சட்டமும் நீதியும்- இணைய தொடர் விமர்சனம்
பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் சரவணன் ,நம்ரிதா நடிப்பில் வெளியாகி உள்ள சட்டமும் நீதியும் இணைய தொடருக்கு, இசை விபின் பாஸ்கர்
வழக்கறிஞர் சரவணன் சாதாரணமான ஒரு நோட்டரியாக புகார்களை தட்டச்சு செய்து கொடுக்கும் பணியினை செய்து வருகிறார், அவரிடம் உதவியாளர் பணிக்கு சேர நம்ரிதா முயற்சி செய்கிறார். தன்னிடம் அவர் உதவியாளராக சேர்வதை விட வேறு ஒரு வழக்கறிஞரிடம் நம்ரிதா சேருவது நல்லது என சரவணன் நினைக்கிறார். இந்த சமயத்தில் குப்புசாமி என்பவர் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே தீக்குளித்து இறந்து போகிறார், இறந்து போன குப்புசாமிக்கு எப்படியாவது நீதியை பெற்றே தீர வேண்டும் என்று நினைக்கும் சரவணன், அதற்கான பொதுநல வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்கிறார். தீக்குளித்து உயிரிழந்த குப்புசாமியின் மகள் காணாமல் போய்விட்டதால், அது பற்றி காவல்துறையிடம் அவர் முறையிட்டிருந்தார், ஆனால் அது குறித்து காவல்துறையினர் எந்த வழக்கையும் ...









