அசோக் செல்வன், ஜனனி நடிக்கும் ‘வேழம்’
SP Cinemas தமிழ்த் திரையுலகில் தனித்துவமான மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதில் முன்னோடியாக இருந்து வருகிறது. நல்ல தரமான திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் முழு ஈடுபாட்டுடன் இருக்கும் இத்தயாரிப்பு நிறுவனம், அசோக் செல்வனின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படமான 'வேழம்' திரைப்படத்தை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வெளியிடவுள்ளது. K4 Kreations கேசவன் தயாரித்துள்ள இப்படத்தை சந்தீப் ஷியாம் இயக்கியுள்ளார், இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உதவி இயக்குனராகவும், பல்வேறு விளம்பரங்கள் மற்றும் குறும்படங்களை இயக்கிய அனுபவமுள்ளவர். இப்படத்தில் ஜனனி ஐயர் மற்றும் ஐஸ்வர்யா மேனன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ‘தெகிடி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அசோக் செல்வனும், ஜனனியும் மீண்டும் திரையை பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளர் கேசவன், தகவல் தொழில்நு...









