இனி அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை- ரசிகர்களை அசத்த வருகிறது, சீயான் விக்ரம் நடிப்பில் “மகான்” திரைப்படம் !
ஆக்ஷன் த்ரில்லர் ரசிகர்கள் மற்றும் ஆர்வமிகு திரைப்பட காதலர்கள், இனி அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை, ஏனெனில் ப்ரைம் வீடியோ, மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, சீயான் விக்ரம் நடித்த ‘மகான்’ படத்தை பிப்ரவரி 10 ஆம் தேதி திரையிடுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் ‘மகான்’, கன்னடத்தில் ‘மஹா புருஷா’ என்ற பெயரில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுதும் வெளியாகவுள்ளது. ரிலீஸுக்கு முன்னதாகவே எதிர்பார்ப்புகள் உச்சத்தில் இருக்கும் நிலையில், திரைப்படக் காதலர்கள் வெகுஜன ரசிகர்கள் ஆகியோருக்கு, இந்தப்படம் மிகச்சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை தரும் என்பதற்கான முக்கிய அம்சங்கள் உங்களுக்காக இங்கே..
நடிகர் சீயான் விக்ரம் நடிக்கும் 60 வது படம் : திரையுலகில் பல சிறந்த கதைகளை உருவாக்கியதற்காக புகழ் பெற்ற இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'மகான்' திரைப்படம் முன்னணி நட...









