Wednesday, June 3

சினிமா

மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ள த்ரில்லர் ட்ராமாவான ‘மிலி’ டீசரை ஜீ ஸ்டுடியோஸ் & போனி கபூர் இணைந்து  வெளியிட்டுள்ளனர்!

மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ள த்ரில்லர் ட்ராமாவான ‘மிலி’ டீசரை ஜீ ஸ்டுடியோஸ் & போனி கபூர் இணைந்து  வெளியிட்டுள்ளனர்!

சினிமா
ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்கும் த்ரில்லர் ட்ராமாவான ‘மிலி’ டீசரை ஜீ ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளனர். ‘மிலி’ படத்தை தேசிய விருது பெற்ற மதுகுட்டி சேவியர் இயக்கி உள்ளார். இதில் ஜான்வி கபூர் கதை நாயகியாக நடிக்க உள்ளார். ஜான்வி கபூர் இதற்கு முன்பு திரையில் முயற்சித்திடாத வித்தியாசமான ஒரு சவாலான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார் . படத்தின் டீசர் பரபரப்பாகவும், பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அதே சமயம் ஜான்வி கபூரின் நடிப்பும், அவருடைய சீரியஸான கதாபாத்திரமும் இன்னும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. டீசரில் உறைந்திருக்கும் சூழலில் ஜான்வி சிக்கியிருக்கும்  ஒரு காட்சி, கதை எந்த மாதிரியான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்க இருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. தயாரிப்பாளர் போனி கபூர் சொந்த தயாரிப்பில் ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தனது மகளை முதன்முறையாக நட...
” யுவனுக்கு,  பிளாக்‌ஷிப் மற்றும் SNS  மாணவர்கள் சேர்ந்து கொடுத்த உலக சாதனை சர்ப்ரைஸ் “

” யுவனுக்கு,  பிளாக்‌ஷிப் மற்றும் SNS  மாணவர்கள் சேர்ந்து கொடுத்த உலக சாதனை சர்ப்ரைஸ் “

சினிமா
தொடர்ந்து இணையத்தில் பல சாதனைகளை படைத்து விரைவில் சாட்டிலைட் தொலைக்காட்சியாக மாற‌விருக்கும் பிளாக்‌ஷிப் நிறுவனமும் , கல்வி உலகில் கனவுப்புதுமைகளை அரங்கேற்றி 25வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் SNS நிறுவனமும் இணைந்து யுவனுக்கு அவருடைய இசை உலகின்  வெள்ளி விழா பரிசாக ஒரு உலக சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர் ... விரைவில் பிளாக்‌ஷிப் டிவியில் தொடங்கவிருக்கும் "லவ் யூ யுவன்" எனும் நிகழ்ச்சியின் முதல் பகுதியாக இது படமாக்கப்பட்டது .. ஒரு பெருந்திரள் மாணவர் பட்டாளத்தை பார்க்க மட்டுமே அழைக்கப்பட்ட யுவனுக்கு , அவருக்காக காத்திருக்கும் இந்த உலக சாதனை முயற்சியே சொல்லப்படவில்லை என்பது அவருக்கு கூடுதல் ஆச்சர்யம், மகிழ்ச்சியைத் தரவே , ஆடிப் பாடி அதிரடித்தார் இசை இளவரசர் யுவன் சங்கர் ராஜா ...இதன்படி ஒரே நேரத்தில் 11,000 மாணவர்கள் யுவனின் பில்லியன் ஹிட் பாடலான ரவுடி பேபிக்கு ஆடிப் பாடி சாதனை படை...
’ஆஹா’ மற்றும் வெற்றிமாறனின் ‘பேட்டைக்காளி’ ட்ரைய்லர் வெளியீட்டு விழா ஜல்லிக்கட்டு விளையாட்டோடு வெளியிடப்பட்டது!

’ஆஹா’ மற்றும் வெற்றிமாறனின் ‘பேட்டைக்காளி’ ட்ரைய்லர் வெளியீட்டு விழா ஜல்லிக்கட்டு விளையாட்டோடு வெளியிடப்பட்டது!

