தமிழக முன்னாள் துணை அமைச்சர் அமரர் திரு. ஐசரி வேலன் அவர்களின் திருவுருவ சிலையை உலக நாயகன் Dr. கமல் ஹாசன் அவர்கள் திறந்து வைத்தார்
சென்னை அடையாறில் அமைந்துள்ள Dr. எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மறைந்த முன்னாள் தமிழக இந்து அறநிலையத்துறை துணை அமைச்சரும், திரைப்பட கலைஞர் அமரர் திரு. ஐசரி வேலன் அவர்களின் 35வது நினைவு நாள் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பத்மபூஷன் கமல் ஹாசன் அவர்கள் அமரர் ஐசரி வேலன் அவர்களின் திருவுருவ சிலையை திறந்து வைத்தார்.
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் வேல்ஸ் கல்வி குழுமத்தின் தலைவருமான டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் "இலவச குடும்ப சுகாதார அட்டை" வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து நலிந்த நாடக நடிகர்களுக்கு வேல்ஸ் இலவச குடும்ப சுகாதார அட்டையுடன் புத்தாடைகளை வழங்கினார் உலகநாயகன் Dr. கமலஹாசன் அவர்கள். இதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர...









