யாதும் ஊரே யாவரும் கேளிர் -விமர்சனம்
கணியன் பூங்குன்றனார் என்கிற புலவரால் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட புறநானுறு பாடலின் முதல் வரி யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகும் இது அனைத்து ஊரும் நம் ஊரே, அனைத்து மக்களும் நமது உறவினர்களே. உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் உள்ளது இந்த புகழ் பெற்ற வரியினை படத்தின் தலைப்பாக்கி அதன் மூலம் ஈழத் தமிழர்களின் வாழ்க்கை இன்னல்களை பற்றிய கதைக்களத்தை கொண்டு உருவாகி வெளியாகியுள்ள படம் யாதும் ஊரே யாவரும் கேளிர்
இலங்கை தமிழரான விஜய் சேதுபதி. 18 ஆண்டுகளுக்கு பின் , கிருபாநிதி என்ற பெயரில் கொடைக்கானலுக்கு வருகிறார் ,கதையின் நாயகனான ,அவர் அங்கு ஒரு தேவாலயத்தில் உள்ள இசைக் குழு மற்றும் பாதிரியாரிடம் (விவேக்) தன் பெயர் புனிதன் என்று கூறி அறிமுகமாகிறார், அந்த தேவாலயத்துக்கு வரும் மேகா ஆகாஷோடு காதல் கொள்ளும் அவர் தனது அடையாளத்தை மறைக்கிறார். மறுபுறம் காவல்துறை அ...