சினிமா
ஆஹாவின் சிறந்த படைப்பான ’பேட்டைக்காளி’யின் ட்ரைய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்த ட்ரைய்லர் பார்வையாளர்களிடையே ஆர்வத்தையும் ஆவலையும் ஏற்படுத்தும் வகையிலான கதை மற்றும் நடிகர்களின் தேர்ந்த நடிப்பையும் கொண்டிருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்கள் ‘வடம்’ கண்டு ரசித்தனர். இது நிகழ்ச்சியின் சிறப்புகளில் ஒன்றாக அமைந்தது. ‘வடம்’ என்பது ஜல்லிக்கட்டு விளையாட்டின் ஒரு வடிவமாகும். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பிறகு இது சென்னையில் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஹா முன்பே சொன்னது போல, 100% தமிழ் கண்டெண்ட் என்பதில் உறுதியாக இருக்கிறது என்பதற்கான உண்மையான ஒரு நிகழ்வு தான் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டோடு இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்டியது. ஜ...
அறம் எண்டர்டெயின்மெண்ட், ஶ்ரீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் டிரைலரை எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டார்

அறம் எண்டர்டெயின்மெண்ட், ஶ்ரீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் டிரைலரை எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டார்

சினிமா
அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள கலகலப்பான காதல் கதையான ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் டிரெயிலரை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ நாராயணன் வெளியிட்டார். சமத்துவ மக்கள் கழக மாணவர் அணி மாநில செயலாளர் கார்த்திக் நாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் பெற்றுள்ளது. விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' மற்றும் 'கடைசி விவசாயி' உள்ளிட்ட படங்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ள வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட், 'காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தை தமிழகமெங்கும் பிரமாண்டமான முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெறும். காதல் மற்றும் நகைச்சுவை கலந்த ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தை இயக்குநர் பிரியாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும்...
ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் மிளிர்

ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் மிளிர்

சினிமா
இணையத்தில் வைரலாகி வரும் மிளிர் படத்தின் மோஷன் போஸ்டர் ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டிடம் மலையாளம், தமிழ் படங்களில் பணியாற்றிய நாகேந்திரன் என்பவர் முதல்முறையாக இயக்கும் படம் மிளிர். இப்படத்தில் "பிக்பாஸ்" புகழ் ஐஸ்வர்யா தத்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சினிமா டூர் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எஸ்.சூர்யாதேவி தயாரிக்கிறார். இப்படத்தின் நாயகனாக இந்தோனேசியாவை சேர்ந்த தமிழர் சரண் விசாகன் அறிமுகமாகிறார். வில்லனாக இயக்குனரும் நடிகருமான ஏ.வெங்கடேஷ் நடிக்கிறார். கதாநாயகியை மையப்படுத்திய ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ...
‘அம்மு’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

‘அம்மு’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

சினிமா
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் 'அம்மு' திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படமான 'அம்மு'வில், சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை போல எழுந்திருக்கும் அம்முவின் பரபரப்பான பயணத்தைப் பாருங்கள்.சாருகேஷ் சேகர் எழுதி, இயக்கிய 'அம்மு'வில் ஐஸ்வர்யா லட்சுமி, நவீன் சந்திரா மற்றும் சிம்ஹா நடித்துள்ளனர். இந்த அமேசான் ஒரிஜினல், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பரபரப்பான கதையையும், அவள் அதை விட்டு வெளியேறும் பயணத்தையும் விவரிக்கிறது. பிரபல திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும், ஸ்டோன் பெஞ்ச் தயாரிக்கும் , அமேசான் ஒரிஜினல் திரைப்படம் அம்மு 240+ நாடுகள் மற்றும் பிரதேசங்களில் அக்டோபர் 19 முதல் தெலுங்கில் நேரிடையாகவும், தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழியில் டப்பிங்களுடன் ஸ்ட்ரீம் செய்யப்...
நடிகர் டோவினோ தாமஸ் மூன்று வேடங்களில் நடிக்கும் பான் இந்திய திரைப்படம் “அஜயந்தே ரண்டம் மோஷனம்” #ARM இனிதே துவங்கியது !!!

நடிகர் டோவினோ தாமஸ் மூன்று வேடங்களில் நடிக்கும் பான் இந்திய திரைப்படம் “அஜயந்தே ரண்டம் மோஷனம்” #ARM இனிதே துவங்கியது !!!

