Thursday, June 18

சினிமா

அமரர் கல்கி வாழ்க்கை வரலாறு – இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டார்

அமரர் கல்கி வாழ்க்கை வரலாறு – இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டார்

சினிமா
பொன்னியின் செல்வன் படைத்த அமரர் கல்கி தமிழின் சிறந்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், கலை விமர்சகர், பாடலாசிரியர். இவை அனைத்துக்கும் மேலாக ஆழ்ந்த தேச பக்தர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று மும்முறை சிறை சென்றவர். அவரது எழுத்துக்களைப் போலவே வாழ்க்கையும், மிகவும் சுவாரசியமானது. “கல்கி:பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் பத்திரிகையாளர் எஸ். சந்திர மௌலி எழுதியுள்ள அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் மணிரத்னம் இன்று (13 பிப்ரவரி 2023) வெளியிட்டார். புத்தகத்தின் முதல் பிரதிகளை அமரர் கல்கியின் பேத்திகளான திருமதி. சீதா ரவி, திருமதி. லட்சுமி நடராஜன் இருவரும் பெற்றுக் கொண்டனர். “அமரர் கல்கியின் எழுத்துக்கள் தலைமுறைகள் தாண்டி ரசிக்கப்படுவது அவரது எழுத்தின் ஈர்ப்புக்கு சாட்சி. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பினைப் பெற்று, இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இரு...
மார்வெல் ஸ்டுடியோஸின் “கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி தொகுதி.3”(“GUARDIANS OF THE GALAXY VOL. 3”)புத்தம் புதிய டிரெய்லர் அறிமுகம்

மார்வெல் ஸ்டுடியோஸின் “கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி தொகுதி.3”(“GUARDIANS OF THE GALAXY VOL. 3”)புத்தம் புதிய டிரெய்லர் அறிமுகம்

சினிமா
மார்வெல் ஸ்டுடியோஸின் “கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி தொகுதி.3”(“GUARDIANS OF THE GALAXY VOL. 3”) புத்தம் புதிய டிரெய்லர் அறிமுகம். கேலக்ஸியின் விருப்பமான பாதுகாவலர்கள் எடுக்கும் இந்த ஒரு கடைசி சவாரியை மே 5 அன்று பாருங்கள்! நேற்றிரவு, பிக் கேமின் போது, ​​மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் ஜேம்ஸ் கன் ஆகியோர் "கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி 3 (“Guardians of the Galaxy Vol. 3,”)தொகுதிக்காக ஆன்லைனில் புத்தம் புதிய, அதிரடி ட்ரெய்லரை வெளியிட்டனர்.இது ஜேம்ஸ் கன் தலைமையில் "கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி"(“Guardians of the Galaxy”) உரிமையின் இறுதிப் படம். இப்படத்தில் கிறிஸ் பிராட், ஜோ சல்டானா, டேவ் பாடிஸ்டா, கரேன் கில்லான், போம் க்ளெமென்டிஃப் ஆகியோர் நடித்துள்ளனர், இதில் வின் டீசல் க்ரூட்டாகவும், பிராட்லி கூப்பர் ராக்கெட்டாகவும், சீன் கன், சுக்வுடி இவுஜி, வில் பவுல்டர் மற்றும் மரியா பகலோவாவாகவும் நடித்து...
தாய் திரையரங்கம் சார்பில், எஸ்.அருண் விக்னேஷ் மற்றும் ஆர்.வேல் முருகன் இருவரும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் “துச்சாதனன்”!

தாய் திரையரங்கம் சார்பில், எஸ்.அருண் விக்னேஷ் மற்றும் ஆர்.வேல் முருகன் இருவரும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் “துச்சாதனன்”!

சினிமா
விகாஸ் நடிக்கும்"துச்சாதனன்" பாஞ்சாலியின் துகிலை உரித்தவன் மட்டும் துச்சாதனன் இல்லை. மற்றவர்களுக்கு ஏற்படும் அவமானம், இழப்பு போன்ற எதையும் சிந்திக்காமல் தன் சுயநலத்துக்காக மற்றவர்களின் உடைமை, உரிமை, உயிர் போன்றவற்றை உரியும் அனைவரும் துச்சாதனன் தான்! அப்படிப்பட்ட சுயநலவாதியின் கதைதான் இந்த துச்சாதனன்! படத்தின் நாயகனாக விகாஸ் நடிக்கிறார். இவர் அகிலா, என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா, ஒற்றாடல் போன்ற படங்களில் நடித்துள்ளார்! இவருக்கு ஜோடியாக புதுமுகம் ரோகிணி நடிக்கிறார்! மேலும் இப்படத்தில் லொள்ளு சபா மனோகர், மில்டன் மேடிசன், பிரபு சாஸ்திரி, வேளாங்கண்ணி, சாய் ரோஹிணி, அருண் விக்னேஷ், மில்டன் மேடிசன், விக்னேஷ் வி.எஸ். சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இவர்களுடன் முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்கிறார்கள்! படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு நகைக்கடையில் திர...
வசந்த முல்லை -திரை விமர்சனம்

