Saturday, June 20

சினிமா

நான்கு கதாப்பாத்திரங்களோடு இருக்கை நுனியில், ஒரு திரில் பயணம் “காட்டேஜ்” !

நான்கு கதாப்பாத்திரங்களோடு இருக்கை நுனியில், ஒரு திரில் பயணம் “காட்டேஜ்” !

சினிமா
“காட்டேஜ்” பின்னணியில் பரபரக்கும் புதுமையான திரைக்கதையில், அசர வைக்கும் திரில் பயணம் “காட்டேஜ்” !! Evolution entertainment நிறுவனம் Blueberry studios உடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்க, விஜய் டீவி புகழ் KPY நவீன் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம், காட்டேஜ். ஃபர்ஸ்ட் லுக் மூலம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. ஒரு காட்டேஜ், ஒரு தம்பதி, அவர்களை அமானுஷ்யமாக பின் தொடரும் ஒரு மனிதன் அப்போது நடக்கும் கொலை, அதை யார் செய்தது என்பதை இருக்கை நுனியில் பரபரப்பாகச் சொல்லும் மர்டர் மிஸ்டரி திரில்லர் தான் காட்டேஜ். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முழுக்க முழுக்க ஊட்டிப் பின்னணியில், நடக்கும் இப்படத்தின் மொத்தப்படப்பிடிப்ப...
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்திற்கு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராட்டு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்திற்கு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராட்டு

சினிமா
எஸ். இசக்கி துரை தயாரிப்பில், வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. சென்னையில் இன்று நடைபெற்ற சிறப்பு காட்சியில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படத்தை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் திரு நல்லகண்ணு மற்றும் திரு மகேந்திரன், மற்றும் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி ஆகியோர் கண்டு ரசித்தனர். சிறப்பு காட்சிக்கு பின்னர் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து திரு நல்லகண்ணு, திரு மகேந்திரன் மற்றும் திருமுருகன் காந்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படத்தை அவர்கள் பெரிதும் பாராட்டினர். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படத்தின் டிரைலர் ஏற்கனவே பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், திரைப்படம் மே 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது....
‘குட் நைட்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா

‘குட் நைட்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா

சினிமா
தமிழ் சினிமாவில் எழுத்தாளர்கள் கொண்டாடப்பட வேண்டும் - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் நடிகர் மணிகண்டன் வர்த்தக மதிப்புள்ள நட்சத்திரமாக உயர்வார் - இயக்குநர் பாலாஜி சக்திவேல் பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களும் அழலாம். ரமேஷ் திலக் எம் ஆர் பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், நடிகர்கள் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், நடிகைகள் மீதா ரகுநாத், ரேச்சல் ரெபாக்கா, கௌசல்யா நடராஜன் ஆகியோரின் நடிப்பில் தயாராகி, மே 12 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தில் பணியாற்றிய நடிகர் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒ...
கெளதம் கார்த்திக், சரத்குமார் நடித்துள்ள ‘கிரிமினல்’ படத்தின் டப்பிங் நேற்று பூஜையுடன் தொடங்கியது!

கெளதம் கார்த்திக், சரத்குமார் நடித்துள்ள ‘கிரிமினல்’ படத்தின் டப்பிங் நேற்று பூஜையுடன் தொடங்கியது!

சினிமா
பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் வழங்கும், கெளதம் கார்த்திக், சரத்குமார் நடித்துள்ள ‘கிரிமினல்’ படத்தின் டப்பிங் நேற்று பூஜையுடன் தொடங்கியது! கௌதம் கார்த்திக்-சரத் குமார் நடிப்பில் உருவாகி வரும் ’கிரிமினல்’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவும் சரியான திட்டமிடல் மற்றும் செயல்பாட்டின் மூலம் வர்த்தக வட்டாரங்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளனர். சமீபத்தில், படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்தது. இதனை அடுத்து, நேற்று பூஜையுடன் டப்பிங் பணிகள் துவங்கியது. 'கிரிமினல்’ படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயனுடன் இணைந்து பர்சா பிக்சர்ஸின் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் தட்சிணாமூர்த்தி ராமர...
‘தி லிட்டில் மெர்மெய்ட்’ இயக்குநர் ராப் மார்ஷல், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்!

