Friday, January 24

“யூகி” விமர்சனம்

UAN Film House தயாரிப்பாளர் Mr.Rajadas Kurias தயாரிப்பில், கதாசிரியர் பாக்கியராஜ் கதையில், ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில், கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி,பவித்ரா லக்‌ஷ்மி, இணைந்து நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் “யூகி”. வாடகை தாய் பின்னணியில் உணர்வுப்பூர்வமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்களம் இப்படத்தில் துப்பறிவாளராக உள்ள நரேன், சேதுவாக நட்டி, காவல் அதிகாரியான பிரதாப்போத்தன் மற்றும் எஸ்.ஐ கதிர் இவர்கள் திடீரென காணாமல் போன ஆனந்தியை தேடுகிறார்கள் தேடுதல் முயற்சியில் பல திருப்பங்கள் வருகிறது இறுதியாக ஆனந்தியை அவர்கள் கண்டுபிடித்தார்களா ? இல்லையா? அவருக்கு என்னவாயிற்று ? இதற்கெல்லாம் பின்புலம் என்ன? என்பதுதான் “யூகி”படத்தின் எஞ்சிய கதை.

பல பரிமாணங்களை வெளிப்படுத்தும் கேரக்டரில் கதிர், துப்பறியும் நிபுணராக நரேன் நட்டி, வாடகை தாயாக கயல் ஆனந்தி, நட்டி, என அனைத்து நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப இயல்பாக நடித்துள்ளார்கள் மேலும் பிரதாப் போத்தன், பவித்ரா லக்ஷ்மி, ஆத்மியா, முனிஷ்காந்த், நமோ நாராயண், வினோதினி போன்றவர்களின் கதாபாத்திரங்களும் கதையுடன் இணைந்து பயணிக்கிறது

தமிழ் மற்றும் மலையாள என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கியுள்ளார். இப்படத்தின் கதை வசனம் பாக்கியராஜ்ராமலிங்கம் . சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படகதைகளுக்கு எதிர்பாராத ட்விஸ்ட்கள் மிகவும் முக்கியம் ,இந்த ட்விஸ்ட்களுடன் கதையை சுவாரஸ்யமாகவே நகர்த்தியுள்ளார் .

புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவும், ஜோமின் படத்தொகுப்பும் ரஞ்சன் ராஜ் இசையும், டான்வின்சென்ட்டின் பின்னணிஇசையும் ,இயக்குனரின் கதையோட்டத்திற்க்கு பக்கபலமாய் துணை நின்றுள்ளன .

எராளமான கதாபாத்திரங்களுடன் நகரும் கதை, சஸ்பென்ஸ் திரில்லர் பட ரசிகர்களை நிச்சயமாய் கவரும்

Spread the love