பேட்டைக்காளி -விமர்சனம்
ஆண்டுகொண்டு இருக்கும் பரம்பரை தன்னிடம் வேலை செய்பவர்களை அடிமைகளாக நினைக்கும் எண்ணத்தை காலம் கடந்தும் அவர்களது வாரிசுகளின் மனதில விதைத்துவிட்டு போறாங்க..... அப்படித்தான் பேட்டைக்காளி காலத்துலேயும் தொடர்கிறது , சிவகங்கை சீமையின் பண்ணையாருக்கும் ,அவர்களீடம் பலதலைமுறைகளாக வேலை பார்த்த மக்களுக்கும் உள்ள உரிமை போராட்டம்தான் கதையின் களம்.ஜாதிய அடக்குமுறை,வன்மம்,வன்முறை,சுயநலம்,பெயர் ,மானம்,கொலை இவற்றையெல்லாம் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குள் சொல்லியிருக்கார் இயக்குனர், ஜல்லிகட்டில் கிடைக்கும் கௌரவத்துக்காக எதையும் செய்யும் அளவுக்கு துணியும் போக்கை கதையின்களமாக . கொண்டு ஒவ்வொரு எபிசோடுகளாக திரைக்கதை நகர்கிறது .
தாமரைக்குளத்தை சேர்ந்த பண்ணையார் வேல.ராமமூர்த்தி, இவருடைய பண்ணையில் விவசாயக்கூலிகளாக முல்லையூர் மக்கள் வேலை செய்துவருகிறார்கள் விவசாய கூலிகளின் தலைவனாக இருக்கும் கிஷோரின் அக்கா மகனாக வ...









