Tuesday, June 2

சினிமா

தங்கர் பச்சான் இயக்கத்தில் மம்தா மோகன்தாஸ்!

தங்கர் பச்சான் இயக்கத்தில் மம்தா மோகன்தாஸ்!

சினிமா
தங்கர் பச்சான் இயக்கத்தில் மம்தா மோகன்தாஸ்! பாரதிராஜா,யோகிபாபு, கௌதம் மேனனன் இவர்களுடன் நான்காவது முக்கிய கேரக்டரில் மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார்.படம், “கருமேகங்கள் கலைகின்றன." ( “கருமேகங்கள் ஏன் கலைகின்றன ?” என்பது“கருமேகங்கள் கலைகின்றன“என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ) *இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 25 முதல் கும்பகோணத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  மேலும் சென்னை,ராமேஸ்வரம் போன்ற ஊர்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இதுவரை ஏற்றிராத  முற்றிலும் மாறுபட்ட பாத்திரங்களில்  திரைப்படத்தின் அனைத்து நடிகர்களும்  பங்கேற்கிறார்கள். முந்தைய திரைப்படங்கள்போலவே  இத்திரைப்படமும் தங்கர் பச்சானின் சிறுகதையைத்  தழுவிஉருவாக்கப்பட்டுள்ளது. சிறிதும் சமரசம் செய்துகொள்ளாத தனது பாணியிலான வெகு இயல்பான வாழ்வியல் கொண்ட  திரைப்படமாக இது இருக்கும் என தங்கர்பச்சான்  தெரிவித்தார். ...
வசந்த் ராமசாமியின் ‘ஸ்ரீ அன்னமார் புரொடக்சன்ஸ்’ மற்றும் இயக்குனர் S. P. ஹோசிமினின் ‘ஹோசிமின் புரொடக்சன்ஸ்’ இணைந்து தயாரிக்கும் படம்  “ரெயின்போ”

வசந்த் ராமசாமியின் ‘ஸ்ரீ அன்னமார் புரொடக்சன்ஸ்’ மற்றும் இயக்குனர் S. P. ஹோசிமினின் ‘ஹோசிமின் புரொடக்சன்ஸ்’ இணைந்து தயாரிக்கும் படம் “ரெயின்போ”

சினிமா
வசந்த் ராமசாமியின் ‘ஸ்ரீ அன்னமார் புரொடக்சன்ஸ்’ மற்றும் இயக்குனர் S. P. ஹோசிமினின் ‘ஹோசிமின் புரொடக்சன்ஸ்’ இணைந்து தயாரிக்கும் “ரெயின்போ”பிரமாண்ட பொருட்செலவில் FANTASY COMEDYஆக தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு மிகுந்த பொருட்செலவில் முதல் கட்டமாக சென்னையில் தொடர்ந்து 12 நாட்களாக நடைபெற்று முடிந்தது.அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில் Rainbow குழுவினர் இயக்குனர் மற்றும் நடிகருமான திரைக்கதை மன்னன் K.பாக்யராஜ் அவர்களை சந்தித்து ஆசி பெற்றனர். இப்படத்தில் "BIGBOSS" புகழ் நிரூப் ஏழு கதாநாயகிகளுடன்நடிக்கிறார். இப்படத்தின் வானவில் பிரதான கதாபாத்திரமாக வருகிறது.இப்படத்தின் ஏழு கதாநாயகிகளாக சிம்ரன் ராஜ் ,மற்றும் ஆறு முன்னனி கதாநாயகிகள் நடிக்க மற்றும் மைம் கோபி , மனோபாலா ,சார்லஸ் வினோத் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இடம் பெறுகிறார்கள். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக...
நகைச்சுவையும், திகிலும் கலந்த ‘காட்டேரி’

நகைச்சுவையும், திகிலும் கலந்த ‘காட்டேரி’

சினிமா
தமிழ் திரை உலகில் பேயை வைத்து ' யாமிருக்க பயமே' எனும் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'காட்டேரி'. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா, இயக்குநர் டீகே, நாயகிகள் ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், நாயகன் வைபவ் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு உள்ளிட்ட படக்குழுவினரும், திரையுலகினரும் கலந்து கொண்டனர். இதில் நடிகை ஆத்மிகா பேசுகையில்,.'' திரைத்துறையில் அறிமுகமான பிறகு இந்த படத்தில் நடிக்க ஒப்பந...
மக்களின் அன்பை சம்பாதிப்பதே எனது ஒரே விருப்பம், அதை தொடர்ந்து பெற கடினமாக உழைப்பேன்.-வத்சன்

