Tuesday, September 1

சினிமா

எளிய மனிதர்களின் வலியைப் பேசும் யதார்த்தப் படைப்பான  ‘ஆதார்’ படத்தின் பணிகள்  இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது

எளிய மனிதர்களின் வலியைப் பேசும் யதார்த்தப் படைப்பான ‘ஆதார்’ படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது

சினிமா
  நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகும் 'ஆதார்' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'ஆதார்'. இந்தப் படத்தில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், 'காலா' புகழ் திலீபன், 'பாகுபலி' புகழ் பிரபாகர் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க, இவர்களுடன் நடிகைகள் ரித்விகா, இனியா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ...
‘ஶ்ரீவல்லி’ வெற்றி பாடலின் பின்னால் இருக்கும் உண்மையான நாயகன் – இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் !

‘ஶ்ரீவல்லி’ வெற்றி பாடலின் பின்னால் இருக்கும் உண்மையான நாயகன் – இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் !

சினிமா
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், ஒவ்வொரு ஆல்பத்திலும், கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் தவற விடாமல் சார்ட்பஸ்டர் ட்யூன்களைத் தொடர்ந்து தருவதில் வல்லவர் என்பது அனைவரும் அறிந்ததே. தேவி ஸ்ரீ பிரசாத் எனும் ராக்ஸ்டார் டிஎஸ்பியின் சமீபத்திய ஆல்பமான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் ஸ்ரீவல்லி, ஓ போலேகா யா ஓ ஓ ஓ போலேகா மற்றும் சாமி சாமி ஆகிய பாடல்கள் இந்திய திரை இசை உலகையே பெரும் சலசலப்புக்கு உள்ளாக்கியது, சமூக வலை தளங்களில் இப்பாடல்கள் மில்லியன் கணக்கான ரீல்கள், பார்வைகள் மற்றும் விருப்பங்களை கடந்து சாதனைகள் படைத்து வருகிறது. தேவி ஶ்ரீ பிரசாத்தின் தொடர்ச்சியான வெற்றிகரமான ஆல்பங்கள், டி எஸ் பி எனும் பிராண்டாக அவருக்கென ஒரு தனித்த இடத்தை இந்திய அளவில் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் 'புஷ்பா - தி ரைஸ்' படத்தின் வெற்றிகரமான சார்ட்பஸ்டர் பாடல்கள், இந்திய இசை அரங்கில் மறுக்கமுடியாத வகையில் வெளியான ஒவ்வொரு மொ...
தமிழ் சினிமா கம்பெனி தயாரிக்கும் முதல் திரைப்படம்

தமிழ் சினிமா கம்பெனி தயாரிக்கும் முதல் திரைப்படம்

சினிமா
‘தமிழ் சினிமா கம்பெனி’ நல்ல கதைகளையும், திறமையான இயக்குநர்களையும் மட்டும் நம்பி அனைவரும் பாராட்டும் விதத்தில் கதைக்கு தேவையான பட்ஜெட்டில் படங்களைத் தயாரிக்க முடிவு செய்திருக்கிறது. தமிழ் சினிமா கம்பெனி தயாரிக்கப் போகும் படங்களுக்கான கதை கேட்கும் அறிவிப்பை சில மாதங்களுக்கு முன் கொடுத்திருந்தோம். மொத்தம் 349 பேர் கதை சொல்வதற்காகப் பதிவு செய்திருந்தனர். இதுவரை 52 பேர்களை வரவழைத்து கதைகளைக் கேட்டோம். கேட்டவற்றில் 11 கதைகள் சிறப்பாக இருந்தன. இந்த 11 கதைகளையும் அடுத்தடுத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் தயாரிக்க முடிவெடுத்துள்ளோம். தமிழ் சினிமா கம்பெனியின் முதல் படமாக அறிமுக இயக்குநர் டி.சரவணன் சொன்ன கதையை தயாரிக்கிறோம். அதற்கான அறிவிப்பு இன்று தமிழ் சினிமா கம்பெனி வளாகத்தில் நடைபெற்றது. திரைக்கதை, வசனம், லொக்கேசன், நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு ஆகியவை விரைவில் நடைபெ...
ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிருந்தா மாஸ்டர் இயக்கும் ‘ஹே சினாமிகா’ படத்தின் இளமை ததும்பும் டிரைலர் வெளியீடு

ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிருந்தா மாஸ்டர் இயக்கும் ‘ஹே சினாமிகா’ படத்தின் இளமை ததும்பும் டிரைலர் வெளியீடு

சினிமா
அனைத்து தென்னிந்திய மொழிகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பல்லாயிரக்கணக்கான திரைப்பாடல்களுக்கு நடனம் அமைத்து நாடு முழுவதும் இருக்கும் பிரபல கலைஞர்கள் மாஸ்டர் என்று பாசம் கலந்த மரியாதையுடன் அழைக்கும் பிருந்தா, ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் முதன்மை வேடங்களை ஏற்றுள்ளனர். குளோபல் ஒன் ஸ்டூடியோஸ் இணைத் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ மார்ச் 3, 2022 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முன்னோட்டம் (டிரைலர்) வெளியிடப்பட்டுள்ளது. உற்சாகமிக்க தனித்துவ இளைஞரான யாழன் (துல்கர்), அவரை காதலிக்கும் வானிலை விஞ்ஞானி மௌனா (அதிதி) ஆகியோரின் வாழ்க்கைக்குள் டிரைலர் நம்மை அழைத்துச் செல்கிறது. ஓரிரு வருடங்களுக்குப் பிறகு அவர்களது உறவில் என்ன நடக்கிறது, மலர்விழி (...
குதிரைவால்’ ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் – இயக்குநர் பா.இரஞ்சித்

குதிரைவால்’ ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் – இயக்குநர் பா.இரஞ்சித்

சினிமா
  பல கேள்விகளை கேட்கிற, எனக்குள் இருக்கும் பதில்களை பேசும் படங்களை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட ஆள் நான் - ’குதிரைவால்’ இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் பா.இரஞ்சித் பேச்சு இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதோடு, அந்நிறுவனத்தின் திரைப்படங்கள் மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், யாழி நிறுவனத்தின் விக்னேஷ் சுந்தரேஷனுடன், நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லினோனல் ஜேசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஜி.ராஜேஷ் குமார் எழுதியிருக்கிறார். கலையரசன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அஞ்சலி பாட்டீல் நாயகியாக நடித்திருக்கிறா...
 இறைவன் மிகப் பெரியவன் திரைப்பட துவக்க விழா!

 இறைவன் மிகப் பெரியவன் திரைப்பட துவக்க விழா!

சினிமா
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் கதையில், 9 ஆண்டுகள் கழித்து இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “இறைவன் மிகப்பெரியவன்”. JSM Pictures சார்பில் ஜாஃபர் இப்படத்தை தயாரிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் இப்படத்தின் துவக்கவிழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது இவ்விழாவினில் இயக்குநர் அமீர் பேசியதாவது… இது என்னுடைய விழா. பொதுவா ஒரு படம் வெறும் ஸ்கிரிப்டை வைத்து பூஜை போடுவோம். இந்த விழா அப்படியில்லை. இது ஒரு படத்தின் அறிமுக விழா. ஒரு புதிய தயாரிப்பாளர், இந்த காலத்தில் படம் செய்வதே கடினம் அதிலும் என்னை மாதிரி இயக்குநரை வைத்து படமெடுப்பது இன்னும் கடினம். அவருக்காக தான், அவரை அறிமுகப்படுத்தும் நோக்கம் தான் இந்தவிழா. பாரதிராஜா சார் படம் செய்யும் போதே நிறைய கதைகளை வெளியில் வாங்கி செய்வார் ஆனால் எல்லோரும் அவர் ...
“ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்” படம் 1 ஜூலை 2022 அன்று  உலகம் முழுதும் வெளியாகிறது

“ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்” படம் 1 ஜூலை 2022 அன்று உலகம் முழுதும் வெளியாகிறது

சினிமா
இந்திய திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் R மாதவன், முதல் முறையாக இயக்குநராக பணியாற்றியுள்ள “ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்” படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. நம்பமுடியாத வாழ்வினை வாழ்ந்த அறிவியலாளரின் கதையில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர், ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து, ரசிகர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளார் நடிகர் R மாதவன். “ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்” திரைப்படம் 1 ஆம் தேதி ஜூலை 2022 உலகம் முழுதும் வெளியாகிறது. இப்படம் ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கிலம் என பன்மொழிகளில் படமாக்கப்பட்டது, மேலும் கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. நடிகர் R மாதவன் இப்படத்தில் அறிவியலாளர் நம்பி நாரரயணனாக நடித்திருப்பதுடன், இப்படத்தை தயாரித்து , ...
“தி வாரியர்” படத்தில், விசில் மஹாலக்‌ஷ்மியாக கலக்கும், நடிகை கீர்த்தி ஷெட்டி !

