Thursday, June 4

சினிமா

‘லைகா’ சுபாஸ்கரன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து அமரர் கல்கியின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி நன்கொடை.

‘லைகா’ சுபாஸ்கரன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து அமரர் கல்கியின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி நன்கொடை.

சினிமா
அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளர் மணிரத்னம் இணைந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' எனும் பெயரில் இரண்டு பாகங்களைக் கொண்ட திரைப்படமாக தயாரித்திருக்கிறது. இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் சாதனையை படைத்திருக்கிறது. இந்நிலையில் லைகா குழுமம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும், அமரர் கல்கியின் புகழையும், அவரது சேவைகளையும், பாரம்பரியத்தையும் போற்றும் வகையில் இயங்கி வரும் அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மகிழ்ச்சியுடன் முன்வந்...
படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கார்கி பட இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன்

படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கார்கி பட இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன்

சினிமா
சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் கார்கி. இப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கி இருந்தார். இப்படம் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன் கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இளைஞர்கள் மட்டும் இல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் கொண்டாடும் படமாக கார்கி அமைந்தது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு பெருந்துணையாக இருந்த நிர்வாக தயாரிப்பாளர் அனந்த பத்மநாபன் அவர்களுக்கு படத்தின் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் கார் ஒன்றை அளித்துள்ளார். மேலும் இப்படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரையும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல இருக்கிறார். இது படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது....
மிரள் படத்தில் நிறைய உணர்வுபூர்வமான அம்சங்கள் இருக்கிறது -மிரள் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பில்  நடிகர் பரத்

மிரள் படத்தில் நிறைய உணர்வுபூர்வமான அம்சங்கள் இருக்கிறது -மிரள் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் பரத்

சினிமா
மிரள் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! Axess Film Factory G டில்லி பாபு தயாரிப்பில், M சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் “மிரள்”. புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழு நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். இவ்விழாவினில்.. நடிகை வாணி போஜன் பேசியதாவது..., இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் மிகப்பெரிய நன்றியை கூறிக்கொள்கிறேன். இந்த படம் மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. ஒட்டு மொத்த படக்குழுவும் முழு அர்பணிப்பை கொடுத்து, இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இணைந்து நடிப்பதற்கு பரத் மிகச்சிறந்த நடிகர், அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. உங்கள் எல்லோருடைய ஆதரவும் எங்களுக்கு தேவை. அனைவருக்கும் நன்றி. விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி  சக்திவேலன்  கூறியதாவது.. Axess Fi...
வருண் தவான் நடிக்கும் ‘பெடியா’ படத்திலிருந்து பரவசமூட்டும் காதல் மெல்லிசை பாடல் ‘எனக்காய் பிறந்தவளே நீயா’ வெளியீடு

வருண் தவான் நடிக்கும் ‘பெடியா’ படத்திலிருந்து பரவசமூட்டும் காதல் மெல்லிசை பாடல் ‘எனக்காய் பிறந்தவளே நீயா’ வெளியீடு

சினிமா
மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் 'பெடியா' படத்திலிருந்து பரவசமூட்டும் காதல் மெல்லிசை பாடல் 'எனக்காய் பிறந்தவளே நீயா' வெளியீடு 'பெடியா' திரைப்படத்தை நவம்பர் 25 அன்று தமிழகமெங்கும் பிரமாண்டமான முறையில் ஸ்டுடியோ கிரீன் வெளியிடுகிறது ,மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கும் 'பெடியா' திரைப்படத்தின் பரபரப்பான டீசர் அனைவரின் பேசு பொருளான நிலையில், அப்படத்திலிருந்து 'எனக்காய் பிறந்தவளே நீயா' எனும் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த மெல்லிசை காதல் பாடலை மிகவும் சிறப்பான முறையில் கார்த்திக் பாடியுள்ளார். அழகான பாடல் வரிகளும் உணர்வுப்பூர்வமான இசையும் கேட்பவர்களை பரவசமடைய வைக்கின்றன. 'எனக்காய் பிறந்தவளே நீயா' பாடலை கேட்கும் போது அது எவ்வாறு படம...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘சிக்லெட்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘சிக்லெட்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக்