மக்களின் அன்பை சம்பாதிப்பதே எனது ஒரே விருப்பம், அதை தொடர்ந்து பெற கடினமாக உழைப்பேன்.-வத்சன்

சினிமா
ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் முருகானந்தம் தயாரிப்பில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி திரைக்கு வரும் படம் 'குருதி ஆட்டம்'. "எட்டு தோட்டாக்கள்" படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை. அதர்வா கதாநாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வில்லனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆஜானுபாகுவான தோற்றத்துடன் கட்டுமஸ்தான உடலுடன் காட்சியளித்த அவரை பார்த்த பலரும் பாலிவுட்டில் இருந்து புதிய வில்லன் நடிகரை இறக்குமதி செய்திருக்கிறார்களோ என நினைத்திருப்பார்கள். ஆனால் காலச்சக்கரத்தை சற்றே ரீவைண்ட் செய்து பத்து வருடங்களுக்கு முன்பு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், அவரது உதவியாளரான சரவணன் இயக்கத்தில் வெளியான 'எங்கேயும் எப்போதும்' படத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த படத்தில் ஜெய்-அஞ்சலி, சர்வானந்த்-அனன்யா என இரண்டு...
“தேஜாவு” வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்

“தேஜாவு” வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்

சினிமா
வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'. இப்படம் ஜூலை 22 அன்று வெளியானது. இந்நிலையில் ஊடகங்கள், விமர்சகர்கள், மற்றும் பொது மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற 'தேஜாவு' படத்தின் வெற்றியை இன்று படக்குழுவினர் கொண்டாடினர். இது குறித்து நடிகர் அருள்நிதி கூறுகையில், "இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். "தேஜாவு" படத்தின் தயாரிப்பாளர் விஜய் பாண்டி அவர்கள் இப்படத்தினை நன்றாக விளம்பரப்படுத்தி பொது மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்த்து இதனை வெற்றி படமாக்கியுள்ளார். இத்தருணத்தில் அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசனுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச...
பிராட் பிட் நடித்துள்ள “புல்லட் டிரெய்ன்” திரைப்படம் இந்திய ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக இந்திய திரையரங்குகளில் ஒரு நாள் முன்னதாகவே வெளியாகிறது !!!

பிராட் பிட் நடித்துள்ள “புல்லட் டிரெய்ன்” திரைப்படம் இந்திய ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக இந்திய திரையரங்குகளில் ஒரு நாள் முன்னதாகவே வெளியாகிறது !!!

சினிமா
மூன்று வெற்றிகரமான திரைப்பட பிரீமியர்கள் மற்றும் ஸ்கர்ட்டுடன்  பிராட் பிட் தோன்றிய புகழ்பெற்ற சிவப்பு கம்பள தோற்றத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக,  இன்னும் ஒரு உற்சாகமான செய்தி வெளியாகியுள்ளது! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி - நகைச்சுவை கலந்த திரைப்படமான “புல்லட் டிரெய்ன்” திரைப்படம் அமெரிக்காவில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஆகஸ்ட் 4, 2022 அன்று இந்தியாவில் வெளியாகவுள்ளது! டெட்பூல் 2 இயக்குனர் டேவிட் லீட்ச் இயக்கிய இந்த திரைப்படத்தில், ஹாலிவுட்டின் மிகவும் பிரபலமான சில முன்னணி நட்சத்திர குழுவினர் இணைந்து நடித்துள்ளனர். முதன்மை பாத்திரத்தில் பிராட் பிட் நடிக்க, கிஸ்ஸிங் பூத் நடிகர், பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது வென்றவர் மற்றும் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட, ஜோய் கிங் மற்றும் பலமுறை பிரைம் டைம் எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ப...
உலகநாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாய் நடிக்கும் புதிய படம்

உலகநாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாய் நடிக்கும் புதிய படம்

சினிமா
பல புதிய முயற்சியுடன் கூடிய வெற்றி படங்களை தயாரித்த, உலகநாயகன் திரு.கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனமும் தயாரிப்பாளர் திரு.ஆர்.மகேந்திரனும் மீண்டும் ஒரு வெற்றி கூட்டணியில் இணைந்து தயாரிக்க இருக்கும் 54வது திரைப்படத்தின் கதாநாயகனாக திரு. உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கிறார். இது ஒரு உண்மை வரலாற்று நிகழ்வினை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். பிரம்மாண்டமாகத் தயாராகும் இந்தப் படம் குறித்த பிற விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.  ...
ஜோதி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஜோதி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

