நடிகை ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தும் தோல் பராமரிப்பு தயாரிப்புகள்
நடிகை ஸ்ருதிஹாசன், பல்ப் எனும் நிறுவனத்துடன் இணைந்து தோல் பராமரிப்பிற்கான புதிய தயாரிப்புகளை PXS Line எனும் பெயரில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
பல்ப் எக்ஸ் ஸ்ருதி என்ற பெயரில் தோல் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை தொழிலதிபர்கள் கௌதம் உப்பலூரி மற்றும் தீப்தி அலபதி ஆகியோர் ஏற்படுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக மேலும் அவர்கள் பேசுகையில், '' பல்ப் எக்ஸ் ஸ்ருதி வரிசைக்காக நடிகை ஸ்ருதிஹாசனுடான எங்களுடைய ஒத்துழைப்பு தொடர்ந்து நீடிக்கிறது. இதன் பின்னணியில் எளிய குறிக்கோள் ஒன்று தான் அமைந்திருக்கிறது. அவை தோல் பராமரிப்பு என்றால் என்ன? என்பதையும், அதனை பாரம்பரிய தரநிலைகளுடன் தோல் பராமரிப்பிற்கான தயாரிப்புகளை உருவாக்குவதுதான். எங்களுடைய தயாரிப்புகள்= உங்களுடைய சருமம் எவ்வளவு பிரகாசமாக இருக்கும் என்பதை பற்றியதல்ல. ஒரு பிரபலத்தை நீங்கள் எவ்வளவு தூரம் நேசிக்கிறீர்கள் என்பதை பற்றியதும் அல்ல. உங்கள...