“தி வாரியர்” படத்தில், விசில் மஹாலக்‌ஷ்மியாக கலக்கும், நடிகை கீர்த்தி ஷெட்டி !

சினிமா
காதலர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் “தி வாரியர்” படத்தில், கீர்த்தி ஷெட்டி தோற்றத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் கீர்த்தி ஷெட்டி, சர்ட் & ஜீன்ஸுடன் ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டிருக்கிறார். கீழே கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் தோன்றும் கதாப்பாத்திரத்தின் பெயரான விசில் மஹாலக்‌ஷ்மி எனும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான ராம் பொத்தினேனி உடைய தோற்றத்தின் ஃபர்ஸ்ட் லுக், மற்றும் டைட்டில் லுக் போன்றே இந்த ஃபர்ஸ்ட் லுக்கும், ரசிகர்களிடம் நேர்மறை அதிர்வை பரப்புவதாக அமைந்துள்ளது. திரையரங்குகளில் படம் வெளியாகும் போது ரசிகர்களுக்கு கோலாகலமான ஆக்சன் விருந்து காத்திருப்பது உறுதியாகியுள்ளது. Srinivasaa Silver Screen பேனர் சார்பில் ஸ்ரீநிவாசா சித்தூரி பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க, பவன் குமார் இப்...
நிவின் பாலி நடிப்பில் “மாஹாவீர்யார்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக்

நிவின் பாலி நடிப்பில் “மாஹாவீர்யார்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக்

சினிமா
புகழ்பெற்ற எழுத்தாளர் M.முகுந்தன் அவர்களின் கதையிலிருந்து தழுவி உருவாக்கப்பட்ட, அப்ரித் ஷைனி அவர்களின் “மஹாவீர்யார்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. நிவின் பாலி மற்றும் ஆஷிஃப் அலி முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படம், ஃபேண்டஸி, டைம் ட்ராவல், சட்ட நுணுக்கங்கள், சட்ட புத்தகங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான பேரனுபவமாக இருக்குமென்று திரைப்படக்குழு உறுதியளித்துள்ளது. Pauly Jr Pictures நிறுவனம் சார்பில் நிவின் பாலி மற்றும் Indian Movie Makers சார்பில் PS சம்னாஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். கொச்சியில் நடைபெற்ற விழாவினில் எழுத்தாளர் M.முகுந்தன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார். திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குநர் அப்ரித் ஷைனி, ஆஷிஃப் அலி, ஷான்வி ஶ்ரீவஸ்தவா மற...
அஷ்டகர்மா திரை விமர்சனம்

அஷ்டகர்மா திரை விமர்சனம்

சினிமா
  மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ் சார்பில் C.S.பதம்சந்த், C.அரிஹந்த் ராஜ் C.S.கிஷன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் “அஷ்டகர்மா” பேய், பிசாசு போன்றவற்றின் மீது நம்பிக்கை இல்லாத நாயகனுக்கு பேய் என்று ஒன்று உள்ளதா? இல்லையா என்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது, அங்கு அவர் பேய் என்று ஒன்று கிடையாது என தன கருத்தை வாதாடுகிறார். அந்த விவாதத்தில் கலந்துகொண்டிருக்கும் மந்திரவாதி ஒருவர்,நாயகனுக்கு ஒரு சவால் விடுகிறார், அந்த சவால்படி அவர் சொல்லும் வீட்டில் ஒருநாள் தங்கி இருக்க நாயகனும் ஒப்புக்கொள்ளுகிறார், அப்படி தங்கிவிட்டால் பேய் இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் என மந்திரவாதி சொல்ல ,அந்த சவாலை ஏற்கும் நாயகன் அந்த சவாலில் எப்படி வெற்றி பெற்றார் என்பதே படத்தின் கதை. புதுமுக ஹீரோவாக சி.எஸ்.கிஷன் அறிமுகமாகி இருக்கிறார். செய்வினை ,மாயங்கள் மிகுந்த சைக்கலாஜிகல் த...