வாக்கத்தான் தமிழ்நாடு முழுவதும் ஒரு மாத...
அப்போலோ மருத்துவமனைகளின் துணைத் தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவுவதாக அறிவித்தார்.

அப்போலோ மருத்துவமனைகளின் துணைத் தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவுவதாக அறிவித்தார்.

அழகும் ஆரோக்கியமும், செய்திகள்
அப்போலோ மருத்துவமனையின் துணைத் தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, பிதாபுரத்தில் மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை துவங்கி வைத்தார் . ஒரு புதிய சுகாதார முன்முயற்சியில், தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டியின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு, அப்போலோ மருத்துவமனையின் துணைத் தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, சமீபத்தில் பிதாமபுரத்தில் மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவுவதாக அறிவித்தார். இந்தப் புதிய முயற்சி, சுத்தம், சுகாதாரம், மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதன் மூலம் பெண்களுக்கான முன்னேற்றத்தையும் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது. இந்த அங்கன்வாடி பணிகள் முக்கியமான முதல் 1000 நாட்களுக்கு தாய் மற்றும் குழந்தை சுகாதாரத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது, மேலும் ஊட்டச்சத்து குறைபாட்டை பூஜ்ஜியமாக உறுதிப்பட...
குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.-அஜித் குமார்

குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.-அஜித் குமார்

சினிமா, செய்திகள்
குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்த மதிப்புமிக்க கெளரவத்திற்காக, மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி.  திரௌபதி முர்மு மற்றும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த அங்கீகாரம் தனிப்பட்ட முறையில் எனக்கானது மட்டுமல்ல. இதனை சாத்தியப்படுத்திய பலரது உழைப்பும் இதில் அடங்கும் என்பதை உணர்வேன். எனது மதிப்பிற்குரிய திரைத்துறையினர், திரைத்துறை முன்னோடிகள், என் நண்பர்கள் உட்ப அனைவருக்கும் எனது நன்றி. உங்கள் உத்வேகம், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு ஆகியவை எனது பயணத்தில் உறுதுணையாக இருந்ததோடு எனக்கு விருப்பமாக இருந்த மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த உதவியது....
நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த இளம் வயது உலக செஸ் சாம்பியன் குகேஷ்!

நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த இளம் வயது உலக செஸ் சாம்பியன் குகேஷ்!

சினிமா, செய்திகள்
இளம் வயது உலக செஸ் சாம்பியனான குகேஷ், நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். குகேஷுடன் அவரது குடும்பத்தினர், வேலம்மாள் கரஸ்பாண்டண்ட் வேல்மோகன் மற்றும் டெபுடி கரஸ்பாண்டண்ட் ஸ்ரீராம் ஆகியோரும் உடன் இருந்தனர். சிறுவயதிலிருந்தே நடிகர் சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய ரசிகரான குகேஷ் அவரிடமிருந்து மறக்க முடியாத பரிசாக ஒரு விலையுயர்ந்த வாட்ச் பெற்றார். குகேஷின் சாதனையை பாராட்டிய சிவகார்த்திகேயன், இது மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களுக்கான உத்வேகம் என்றார். மேலும், குகேஷின் இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாட கேக் வெட்டி சிறப்பித்தார் சிவகார்த்திகேயன். நம் தேசத்தை பெருமைப்படுத்தும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த உரையாடல் அமைந்தது....