சினிமா
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஜோதி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் – ல் நடைபெற்றது. அங்கு பத்திரிக்கையாளர்களுக்கு ஜோதி படத்தை திரையிட்டனர் படம் முடியும் வரை மிகவும் அமைதியுடன் பார்த்துக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர்கள், காட்சி முடிவில் பலத்த கரகோஷம் எழுப்பினர். அதுவே ஒரு நல்ல படத்திற்கான அடையாளமாக காணப்பட்டது. ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் வெளியே வரும்போது திரைப்படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களையும், ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களையும் வாழ்த்தி இது மிகச்சிறந்த திரைப்படம் என பாராட்டு தெரிவித்தனர். பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் AV கிருஷ்ண பரமாத்மா, இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், துணை நடிகர் ஹரி க்ரிஷ், தயாரிப்பாளர் SP ராஜா சேதுபதி மற்றும் இந்த உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்மணி அந்த குழந்தையோடு குடும்பத்தாருடன் கலந்துகொ...
எப்பிக் தியேட்டர்ஸ் (Epic Theatres) நிறுவனம் தயாரித்துள்ள முதல் படமான “இனி ஒரு காதல் செய்வோம்” திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் எழுதி, இயக்கியுள்ளார்.

எப்பிக் தியேட்டர்ஸ் (Epic Theatres) நிறுவனம் தயாரித்துள்ள முதல் படமான “இனி ஒரு காதல் செய்வோம்” திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் எழுதி, இயக்கியுள்ளார்.

சினிமா
புதுமுகம் அஜய் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் கதாநாயகியாக ஸ்வேதா ஷ்ரிம்டன் நடித்துள்ளார். இவர் பல குறும்படங்கள், விளம்பரங்களில் நடித்துள்ளார். பல தமிழ் மற்றும் கன்னட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கோபிநாத் சுகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ஜெய் திலிப் கலை இயக்கத்தை மேற்கொண்டார். "ரேவா" எனும் பெண் இசையமைப்பாளர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் விஜய் சேதுபதியின் தயாரிப்பு மற்றும் நடிப்பில், ரெஜினா கசாண்ட்ரா கதானாயகியாக நடித்து வெளியான “முகில்” படத்தின் இசையமைப்பாளர் ஆவார். இத்திரைப்படத்தின் இசை அனைவரின் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. “96” பட புகழ் "கவிஞர் கார்த்திக் நேத்தா" இந்த படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களையும் பாடகர்கள் சின்மயி, ஸ்வேதா மோகன், ஹரி சரன், தீபக் போன்றோர் பாடியுள்ள...
நதி -திரைப்பட விமர்சனம்

நதி -திரைப்பட விமர்சனம்

சினிமா
மாஸ் சினிமாஸ் சார்பில், சாம் ஜோன்ஸ் நடித்ததோடு தயாரித்திருக்கும்படம் நதி,அவரோடு இந்த படத்தில் கயல் ஆனந்தி, வேல ராமமூர்த்தி, ஏ,வெங்கடேஷ், கரு பழனியப்பன், முனிஷ்காந்த், ஆகியோருடன் மற்றும் பலர் நடித்துள்ளனர். நதி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மு.தாமரைசெல்வன். பேட்மிண்டன் விளையாட்டில் சாம்பியனாக திகழும் சாம் ஜோன்ஸ் தன்னுடைய விளையாட்டுத் திறமை வாயிலாக தனது எளிய குடும்பத்தை முன்னேற்றம் காண செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார், அதே வகுப்பில் படிக்கும் கயல் ஆனந்தி சாம் ஜோன்ஸிடம் நட்புடன் பழகுவதை ஆனந்தியின் பெரியப்பா வேல ராமமூர்த்தி மற்றும் குடும்பத்தினர்அவர்கள் காதலிப்பதாக தவறாக எண்ணி,நட்பாக பழகும் அவர்களை பிரிக்க திட்டமிடுகிறார்கள் சாதிபலம் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்க ஆனந்தியின் குடும்பத்தினர் சாம் ஜோன்ஸை செய்யாத கொலைக்கு உடந்தை என்று கூறி சிறைக்கு அனுப்புகிறார்கள் . இதன் ப...