Thursday, December 5

மிரள்- திரை விமர்சனம்

கதையின் நாயகன் பரத் மற்றும் நாயகி வாணி போஜன் இருவரும் காதலித்து திருமணம் செய்த கொண்ட தம்பதியினர் அவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார் , ஆனால் பரத்தை வாணிபோஜனின் தந்தைக்கு பிடிக்காது ஒரு நாள் ஒரு அச்சம் ஊட்டக்கூடிய திகில் கனவு வாணி போஜனுக்கு வருகிறது.அந்த அச்சம் நிறைந்த கனவுகளால் வாணி போஜனுக்கு மனதளவில் மிகவும் பாதிப்பு உண்டாகிறது . தங்களுடய இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டி, குல தெய்வவழிபாடு செய்ய தீர்மானித்து, சொந்த ஊருக்கு பரிகாரம் செய்ய செல்கின்றார்கள் ஆனால் வேலை நிமித்தமாய் மீண்டும் பரத்தும் வாணிபோஜனும் த ங்களுடைய மகனை அழைத்துக்கொண்டு மீண்டும் சென்னைக்கு திரும்புகிறார்கள் அப்படி அவர்கள் திரும்பி செல்லும் வழியில் பல எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்கொள்கின்றனர், சிக்கலான அந்த சம்பவங்களிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் ? என்பதுதான் படத்தின் மீதி எஞ்சிய கதை

அறிமுக படம் முதல் காதல் நாயகனாகவும் பின்னர் சில படங்களில் ஆக்ஷன் நாயகனாகவும் வலம் வந்த பரத்
இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்


வாணி போஜன், கே.எஸ். ரவிக்குமார்,மீராகிருஷ்ணன் , ராஜ்குமார்,மாஸ்டர் அங்கித் போன்றவர்களின் நடிப்பும் கதையின் கதாபாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் நன்கு வெளிப்பட்டுள்ளது .

திகில் படங்களுக்கு அந்த காட்சிகளுடன் ரசிகர்களை ஒன்றி போக செய்வதில் பெரும்பங்கு, ஒளி மற்றும் ஒலிக்கே உண்டு என்று சொல்லலாம் அந்த வகையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் பிரசாத்தும் படத்தின் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலாவும் தங்களைது பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள்

படத்தினை அறிமுக இயக்குனர் சக்திவேல் புதுமையான திருப்பங்களுடன் விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார்.சஸ்பென்ஸ் , திரில்லிங் ட்விஸ்ட்கள் என் தன் முதல் படத்தை நன்றாகவே இயக்குனர் உருவா க்கியுள்ளார்.

ஒரு குடும்பத்தின் கதையின் பின்னணியில் ஹாரர் மற்றும் திகில் சேர்ந்த கலவையாய் உருவாகியுள்ள மிரள், திரில்லர் கதை ரசிகர்களை கவரும்.

 

 

 

 

Spread the love