‘தி லிட்டில் மெர்மெய்ட்’ இயக்குநர் ராப் மார்ஷல், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்!

சினிமா
‘தி லிட்டில் மெர்மெய்ட்’ இயக்குநர் ராப் மார்ஷல், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்! ‘தி லிட்டில் மெர்மெய்ட்’ திரைப்படம் மே 26 ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது. மிகச்சிறந்த ஹாலிவுட் திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் ராப் மார்ஷல் இந்தியப் பத்திரிகை ஒன்றிற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய நடிகர்களுடன் பணிபுரிவதில் அவருக்கு உள்ள ஆர்வம் குறித்து கேட்கப்பட்டபோது, ​​அவர் உடனடியாக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரைக் குறிக்கும் விதமாக, ‘நாட்டு நாட்டு நடிகர்கள்’ என்று பதிலளித்தார். இதுமட்டுமல்லாது, இரண்டு நடிகர்களும் அற்புதமானவர்கள் மற்றும் திறமையானவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பா...
 ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் ஸ்ரீனிவாசா சித்தூரி வழங்கும், பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு மற்றும் உஸ்தாத் ராம் பொத்தினேனியின் #BoyapatiRAPO படத்தின் அசத்தலான க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது!

 ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் ஸ்ரீனிவாசா சித்தூரி வழங்கும், பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு மற்றும் உஸ்தாத் ராம் பொத்தினேனியின் #BoyapatiRAPO படத்தின் அசத்தலான க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது!

சினிமா
திரைப்பட இயக்குநர் போயபதி ஸ்ரீனு மற்றும் நடிகர் உஸ்தாத் ராம் பொத்தினேனி இருவரும் வெற்றிக் கூட்டணி அமைத்துள்ள ‘மாஸ் கார்னிவல்’ படமான #BoyapatiRAPO-வை திரையரங்குகளில் ரசிகர்கள் பார்க்க ஆவலுடன் உள்ளனர். மேலும், படம் வெளியாவதற்கு முன், ராம் பொதினேனியின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், இருவரும் இணைந்திருக்கும் #BoyapatiRAPO படத்தின் ‘ஸ்டார்ட்டர் ப்ளாஸ்ட்’டாக க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. இந்த விஷுவல் ட்ரீட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது, ஏனெனில், அவர்கள் தங்கள் கதாநாயகனான ராமின் மாஸான எண்ட்ரியை வார்த்தைகளுக்கு அப்பால் பாராட்டியுள்ளனர். அவரது கடுமையான தோற்றமும் உடல்மொழியும் அவருடன் சேர்ந்து பிரம்மாண்டமான எருமையும் எதிராளிகளை அடித்து நொறுக்குவது என இந்த க்ளிம்ப்ஸ் திரையில் பரபரப்பாக உள்ளது. இந்த காட்சிகளுக்கு பொருத்தமான பன்ச் வசனங்களும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. படத்தில் சமீபத்திய செ...
மூன்று மதத் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட “பாய் – Sleeper Cells” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

மூன்று மதத் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட “பாய் – Sleeper Cells” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சினிமா
  இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, மதத் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட "பாய் - Sleeper Cells" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! வழக்கமாகத் திரையுலகப் பிரமுகர்களைக் கொண்டுதான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் , போஸ்டர், டிரைலர்கள் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்தப் படம் "பாய் (BHAI) ஸ்லீப்பர் செல்ஸ்". இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார்.கே ஆர் எஸ் ஃபிலிம்டாம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீ நியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார்.இவர் ஏற்கெனவே தொரட்டி, தீக்குளிக்கும் பச்சை மரம் போன்ற தமிழ்ப்படங்களுக்கும் சில மலையாள, தெலுங்குப் படங்களுக்கும் இசையமைத்தவர். ...
அமேசான் அசல் படைப்பான ‘மாடர்ன் லவ் சென்னை’ யிலிருந்து இரண்டாவது பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு

