*பிரைம் வீடியோவில் உலகளவில் ஆங்கிலம் அல்லாத இணைய தொடர்களில் இரண்டாம் இடத்தை பிடித்த வதந்தி சீசன் 2: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி- Vadhandhi; The Mystery of Mani*
மதுரையிலிருந்து சர்வதேச அரங்கத்திற்கு...! 'வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி' இணைய தொடர், ப்ரைம் வீடியோவில் உலகளவில் ஆங்கிலம் அல்லாத இணையத்தொடர்களில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது
ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று உலகளவில் வெளியாகி, இரண்டு வாரத்திற்குள் தமிழில் வெளியான அசல் சஸ்பென்ஸ் திரில்லர் இணைய தொடரான 'வதந்தி : தி மிஸ்டரி ஆஃப் மணி'- ப்ரைம் வீடியோவில் ஆங்கிலம் அல்லாத இணைய தொடர்களில் உலகளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அத்துடன் ஸ்கிரிப்டட் ( Scripted) வகை படைப்புகளில் உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தத் தொடரின் சாராம்சத்தை தக்க வைத்துக்கொண்டு, முற்றிலும் புதிய மர்மம் - நடிகர்கள்- மதுரை பின்னணியுடன் தொடங்கிய இந்த இணைய தொடரின் இரண்டாவது பாகம்.. இத்தகைய சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.
தமிழ் மொழியில் வெளியாகி தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டும், ஏனை...









