Thursday, December 5

நதி -திரைப்பட விமர்சனம்

மாஸ் சினிமாஸ் சார்பில், சாம் ஜோன்ஸ் நடித்ததோடு தயாரித்திருக்கும்படம் நதி,அவரோடு இந்த படத்தில் கயல் ஆனந்தி, வேல ராமமூர்த்தி, ஏ,வெங்கடேஷ், கரு பழனியப்பன், முனிஷ்காந்த், ஆகியோருடன் மற்றும் பலர் நடித்துள்ளனர். நதி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மு.தாமரைசெல்வன்.

பேட்மிண்டன் விளையாட்டில் சாம்பியனாக திகழும் சாம் ஜோன்ஸ் தன்னுடைய விளையாட்டுத் திறமை வாயிலாக தனது எளிய குடும்பத்தை முன்னேற்றம் காண செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார், அதே வகுப்பில் படிக்கும் கயல் ஆனந்தி சாம் ஜோன்ஸிடம் நட்புடன் பழகுவதை ஆனந்தியின் பெரியப்பா வேல ராமமூர்த்தி மற்றும் குடும்பத்தினர்அவர்கள் காதலிப்பதாக தவறாக எண்ணி,நட்பாக பழகும் அவர்களை பிரிக்க திட்டமிடுகிறார்கள் சாதிபலம் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்க ஆனந்தியின் குடும்பத்தினர் சாம் ஜோன்ஸை செய்யாத கொலைக்கு உடந்தை என்று கூறி சிறைக்கு அனுப்புகிறார்கள் . இதன் பின் நடக்கும் திருப்பங்கள் என்ன? என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைகிறது எஞ்சிய கதை.

சாம் ஜோன்ஸ், கயல் ஆனந்தி, வேல ராமமூர்த்தி, ஏ,வெங்கடேஷ், கரு பழனியப்பன், முனிஷ்காந்த், ஆகியோர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர், நேட்டிவிட்டி கதைகளத்தை சாதி, அரசியல் ,இதனுடன் விளையாட்டு என கலந்து படத்தை சிறந்த படமாக உருவாக்கம் செய்துள்ளார் இயக்குனர் தாமரைச் செல்வன்.

ஒளிப்பதிவாளர் : எம்.எஸ். பிரபுவும் , இசையமைப்பாளர்: திபு நினன் தாமசும் இயக்குனருக்கு பக்கபலமாய் நின்று தங்கள் பங்களிப்பை நிறைவாய் தந்துள்ளார்கள்.

மொத்தத்தில் இந்த நதி ரசிகர்களின் மனதில் தெளிர்ந்த நீரோடையாய் இடம்பிடிக்கும்.

 

Spread the love