சினிமா
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் தனது திரைப்பயணத்தில் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் திரைப்படம் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்குகிறார். மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையை சொல்லும் இப்படத்தில் டோவினோ மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார். படத்தின் டைட்டில் கேரக்டர்களான மணியன், அஜயன், குஞ்சிகேலு மூன்று பாத்திரங்களில் மாறுபட்ட தோற்றங்களில் டோவினோவே நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை சுஜித் நம்பியார் எழுதியுள்ளார். பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பான்-இந்திய திரைப்படமாக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ படம் 3டியில் வெளியாகவுள்ளது. கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சுரபி லட்சுமி என மூன்று நாயகியகள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இளைஞ...
அமிதாப் பச்சனின் பிறந்தநாள் அன்று தனது தமிழ் படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்ட பிரபல பாலிவுட் நடிகர் ஜாவித் கான்

அமிதாப் பச்சனின் பிறந்தநாள் அன்று தனது தமிழ் படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்ட பிரபல பாலிவுட் நடிகர் ஜாவித் கான்

சினிமா
பொன்குமரன் இயக்கும் "மஹால்" திகில் படத்தில் நடிக்கிறார் ஜாவித் கான் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் பிறந்தநாளை நடிகர் ஜாவித் கான் விமரிசையாக கொண்டாடினார். அமிதாப் பச்சனுடனான தன்னுடைய நட்பை பற்றி பகிர்ந்துகொண்ட ஜாவித் கான் கூறுகையில்: அமிதாப் பச்சன் அவர்களை பற்றிய எனது ஆரம்பகால நினைவு 80களில் இருந்து துவங்கும். 'ஒன்லி விமல்' பிரச்சாரம் மூலம் நான் நாட்டின் தலைசிறந்த மாடலாக இருந்தபோதிலும், புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து எனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினேன். ஒரு நாள் அதிகாலையில் அப்ராதி கோன் இரவுப் படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பை ஃபிலிம்சிட்டியில் உள்ள மேக்கப் அறைக்கு வந்திருந்தேன். அப்போது அங்கே அமர்ந்திருந்தவரை பார்த்து நான் உறைந்து போனேன், ஏனென்றால் மேக்கப் ஏரியாவின் புல்வெளியில் அமர்ந்திருந்தது அமிதாப் பச்சன். அவரை கண்டத...
சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், ARK சரவணன் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் ‘வீரன்’ படப்பிடிப்பு நிறைவு

சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், ARK சரவணன் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் ‘வீரன்’ படப்பிடிப்பு நிறைவு

சினிமா
கடந்த பல வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் பல வெற்றிகரமான படங்களை தயாரித்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ், மதிப்பு மிக்க தயாரிப்பு நிறுவனமாக சினிமா பார்வையாளர்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். முக்கியமாக, சினிமா மற்றும் ஓடிடி களம் என இரு தளங்களிலும் தொடர்ச்சியாக கதைகளை தயாரித்து வழங்கும் மிகச் சில தயாரிப்பு நிறுவங்களில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் முக்கியமானது. அந்த வகையில், சத்யஜோதி ஃபிலிம்ஸ்ஸின் அடுத்த படைப்பாக, ஹிப்ஹாப் தமிழா கதாநாயகனாக நடித்துள்ள 'வீரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது, போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு சத்யஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணைந்த 'சிவக்குமாரின் சபதம்' மற்றும் 'அன்பறிவு' ஆகிய படங்கள் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்த இந்தப் படங்கள் மூலம் இப்பொழுது மீண்டும...
‘ஹரா’ படத்தின் முதல் பாடல் ‘கயா முயா’விற்கு கிடைத்த வரவேற்பால் மோகன் மற்றும் படக்குழுவினர் உற்சாகம்

‘ஹரா’ படத்தின் முதல் பாடல் ‘கயா முயா’விற்கு கிடைத்த வரவேற்பால் மோகன் மற்றும் படக்குழுவினர் உற்சாகம்

சினிமா
இந்திய சினிமா வரலாற்றில் முதன் முறையாக ரசிகர்கள் கையால் வெளியிட்ட பாடல் இணையதளத்தில் 11லட்சம் பார்வையாளர்களை கடந்து பரபரப்பாக 2 மில்லியனை நோக்கி நகர்கிறது கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில், விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் உருவாகும் 'ஹரா' படத்தின் முதல் பாடல் 'கயா முயா'விற்கு கிடைத்த வரவேற்பால் மோகன் மற்றும் படக்குழுவினர் உற்சாகம் கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில், 'பவுடர்' படத்தை இயக்கி வரும் விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் உருவாகும், ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் முதல் பாடல் கயா முயா வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மோகன் சினிமாவிற்கு வந்து 45 ஆண்டுகள் ஆனதையொட்டி சென்னை தியாகராய நகரில் அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்த விழாவில் ஹரா படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது. இவ்விழாவை ஹரா படக...