ஆதிராஜன் இயக்கத்தில் இசைஞானியின் 1417வது படம்
ஆதிராஜன் இயக்கத்தில் பிரஜன் - மனிஷா யாதவ் நடிக்கும் "நினைவெல்லாம் நீயடா"! படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை யுவன்ஷங்கர் ராஜாஇன்று வெளியிட்டார்!!
இளையராஜாவின் மயக்கும் இசையில் 1417-வது படமாக உருவாகி வருகிறது "நினைவெல்லாம் நீயடா". இந்த படத்தை லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார் . சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வருகிறார்.இதில் கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். கதாநாயகியாக, வழக்கு எண் 18 /9, ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா, சண்டி முனி, ஒரு குப்பை கதை படங்களில் நடித்த மனிஷா யாதவ் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார். இளம் வயது நாயகன் நாயகியாக மாஸ், மாஸ்டர் பட புகழ் ரோகித்தும், அப்பா, அம்மா கணக்கு, ஆருத்ரா, வினோதய சித்தம் படங்களில் நடித்த யுவஸ்ரீயு...









