Tuesday, January 21

நித்தம் ஒரு வானம் -விமர்சனம்

எல்லாமே ஒழுங்காக முறையுடன் அப்பழுக்குக்கின்றி சுகாதாரமாய் இருக்கவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கக்கூடிய கதாப்பாத்திரமாய் வாழும் அர்ஜுன் என்ற கேரக்டரில் அசோக்செல்வன் கதை யின் நாயகனாய் நடித்துள்ள படம்.படக்கதையில் அர்ஜுனுக்கு(அசோக் செல்வன்) திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்துக்குமுன் தன்னுடைய பழைய காதலன் பற்றி பேசும் மணப்பெண்ணிடம் அர்ஜுன் (அசோக்செல்வன்) பேசுகின்ற பேச்சுக்களால் திருமணமே நின்று போக,அதனால் மன அழுத்ததுக்கு ஆளாகும் அர்ஜூனிடம் டாக்டர் அபிராமி இரண்டு காதல் கதைகளை கொடுத்து படிக்க சொல்கிறார். ஆனால் அந்த அந்த இரண்டு கதைகளின் கடைசியில் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு கதையிலும் உள்ள கேரக்டர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய அர்ஜுன் விரும்புகிறார் அந்த கதாப்பாத்திரங்களை தேடி செல்லும் அர்ஜுனின் (அசோக் செல்வன் )பயணத்தில் என்ன நடந்தது? அவர்தனது பயணத்தின் வாயிலாக உண்மைகளை காண முடிந்ததா ?மேலும் அவர் தன்னுடைய பிரச்சனைகளிலிருந்து இருந்து வெளிவந்தாரா ? இது போன்ற வினாக்களுக்கு விடையினை சொல்லும் விதமாய் நகருகிறது படத்தின் மீதி கதை.

தான் படிக்கும் கைதிகளின் நாயகர்களாய் தன்னை உருவாக்கப்படுத்திகொள்ளும் கதாப்பாத்திரமான அர்ஜுன் என்ற கேரக்டர் மற்றும் கல்லூரி மாணவரான வீரா என்னும் கேரக்டர் அதோடு கொங்க்கு தமிழ் பேசி அசத்தும் பிரபா என்னும் கேரக்டர் என பல பரிமாணங்களில் தன் நடிப்பு திறமையை வெளிக்கொணர அசோக்செல்வனுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது அவரும் அந்த வாய்ப்பை நன்றாகவேய பயன்படித்தியு ள்ளார் என்று கூறலாம்

மீனாட்சி என்ற கேரக்டரில் ஷிவாத்மிகா ராஜசேகர், அபர்ணா பாலமுரளி, ரிது வர்மா என கதையின் நாயகியர் பலரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரின் தன்மை உணர்ந்து மாறுபட்ட நடிப்பை வெளிக்காட்டி சிறப்பாக நடித்துள்ளார்கள் .இதில் மதியாக வரும் அபர்ணா பாலமுரளி தன்னுடைய நடிப்பின் திறமையால் கேரக்டரில் ஒன்றி சிறப்புற நடித்துள்ளார் .

மாறுபட்டகளங்களில் பயணிக்கும் கதையில் துணைப் பாத்திரங்களாய் நடித்துள்ள வரும் அழகம்பெருமாள், காளி வெங்கட் போன்றவர்களும் ரசிகர்களின் தனி கவனித்தை பெற தவறவில்லை .

 


கோபி சுந்தரின் இசையில் பாடல்களும், தரனின் பின்னணி இசையும் படத்தின் கதையோட்டத்திருக்கு தங்களது பங்களிப்பை நன்கு  வழங்கியுள்ளது, ஒளிப்பதிவாளர் விது ஐயன்னாவின் கவித்துவமான கோணங்கள்  குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் அற்புதமாக அமைந்துள்ளது .

அழகான வாழ்வியலை, சிறப்பான பயண வழி கதையாக புதுமையான கதைகளத்துடன் நன்கு படமாக்கி யுள்ளார் இயக்குனர் ரா.கார்த்திக் .கதைக்குள் வரும் கதைகளுள் என்ன நடக்கிறது என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்திஅதனைஆர்வத்துடன் பார்க்கும் உணர்வில் இயக்குனர் வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்லலாம்.

நல்ல கதையினையும், பயண வழி காட்சிகளையும் ரசிக்கும் ரசிகர்ளின் கவனத்தை இந்த வானம் நிச்சயம் வசப்படுத்தும்.

Spread the love