தற்போதய சமூக வாழ்வியலில் பேசுபொருளாகியுள்ள வாடகைத்தாய் என்ற செய்திக்குப்பின்னணியில் எப்படி வணிக பரிமாற்றங்கள்நடைபெறுகிறது? இதன் மூலம் மக்கள் எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார்கள் போன்ற பல அம்சங்களை சாதரண மக்களிமும் கொண்டு சென்று சேரும் வகையில் யசோதா படமாக உருவாக்கியுள்ளார்கள் .
நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைக்களம் கொண்ட யசோதாவில், தனது தங்கையின் ஆப்ரேஷனுக்காக, சமந்தா வாடகைத்தாயாக மாறுகிறார் வாடகைத்தாய் என்ற போர்வையில் சட்ட விரோதமாக பணம் சம்பாதிப்பதையே நோக்கமாக கொண்டுள்ள நிறுவனத்தில் வாடகைத் தாயாகும் சமந்தா ,வாடகைத் தாய் முறையை தொழிலாகச் செய்யும் வரலட்சுமியுடைய அந்த நிறுவனத்தின் உண்மை தன்மை என்ன? அங்கு என்னதான் நடக்கிறது? அங்குள்ள பெண்களின் நிலை என்ன? என மறைக்கப்பட்ட குற்றங்களின் உண்மை பின்னணிகளை கண்டறிய முயற்சிக்கிறார்.இதற்கிடையில் ஹாலிவுட் நடிகை கொல்லப்பட்ட வழக்கும் அதனுடன் இணைகிறது இறுதியில் அநீதிகளுக்கு எதிராக போராடும் சமந்தா அதிலிருந்து மீண்டது எப்படி? அந்த வாடகைத்தாய் பெண்களின் நிலை என்ன? போன்ற பல வினாக்களுக்கான விடைகளை தருகிறது ‘யசோதா’ படத்தின் மீதிக்கதை.
கதைக்கும் கதையின் நாயகிக்கும் முக்கியத்துவமுள்ள யசோதாவின் முழு படத்திலும் ஆக்ஷன், எமோஷன் என பல பரிமாணங்களில் சிறப்பான நடிப்பை சமந்தா வெளிப்படுத்தியுள்ளார். இவரது திரைப்பயணத்தில் யசோதா ஒரு குறிப்பிட்டு சொல்லக்கூடிய படமாக இருக்கும் .
ஏற்கனவே சர்க்கார் படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து பலமாய் கைதட்டுகளை பெற்றிருந்த வரலக்ஷ்மி சரத்குமார் இந்த படத்திலும் எதிர்மறை கதாபாத்திரத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களை பெறுகிறார்.
டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் உன்னி முகுந்தன்,போலீஸ் பயிற்சி அதிகாரியாக சம்பத் ராஜ், போலீஸ் கமிஷனராக முரளி சர்மா என அனைத்து நடிகர்களும் கொடுக்கப்பட்ட பாத்திரங்களின் தன்மை உணர்ந்து, நன்கு நடித்துள்ளார்கள்
இரட்டை இயக்குனர்கள் ஹரி சங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் இருவரும் , சொல்ல விரும்பும் கதையினை தெளிவான திரைக்கதையுடன் சிறப்பான படமாக உருவாக்கியுள்ளார்கள். மணி சர்மா இசையில் பாடல்களும், பின்னணி இசையும், சுகுமாரின் ஒளிப்பதிவும் இயக்குனர்களின் கதைநகர்வுக்கு பக்க பலமாய் அமைந்துள்ளது.
எல்லா தரப்பு மக்களையும் இந்த யசோதா நிச்சயம் கவர்வாள் என்பது நிச்சயம் .