கல்லூரியில் படித்து வரும் செல்வாந்தரின் மகனான சித்தார்த் (ஜையீத்),தான் எதிர்காலத்தில் இருந்து டைம் மெஷின் மூலம் நிகழ் காலத்துக்கு வந்திருப்பதாக நாயகி தனி(சோனால்) யிடம் சொல்லும் பொய்யை அவரும் நம்புகிறார் சித்தார்த்(ஜையீத்கான்),தனியுடன் (சோனால்) நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படம் எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்புகிறார்.இந்த புகைப்படம் வைரலாகிறது சித்தார்த் செய்யும் தவறு, அந்த ஊரை விட்டே செல்லும் அளவுக்குத் தனியை மிகவும் பாதிக்கிறது. ஊரை விட்டுசெல்லும் தனி(சோனால்),பனாரஸ் செல்கிறார், தான் செய்த தவறை உணரும் சித்தார்த்,அதற்காக மன்னிப்பு கேட்க தனியைத் தேடி, பனாரஸ் செல்கிறான்.நாயகியை தேடி அங்கு செல்லும் நாயகன் காதலியை சந்தித்தாரா.? அவர்களது காதலின் நிலை என்ன ? இதோடு சித்தார்த்(ஜையீத்கான்) டைம் லூப்பில் சிக்கி கொள்கிறார். அவர் அதிலிருந்து எப்படி மீண்டார்? இது போன்ற வினாக்களுக்கு விடையை தருகிறது படத்தின் எஞ்சிய கதை.
அறிமுக நாயகனாக ஜையீத் கான் இருந்தாலும் ரொமான்ஸ் ,ஆக்ஷன் என் அனைத்து காட்சிக்களிலும் நன்றாவே நடித்துள்ளார்,நாயகி சோனல் மோண்டோரியோ தோற்றத்திலும் ,நடிப்பிலும் நிறைவாக தன் பங்களிப்பை கொடுத்துள்ளார் மேலும் அச்யுத் குமார் ,சுஜய் சாஸ்திரி போன்றவர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.
படத்தின் அழகிய காட்சியியலுக்கு சொந்தக்காரரான ஒளிப்பதிவாளர் அத்வைதா குருமூர்த்தி மிகவும் பாராட்டுக்குரியவர் பனாரஸ் நகரினை, புதுமையான பார்வையில் சிறப்பாக பதிவு செய்துள்ளார் .
அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசையும், பாடல்களும் , இயக்குனரின் கதையோட்டத்துக்குக்கு பெரும் பலம் சேர்த்திருக்க்கின்றன, அதிலும் குறிப்பாக, பழனிபாரதியின் வரிகளில், ‘இலக்கண கவிதை எழுதிய அழகே…’ பாடல் ரசிகர்களின் இதயம் கவர்ந்த பாடலாய் அமைந்துள்ளது.
படத்தின் இயக்குனர் ஜெயதீர்த்தா ,டைம் ட்ராவல் ,காதல்,சென்டிமென்ட் என் பல பரிமாணங்களில் பயணிக்கும் கதை களத்தை அழகான காட்சி பின்னணியுடன் படமாக உருவாக்கியுள்ளார் .
பார்க்கும் இளம் பார்வையாளர்களை இந்த பனாரஸ் நிச்சயமாக பட்டென ஈர்த்து விடும்.