சினிமா
தலைமுறை இடைவெளியை மையப்படுத்தித் தயாராகும் 'சிக்லெட்ஸ்' தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நட்சத்திர நடிகர்களான அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு, பிரபாஸ், வெங்கடேஷ் ஆகியோரின் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சாத்விக் வர்மா, தமிழில் முதன்முறையாக கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'சிக்லெட்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஸ்ரீகாந்த் அடாலாவின் இணை இயக்குநரும், 'திறந்திடு சிசே' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'சிக்லெட்ஸ்'. இதில் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகரான சாத்விக் வர்மா கதையின் நாயகர்களில் ஒருவராக நடிக்கிறார். இவர் ‘பாகுபலி 1’ மற்றும் ‘...
பனாரஸ் -விமர்சனம்

பனாரஸ் -விமர்சனம்

சினிமா
கல்லூரியில் படித்து வரும் செல்வாந்தரின் மகனான சித்தார்த் (ஜையீத்),தான் எதிர்காலத்தில் இருந்து டைம் மெஷின் மூலம் நிகழ் காலத்துக்கு வந்திருப்பதாக நாயகி தனி(சோனால்) யிடம் சொல்லும் பொய்யை அவரும் நம்புகிறார் சித்தார்த்(ஜையீத்கான்),தனியுடன் (சோனால்) நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படம் எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்புகிறார்.இந்த புகைப்படம் வைரலாகிறது சித்தார்த் செய்யும் தவறு, அந்த ஊரை விட்டே செல்லும் அளவுக்குத் தனியை மிகவும் பாதிக்கிறது. ஊரை விட்டுசெல்லும் தனி(சோனால்),பனாரஸ் செல்கிறார், தான் செய்த தவறை உணரும் சித்தார்த்,அதற்காக மன்னிப்பு கேட்க தனியைத் தேடி, பனாரஸ் செல்கிறான்.நாயகியை தேடி அங்கு செல்லும் நாயகன் காதலியை சந்தித்தாரா.? அவர்களது காதலின் நிலை என்ன ? இதோடு சித்தார்த்(ஜையீத்கான்) டைம் லூப்பில் சிக்கி கொள்கிறார். அவர் அதிலிருந்து எப்படி மீண்டார்? இது போன்ற வினாக்களுக்கு விடையை தருகிறது...
நித்தம் ஒரு வானம் -விமர்சனம்

நித்தம் ஒரு வானம் -விமர்சனம்

சினிமா
எல்லாமே ஒழுங்காக முறையுடன் அப்பழுக்குக்கின்றி சுகாதாரமாய் இருக்கவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கக்கூடிய கதாப்பாத்திரமாய் வாழும் அர்ஜுன் என்ற கேரக்டரில் அசோக்செல்வன் கதை யின் நாயகனாய் நடித்துள்ள படம்.படக்கதையில் அர்ஜுனுக்கு(அசோக் செல்வன்) திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்துக்குமுன் தன்னுடைய பழைய காதலன் பற்றி பேசும் மணப்பெண்ணிடம் அர்ஜுன் (அசோக்செல்வன்) பேசுகின்ற பேச்சுக்களால் திருமணமே நின்று போக,அதனால் மன அழுத்ததுக்கு ஆளாகும் அர்ஜூனிடம் டாக்டர் அபிராமி இரண்டு காதல் கதைகளை கொடுத்து படிக்க சொல்கிறார். ஆனால் அந்த அந்த இரண்டு கதைகளின் கடைசியில் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு கதையிலும் உள்ள கேரக்டர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய அர்ஜுன் விரும்புகிறார் அந்த கதாப்பாத்திரங்களை தேடி செல்லும் அர்ஜுனின் (அசோக் செல்வன் )பயணத்தில் என்ன நடந்தது? அவர்தனது பயணத்தின் வாயிலாக உண...
சமந்தாவின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘யசோதா’ திரைப்படம் சென்சார் பெற்றது!

