”காவல் துறையில் இருந்தவனுக்கு கலைத்துறை தந்த வெற்றி” – ’டாக்டர்’ பட புகழ் கராத்தே கார்த்தி பேட்டி
’டாக்டர்’ பட நடிகருக்கு மலையாள சினிமா தந்த வரவேற்பு
எங்கோ எப்படியோ இருந்தவர்கள், இருக்க வேண்டியவர்களை தமிழ் சினிமா பல சமயங்களில் இவர் தனக்கானவர் என தேர்வு செய்துகொள்ளும் அப்படி ஒரு அக்மார்க் கலைஞனாக கலைத்தாயாளும், திறன்மிகு படைப்பாளர்களாலும் தேர்வு செய்துகொள்ளப்பட்டவர் கராத்தே கராத்தி. ‘டாக்டர்’ படத்தில் வில்லனுக்கு வலதுகரமாக கோமதி அக்கா கேரக்டரில் வருவாரே அவர்தான் கராத்தே கார்த்தி.
இதற்குமுன் ‘என்னை அறிந்தால்’, ‘கைதி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ‘சித்திரை செவ்வானம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘கூமன்’ மலையாள படத்தில் இவரது கதாபாத்திரம் மிக முக்கியமானது. இவரது நடிப்பு மலையாளம் மற்றும் தமிழ்த் திரைக்கலைஞர்கள் பாராட்டை பெற்று வருகிறது.
ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் மிரட்டும் கராத்தே கார்த்தி, கராத்தே, பாக்ஸிங்கில் பல பதக்கங...









