Friday, January 24

தங்கர் பச்சான் இயக்கத்தில் மம்தா மோகன்தாஸ்!

  1. தங்கர் பச்சான் இயக்கத்தில் மம்தா மோகன்தாஸ்!

பாரதிராஜா,யோகிபாபு, கௌதம் மேனனன் இவர்களுடன் நான்காவது முக்கிய கேரக்டரில் மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார்.படம், “கருமேகங்கள் கலைகின்றன.”

( “கருமேகங்கள் ஏன் கலைகின்றன ?” என்பது“கருமேகங்கள் கலைகின்றன“என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. )
*இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 25 முதல் கும்பகோணத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  மேலும் சென்னை,ராமேஸ்வரம் போன்ற ஊர்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.
இதுவரை ஏற்றிராத  முற்றிலும் மாறுபட்ட பாத்திரங்களில்  திரைப்படத்தின் அனைத்து நடிகர்களும்  பங்கேற்கிறார்கள். முந்தைய திரைப்படங்கள்போலவே  இத்திரைப்படமும் தங்கர் பச்சானின் சிறுகதையைத்  தழுவிஉருவாக்கப்பட்டுள்ளது. சிறிதும் சமரசம் செய்துகொள்ளாத தனது பாணியிலான வெகு இயல்பான வாழ்வியல்
கொண்ட  திரைப்படமாக இது இருக்கும் என தங்கர்பச்சான்  தெரிவித்தார்.


கண்மணி எனும் கதைப் பாத்திரத்திற்காக இந்தியாவிலுள்ளபல நடிகைகளிடம் நடிப்புத் தேர்வு
நடத்திய பின் மம்தா மோகன்தாஸ் தேர்வாகியிருக்கிறார். இத்திரைப்படத்தின்மையமான பாத்திரத்தில் தான் நடிப்பதைப் பெருமையாககருதுவதாக மம்தா மோகன்தாஸ் கூறுகிறார்.மேலும் எஸ்.ஏ. சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார் போன்றோர் நடிக்கிறார்கள்.

 

Spread the love