சமந்தாவின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘யசோதா’ திரைப்படம் சென்சார் பெற்றது!

சினிமா
சமந்தாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘யசோதா’ திரைப்படம் சென்சார் பெற்றது! இதற்கு முன்பு பார்த்திராத அதிதீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்ட ‘யசோதா’ படத்தில் சமந்தா நடித்திருக்கிறார். அதிக எதிர்ப்பார்ப்புகள் இருக்கும் இந்தப் படம் தற்போது யூ/ஏ சான்றிதழுடன் சென்சார் பெற்றுள்ளது. வாடகைத்தாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள மருத்துவக் குற்றங்களை அடிப்படையாகக் கொண்ட ஆக்ஷன் மற்றும் எமோஷன் உள்ளடக்கிய கதை என்பது படத்தின் ட்ரைய்லர் காட்சிகளில் தெளிவாகியுள்ளது. இதுமட்டுமல்லாது, சமந்தாவின் திறமையான நடிப்பு, பிரம்மாண்டமான தயாரிப்புப் பணிகள் மற்றும் கதைக்கு வலுவூட்டும் பின்னணி இசை பார்வையாளர்களின் அட்ரிலின் சுரப்பை அதிகப்படுத்தி பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டும் கதையாக அமையும். வாடகைத்தாயாக சமந்தா நடித்திருக்கும் இந்தப் படம் திறமையான இயக்குநர்களான ஹரி மற்றும் ஹரீஷ் இயக்கத்தில், தயாரிப்பாளர் சிவலெங்கா கிர...
DNA மெக்கானிக் கம்பெனி வழங்கும் ‘மெளனகுரு’ & ‘மகாமுனி’ புகழ் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ்- தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 1’ பூஜையுடன் தொடங்கியது

DNA மெக்கானிக் கம்பெனி வழங்கும் ‘மெளனகுரு’ & ‘மகாமுனி’ புகழ் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ்- தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 1’ பூஜையுடன் தொடங்கியது

சினிமா
DNA மெக்கானிக் கம்பெனி வழங்கும் 'மெளனகுரு' & 'மகாமுனி' புகழ் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ்- தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் 'புரொடக்‌ஷன் நம்பர் 1' பூஜையுடன் தொடங்கியது 'மெளனகுரு', 'மகாமுனி' ஆகிய படங்களால் தனது திறமையை நிரூபித்தவர் இயக்குநர் சாந்தகுமார். அவரது அறிமுகப் படமான 'மெளன குரு' விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், இந்தப் படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட போதும் அங்கும் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அவரது இரண்டாவது படைப்பான 'மகாமுனி', பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் 30 விருதுகளை வென்றது. இப்போது இயக்குநர் சாந்தகுமார் தன்னுடைய மூன்றாவது படத்தை 'டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி' பேனரின் கீழ் இயக்க இருக்கிறார். கதையின் முன்னணி கதாபாத்திரத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். சென்னையில் எ...
கனடாவை கலக்கும் தளபதி விஜய் மக்கள் இயக்கம்!

கனடாவை கலக்கும் தளபதி விஜய் மக்கள் இயக்கம்!

சினிமா
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய்க்கு தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ரசிகர்கள் என்றால் ஏதோ படம் வெளியாகும் போது போஸ்டர் ஒட்டுவது, முதல் நாள் முதல் காட்சியை பார்த்து கொண்டாடுவது என்று இல்லாமல், பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வதோடு, பல சமூக பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள் செய்யும் சமூக பணிகளும், அவர்கள் பற்றியும் அவ்வபோது செய்திகள் வெளியாவதுண்டு. ஆனால், வெளிநாட்டில் இருக்கும் விஜய் ரசிகர்கள், ஒரு இயக்கமாக மக்கள் பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் கனடா நாட்டில் இருக்கும் விஜய் ரசிகர்கள் என்றால், அது மிகையல்ல. ஏராளமான பல சமூக பணிகளை செய்து வரும் அவர்கள் சமீபத்தில் செய்த ஒரு சேவை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கனடா நாட்டில் தளபதி விஜய் மக்...