சுழல் – வெப் சீரிஸ் – விமர்சனம்
ஜூன் 17ஆம் தேதியன்று வெளியான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான முதல் ஒரிஜினல் தமிழ் தொடரான சுழல்அனைத்து தரப்பு இணையதள ரசிகர்களையும் கவர்ந்து பல தரப்பட்டவர்களின் பாராட்டையும் பெற்றுள்ளது ,புஷ்கர் & காயத்ரி, அவர்கள் உருவாக்கிய கண்கவர் டிஜிட்டல் உலகிற்கு பார்வையாளர்களை அழைத்துச்செல்லும் இந்த நீண்ட அசல் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் தமிழ் தொடரில் ஆர் பார்த்திபன் ,ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், ஸ்ரேயா ரெட்டி உட்பட பல திறமையான நடிகர்கள் குழுவுடன், அனுசரண் .எம் மற்றும் பிரம்மா இயக்கிய இத்தொடரின் காட்சிகள் நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
தொடரின் அனைத்து அத்தியாயங்களும் எதிர்பாராத திருப்பங்கள். கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்-நடிகைகள் தேர்வு. அவர்களின் அற்புதமான நடிப்பு. தரமான பின்னணி இசை என தொடரின் எட்டு அத்தியாயத்தையும் முழு ரசிப்புடன் காணலாம்.பார்த்திபன் அவர்கள் அப்பாவ...