வசந்த முல்லை -திரை விமர்சனம்

சினிமா
உடலுக்கு தேவையான ஓய்வை தராமல் ஓடிகொண்டிக்கொண்டே, தான் பார்க்கும் மென்பொருள் துறையில் ஓயாமல் உழைக்கிறார்  ருத்ரன் (பாபி சிம்ஹா), அந்த கடின உழைப்பு அவருக்கு மன உளைச்சலை கொடுக்கவே வேலையிலிருந்து இடைவெளி எடுத்து, தன் காதலி நிலாவோடு (காஷ்மீரா பர்தேஸி) வெளியூருக்கு செல்கிறார். அங்கு அவர்கள் தங்கும் 'வசந்த முல்லை' என்னும் ஹோட்டலில் பல எதிர்பாராத சம்பங்கள் நடக்கிறது. அதனால் ஏற்படும் இடையூறுகளிருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள் அந்த சம்பவங்களுக்கு பின்ணணி என்ன ?இவற்றை மீதி படத்தின் கதை விவரிக்கிறது இந்தபடத்தின் கதை நாயகனாய் ‘ருத்ரன்’ என்கிற கதாபாத்திரத்தில் சிம்ஹாவும், அவருக்கு இணையாக காஷ்மீரா பரதேசியும் தங்களது கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நன்கு நடித்துள்ளார்கள் நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்,மற்றும் கொச்சு பிரேமன், சரத் பாபு ஆ...
டாடா -திரை விமர்சனம்

டாடா -திரை விமர்சனம்

சினிமா
நான்காம் ஆண்டு பொறியியல் படிக்கும் ஹீரோ மணிகண்டனுக்கும் (கவின்) அங்கேயே படிக்கும் சிந்துவிற்கும் (அபர்ணா தாஸ்) காதல் ஏற்படுகிறது.இவர்களின் காதல் கர்ப்பம் வரை சென்று விடுகிறது. கவின் அந்த கர்ப்பத்தை கலைக்கச் சொல்லியும் சிந்து  அதற்க்கு உடன்படமால்இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொ ள்வதோடு கல்லூரிப் படிப்பை முடிப்பதற்க்கு முன்பே தனியாக வாழ ஆரம்பிக்கிறார்கள், காதலன், கணவனாகிய பின்னும் மணி(கவின்) பொறுப்பின்றி குடியும் கும்மாளமும் ஆக இருக்க மனம் நொந்த சிந்து (அபர்ணா தாஸ்) குழந்தை பெற்ற பின், அந்த குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டு விட்டு, தனது பெற்றோருடன் சென்றுவிடுகிறார். இதன் பின் பிறந்த குழந்தையை வளர்க்கும் பொறுப்பு முழுவதும் மணிக்கு (கவின்) வர அவரும் பொறுப்புள்ள தந்தையாக குழந்தையை வளர்க்கிறார் சில வருடங்களுக்கு பிறகு மணி(கவின்) சிந்துவை ( அபர்ணாதாஸ் ) மீண்டும் சந்திக்கும் ...
இசைஞானி இளையராஜா இசையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், “யார் இந்த பேய்கள்” வீடியோ – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை விழிப்புணர்வு ஆல்பம் பாடல் !!!

இசைஞானி இளையராஜா இசையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், “யார் இந்த பேய்கள்” வீடியோ – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை விழிப்புணர்வு ஆல்பம் பாடல் !!!

சினிமா
திரைத்துறையில் உள்ள மிகப்பெரும் ஆளுமைகள் இணைந்து, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, “யார் இந்த பேய்கள்” எனும் ஒரு மியூசிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைப்பில், பா விஜய்யின் பாடல் வரிகளில் இந்த மியூசிக் வீடியோ பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்பாடலை இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார், சக்தி வெங்கராஜ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். “யார் இந்த பேய்கள்” பாடல் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இடையே பயனுள்ள தகவல் தொடர்பு தேவை என்பதை வலியுறுத்துகிறது. சமூகத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான ஒரு குழந்தையிடம் பெற்றோர் மனம் விட்டு பேசவும், ஆதரிக்கவும் தவறினால், அது தரும் மனச்சோர்வு குழந்தையை கடுமையாக துன்புறுத்தும். வன்...
அன்னை ஃபிலிம் புரொடக்‌ஷன் எம். ஜான் பீட்டர் வழங்கும் அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா நடிக்கும் ‘தணல்

அன்னை ஃபிலிம் புரொடக்‌ஷன் எம். ஜான் பீட்டர் வழங்கும் அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா நடிக்கும் ‘தணல்