அமேசான் அசல் படைப்பான ‘மாடர்ன் லவ் சென்னை’ யிலிருந்து இரண்டாவது பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு

சினிமா
அமேசான் ஒரிஜினல் தொகுப்பான 'மாடர்ன் லவ் சென்னை' எனும் படைப்பிலிருந்து 'யாயும் ஞானமும்..' எனத் தொடங்கும் முகப்பு பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியான பிறகு, பிரைம் வீடியோ தனது இசை ஆல்பத்திலிருந்து 'ஜிங்க்ருதா தங்கா..' எனத் தொடங்கும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவை வெளியிட்டிருக்கிறது. சென்னை மாநகர மக்கள் பேசும் மொழியின் பாணியில் இடம்பெற்ற இப்பாடலின் வரிகளை பாக்கியம் சங்கர் எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான ஷான் ரோல்டன் இசையமைத்து பாடியிருக்கிறார். இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவான 'லாலகுண்டா பொம்மைகள்' எனும் அத்தியாயத்தில் இடம்பெறும் இந்த பாடல், தொடரின் சாரம்சத்தை அழகாக படப்பிடித்து காட்டியிருப்பதுடன், பார்வையாளர்களுடனான உணர்ச்சிகளுடன் தொடர்புப் படுத்தி சென்னை வாழ் அனுபவத்தை அனுபவிக்க அனுமதிக்கிறது. இந்தப் பாடலின் மெல்லிசையும், சென்னை நிலவியல் பின்னணியில் வாழும் மக்களின் பேசும் ம...
 நடிகர் நிகில் நடிக்கும் ‘ஸ்பை’ பட டீசர் வெளியீடு

 நடிகர் நிகில் நடிக்கும் ‘ஸ்பை’ பட டீசர் வெளியீடு

சினிமா
நடிகர் நிகில் -இயக்குநர் கேரி பி ஹெச்- Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாரான 'ஸ்பை' எனும் திரில்லர் திரைப்படத்தின் டீசர். புது தில்லி கர்தவ்யா பாதையில் அமைந்திருக்கும் சுபாஷ் சந்திர போஸ் சிலை அருகே திட்டமிட்டப்படி மே 15ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. நட்சத்திர நடிகர் நிகில் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் பான் இந்திய திரைப்படம் 'ஸ்பை'. மறைக்கப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்த ரகசியங்களை அடிப்படையாகக் கொண்டு, இதன் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. 'நீங்கள் எனக்கு ரத்தத்தை கொடுங்கள். நான் உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன்' என வீரர் சுபாஷ் சந்திர போஸின் வீர முழக்கத்தை... இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அண்மையில் வெளியிட்ட காணொளியில் இடம்பெற்று பெரும் கவனத்தை கவர்ந்தது. டெல்லியில் உண்மையிலேயே வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ஒன்று நடைபெற...
‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா நடிக்கும் டைகர் நாகேஸ்வரராவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிப்பு

‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா நடிக்கும் டைகர் நாகேஸ்வரராவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிப்பு

சினிமா
'மாஸ் மகாராஜா' ரவி தேஜா -இயக்குநர் வம்சி -அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் பான் இந்திய திரைப்படமான 'டைகர் நாகேஸ்வரராவ்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் வம்சி இயக்கத்தில், 'மாஸ் மகாராஜா' ரவி தேஜா கதையின் நாயகனாக நடித்து வரும் பான் இந்திய திரைப்படம் 'டைகர் நாகேஸ்வரராவ்'. இந்தத் திரைப்படத்தை ' அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளரான அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார். இவரின் இலட்சிய படைப்பான 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டர் மே 24ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்திருக்கிறார். முதன்மையான கதாபாத்திரத்தில் இதுவரை கண்டிராத முரட்டுத்தனமான தோற்றத்தில் 'மாஸ் மகாராஜா' ரவி தேஜா தோன்றுகிறார். இப்ப...