Monday, January 20

‘கடாவர்’ -திரைப்பட விமர்சனம்

அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்ததோடு முதன் முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கடாவர்’. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி உள்ள இந்த திரைப்படத்தை அனூப். எஸ். பணிக்கர் இயக்கியுள்ளார் , இந்த திரைப்படத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார்

.மர்ம மனிதனால் பிரபல மருத்துவர் காரோடு எரித்து கொல்லப்படுகிறார் இதையொட்டி நடக்கும் காவல்துறை விசாரணையில் சிறையில் இருக்கும் வெற்றிக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்தாலும், சிறையில் இருக்கும் ஒருவரால் எப்படி கொலை செய்து இருக்க முடியும் ? என்ற வினா ஏற்படுகிறது ,இந்த வினாவிற்கு விடை தேடும் விசாரணையில் காவல்துறைக்கு, தடயவியல் துறை நிபுணரான பத்ரா (அமலா பால்) உதவி செய்கிறார். கதையின் இறுதியில் கொலைக்கான பின்னணி என்ன?, கொலைகாரன் யார்?.போன்ற பலவிதமான வினாக்களுக்கு விடை தேடி செல்கிறது மீதி கதை.

கதையின் நாயகியாய் புதுவிதமான தோற்றத்தில், தான் இதுவரை ஏற்ற பாத்திரங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் ,தடயவியல் துறை நிபுணராக சிறப்பாக அமலாபால் நடித்துள்ளார் ,

நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன்,அதுல்யா ரவி,ரித்விகா என பலரும் தங்களுக்கு கொடுக்கப்ட்ட பாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்புடன் நடித்திருக்கிறார்கள்,சஸ்பென்ஸ் கதைக்கு ஏற்ற திரில்லிங் ஆன திருப்பங்களுடன், விறுவிறுப்பாய் படத்தை இயக்கியுள்ளார் அனூப். எஸ். பணிக்கர்.கிரைம் ,த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள கதைக்கேற்ற வேகத்திற்க்கு அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும்,ரஞ்சின் ராஜின் இசையும் மேலும் பலம் சேர்த்திருக்கின்றன

மெடிக்கல் க்ரைம் திரில்லர் திரைப்படமான இந்த .கடாவர் திரைப்படம், அமலாபாலுக்கு தொடர்ந்து இது போன்ற புதிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கவும் ,படங்களை தயாரிக்கவும் நம்பிக்கை தருவதோடு, த்ரில்லிங்கான கதைகளை ரசிக்கும் ரசிகர்களின் விருப்பத்தேர்விலும் நிச்சயமாய் இடம் பெறும்.

Spread the love