சினிமா
வணிகரீதியாக அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் நடிகர் அதர்வா முரளி தற்போது புதிய படமான 'தணல்' வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறார் நடிகர் அதர்வா முரளி, தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வருகிறார். நகர்ப்புற மற்றும் கிராமப்புற படங்கள் என அனைத்து வகையான கதைகளிலும் நடித்து உலகம் முழுவதும் உள்ள சினிமா பார்வையாளர்களுக்குப் பிடித்த ஒருவராக உள்ளார். 'பட்டத்து அரசன்' படத்தில் இயல்பாக பக்கத்து வீட்டுப்பையன் போன்ற கதாபாத்திரத்தில் நடித்த பிறகு தற்போது 'தணல்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்க, அன்னை ஃபிலிம் புரொடக்சன், எம். ஜான் பீட்டர்  தயாரிக்கிறார். '100' & 'ட்ரிக்கர்' போன்ற படங்களில் சரியான கதையில் போலீஸ் கதாபாத்திர தோற்றத்திற்காக அதர்வா வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்த...
ட்ரெண்டிங் ஆகும் பகாசூரன் பட பாடல்

ட்ரெண்டிங் ஆகும் பகாசூரன் பட பாடல்

சினிமா
‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G இவர், ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தற்போது தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘பகாசூரன்’. இந்தப் படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். ‘ ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல்ஜெயந்த், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைக்க, ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்திற்கு எஸ்.தேவராஜ் எடிட்டிங் செய்ய, கலை இயக்குனராக எஸ்.கே பணியாற்றுகிறார். மிரட்டல் செல்வா சண்டை பயிற...
 திரையுலக வரலாற்றில் ஒரு புதிய தொடக்கமாக ‘ஸ்கிரிப்டிக்’ (SCRIPTick) திரைக்கதை வங்கியை (Script Bank) தொடங்கியுள்ள மதன் கார்க்கி மற்றும் கோ. தனஞ்ஜெயன்.

 திரையுலக வரலாற்றில் ஒரு புதிய தொடக்கமாக ‘ஸ்கிரிப்டிக்’ (SCRIPTick) திரைக்கதை வங்கியை (Script Bank) தொடங்கியுள்ள மதன் கார்க்கி மற்றும் கோ. தனஞ்ஜெயன்.

சினிமா
திறமையான எழுத்தாளர்களின் திரைக்கதைகளைப் படித்து, அவற்றுள் சிறந்த திரைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, படப்பிடிப்புக்குத் தயார் நிலையில் அவற்றை உருவாக்கி, தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் தளமாகவும் சிறந்த திரைக்கதை எழுத்தாளர்களையும், தயாரிப்பு நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கவும், ஓர் புதிய முயற்சி தான் ‘ஸ்கிரிப்டிக்’. பிரபல பாடலாசிரியர், எழுத்தாளர் திரைக்கதை எழுத்தாளர், மற்றும் 'டூப்பாடூ' போன்ற பல புதிய முயற்சிகளை முன்னெடுத்தவர் என பன்முக வித்தகராக திகழும் மதன் கார்க்கி மற்றும் பிரபல தயாரிப்பாளர்-விநியோகஸ்தர், பாஃப்டா (BOFTA) திரைப்படக் கல்லூரி நிறுவனர் கோ. தனஞ்ஜெயன் ஆகியோர் இணைந்து இந்தியாவிலேயே முதன்முறையாக, “ஸ்கிரிப்டிக்” (SCRIPTick) என்ற பெயரில் ஓர் திரைக்கதை வங்கியை தொடங்கியுள்ளனர். “ஸ்கிரிப்டிக்” திரைக்கதை வங்கி மற்றும் www.scriptick.in என்ற அதன் இணையதளத்தை மூத்த திரைப்பட இ...
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி & சூரி நடிக்கும் ‘விடுதலை பார்ட் 1’ படத்தில் இருந்து முதல் பாடலான ‘உன்னோட நடந்தா’ வெளியாகிய குறைந்த நேரத்திலேயே 2+ மில்லியன் வியூஸ்களைப் பெற்றுள்ளது

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி & சூரி நடிக்கும் ‘விடுதலை பார்ட் 1’ படத்தில் இருந்து முதல் பாடலான ‘உன்னோட நடந்தா’ வெளியாகிய குறைந்த நேரத்திலேயே 2+ மில்லியன் வியூஸ்களைப் பெற்றுள்ளது

சினிமா
ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி & சூரி நடிக்கும் 'விடுதலை பார்ட் 1' படத்தில் இருந்து முதல் பாடலான 'உன்னோட நடந்தா' வெளியாகிய குறைந்த நேரத்திலேயே 2+ மில்லியன் வியூஸ்களைப் பெற்றுள்ளது மெலோடி பாடல் விரும்பிகள் இசைஞானி இளையராஜாவின் இசைமழையில் நனையும் நேரம் இது! ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  'விடுதலை பார்ட் 1' படத்தில் இருந்து 'உன்னோட நடந்தா' முதல் பாடல் வெளியாகியுள்ளது. இதன் அறிவிப்பு வந்ததில் இருந்து  பாடல் குறித்தான எதிர்பார்ப்பு அதிகம் நிலவியது. குறிப்பாக இசைஞானி இளையராஜா மற்றும் தனுஷ் இருவரின் பாடல் பதிவு செய்யும் புரோமோ வீடியோவுக்கான காட்சிகளும் இளையராஜா மற்றும் தனுஷ் இருவரின் நகைச்சுவைப் பேச்சும் என ...