ஆண்டுகொண்டு இருக்கும் பரம்பரை தன்னிடம் வேலை செய்பவர்களை அடிமைகளாக நினைக்கும் எண்ணத்தை காலம் கடந்தும் அவர்களது வாரிசுகளின் மனதில விதைத்துவிட்டு போறாங்க….. அப்படித்தான் பேட்டைக்காளி காலத்துலேயும் தொடர்கிறது , சிவகங்கை சீமையின் பண்ணையாருக்கும் ,அவர்களீடம் பலதலைமுறைகளாக வேலை பார்த்த மக்களுக்கும் உள்ள உரிமை போராட்டம்தான் கதையின் களம்.ஜாதிய அடக்குமுறை,வன்மம்,வன்முறை,சுயநலம்,பெயர் ,மானம்,கொலை இவற்றையெல்லாம் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குள் சொல்லியிருக்கார் இயக்குனர், ஜல்லிகட்டில் கிடைக்கும் கௌரவத்துக்காக எதையும் செய்யும் அளவுக்கு துணியும் போக்கை கதையின்களமாக . கொண்டு ஒவ்வொரு எபிசோடுகளாக திரைக்கதை நகர்கிறது .
தாமரைக்குளத்தை சேர்ந்த பண்ணையார் வேல.ராமமூர்த்தி, இவருடைய பண்ணையில் விவசாயக்கூலிகளாக முல்லையூர் மக்கள் வேலை செய்துவருகிறார்கள் விவசாய கூலிகளின் தலைவனாக இருக்கும் கிஷோரின் அக்கா மகனாக வரும் கலையரசன், சிறந்த மாடுபிடி வீரராக இருக்கிறார். விவசாய கூலிகள் வசிக்கும் கிராமத்தை சேர்ந்தவர்கள் யாரும், மணியக்காரரின் காளையை அடக்க கூடாதுஎன்றுள்ள நிலையில், எப்படியாவது மணியக்காரர் காளையை அடக்க வேண்டும் என தீவிரமாக முயற்சிக்கிறார் கலையரசன். அதேபோல் மஞ்சுவிரட்டு நாளில் மணியக்காரர் காளை அடக்கப்படுவதால் வேல.ராமமூர்த்திக்கு அது பெரிய அவமானமாகிறது. அதன்பின் பிடிபட்ட காளையும் இறந்துவிட தனது மகனை தூண்டிவிட்டு கலையரசனை கொலை செய்கிறார் பண்ணையார்..இதற்க்காக பண்ணையாரை பழிவாங்க நினைக்கும் கிஷோர் அவரை கொலை செய்ய முயற்சிக்கும் போது, டிரைவர் மாயாண்டி பலியாகிறார். அப்போது பண்ணையாரின் பார்வையும் பறிபோகிறது.
மாயாண்டியின் தங்கை ஷீலா ராஜ்குமார், ஆற்றில் அடித்துவந்த கன்னுகுட்டி ஒன்றை எடுத்து காளியாக வளர்த்து ஜல்லிக்கட்டுக்காக அதை தயார்படுத்துகிறார் வாடிவாசலுக்கு வரும் காளியும் சிறப்பாக விளையாடி வெற்றிவலம் வருகிறது இதன் பின் நடப்பவைகளை அடுத்தத்த பகுதிகளில் பார்க்கலாம் .
இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘பேட்டைக்காளி’ வெப் சீரிஸை La .ராஜ்குமார் இயக்கியுள்ளார். கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பொருத்தமான நட்சத்திரதேர்வுடன், கதையின் பின்புலத்துக்கேற்ற காட்சி அமைப்புகளுடன் தொடரை நன்கு கொண்டு சென்றுஉள்ளார்.
விளையாட்டாய் நமக்கு தெரிந்த ஜல்லிக்கட்டின் பிண்ணனியில் உள்ள வர்க்கரீதியிலான் அரசியலை காட்சி வாயிலாக வெளிப்படுத்தும் இந்த வெப் சீரிஸ் ,போன்ற கதை கள சூழ்நிலைகளில் வாழாத ரசிகர்களையும் கவரும் .
கலையரசன், வேல ராமமூர்த்தி, கிஷோர், ஷீலா ஆகியோர் இந்த வெப் சீரிஸில் முக்கியமான கதாபாத்திரங்களில் நன்கு நடித்துள்ளனர்.வாழ்வியலை சிறப்பான காட்சி வடிவில் வார்த்துள்ள வேல்ராஜின் ஒளிப்பதிவும் ,சந்தோஷ் நாராயணன் மேற்பார்வையில் டைட்டில் இசை மற்றும் பின்னணி இசை போன்றவையும் கதையுடன் நாம் ஒன்றி பயணிக்க பெரிதும் உதவி செய்து,அடுத்த பகுதிகளை தொடர்ந்து பார்க்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது.