அட்லீ, ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் ‘ஜவான்’ – படத்தின் டீசருடன் ரிலீஸ் தேதி வெளியீடு
ரெட்சில்லிஸ்எண்டர்டெயின்மெண்ட், நிறுவனதயாரிப்பில்மெகா ஸ்டார்ஷாருக்கான்நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், உருவாகும்பிரமாண்டமான ஆக்சன்எண்டர்டெயினர் திரைப்படம் “ஜவான்”. திரைத்துறைகண்டிராத வகையில், உயர்தரஆக்சன்காட்சிகளுடன், இந்திய சினிமாவின் பெரும்கலைஞர்கள் இணைந்து பணியாற்ற, பிரமாண்ட பொருட்செலவில் அற்புதமான படைப்பாக இப்படம்உருவாகிறது.
ராஜாராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தென்னிந்தியாவில் வெற்றிகரமானபிளாக்பஸ்டர் படங்களை தந்த இயக்குனர் அட்லீ, தற்போது இந்திய அளவில் மிகவும்எதிர்பார்க்கப்படும்‘ஜவான்’ மூலம் மீண்டும் தனது மேஜிக்கை மீண்டும்நிகழ்த்தவுள்ளார். ரசிகர்களின் அனைத்து யூகங்களுக்கும்முற்றுப்புள்ளிவைத்து, ஷாருக்கான் ஒரு முரட்டுத்தனமான பின்னணியில், காயம் மற்றும்கட்டுகளால்மூடப்பட்டிருக்கும்டீசர்வீடியோ இன்று வெளியிடப்பட்டது.இப்படத்தின்ஃபர்ஸ்ட்லுக், திரைப்படத்தின் தன்மையை படத்தின் தொனியை ரசிகர்களுக்கு சொல்வதாக அமைந்துள்ளது, இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜூன் 2, 2023 அன்று வெளியாகிறது.
படம்குறித்து ஷாருக்கான்கூறுகையில், “ஜவான்” திரைப்படம் மொழி, நிலப்பரப்புதாண்டி அனைவரும் ரசிக்கக்கூடிய ஒரு உலகளாவிய கதை. இந்த தனித்துவமானதிரைப்படத்தை உருவாக்குவதற்கான பெருமை அட்லீயை தான் சேரும், ஆக்சன்படங்களை விரும்பும் எனக்கு இந்த படம் ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது!எங்கள் திரைப்படத்தின் ஒரு முன்னோட்டமாக இந்த டீசர் இருக்கும். இந்தடீசர் திரைப்படம் பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு அளிக்கும்.
ஜவான்படத்தை உருவாக்குவது குறித்து இயக்குநர் அட்லீ பேசுகையில்,“ஜவான்” உணர்வுப்பூர்வமான டிராமா, ஆக்சன் என எல்லாம் கலந்த திரைப்படமாக இருக்கும். பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்க விரும்புகிறேன், அவர்கள் அனைவரும் ஒன்றாக ரசிக்கக்கூடிய ஒரு திரைப்படத்தையும், முன் எப்போதும் இல்லாத வகையில் ஷாருக்கானை சிறப்பாகவும் காட்ட முயற்சித்துள்ளேன். என்றார்.
ரெட்சில்லிஸ்எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் ‘ஜவான்’ திரைப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்க, கௌரி கான் தயாரிக்கிறார். “ஜவான்” திரைப்படம் ஜூன் 2, 2023 அன்று ஐந்து மொழிகளில் ஷாருக்கானின் முதல் பான் இந்திய படமாகவெளியிடப்படுகிறது.
ஜவான் திரைப்படஅறிவிப்பையடுத்து, அடுத்த ஆண்டில் ஷாருக்கான் மேலும் டங்கி, பதான் ஆகிய படங்களின் மூலம் பார்வையாளர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் விருந்தளிக்க உள்ளார்.
ரெட்சில்லிஸ்எண்டர்டெயின்மெண்ட் பற்றி: ரெட்சில்லிஸ்எண்டர்டெயின்மெண்ட் (RCE) 2002 இல்நிறுவப்பட்டது, அன்றிலிருந்து, இந்த நிறுவனம் பல தளங்களில் உயர் தரமான பொழுதுபோக்குகளை உருவாக்கும் வகையில் நிலையான வளர்ச்சி பாதையில்உள்ளது. ரெட்சில்லிஸ்எண்டர்டெயின்மெண்ட் உள்ளடக்க மேம்பாடு, தயாரிப்பு, உலகளாவிய சந்தைப்படுத்தல் போன்ற பணிகளையும், ரெட்சில்லீஸ் VFX மூலம்விஷுவல்எஃபக்ட்ஸ் மற்றும் போஸ்ட் புரடக்சன் போன்ற பணிகளையும் செய்து, நாட்டின் முன்னணி ஸ்டுடியோக்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.