Saturday, June 20

சினிமா

உருமல் படத்தின் படத்துவக்கவிழா  கேரளாவில் இனிதே நடைபெற்றது

உருமல் படத்தின் படத்துவக்கவிழா கேரளாவில் இனிதே நடைபெற்றது

சினிமா
டபுள் எஞ்சின் புரொடக்ஷன் சார்பில் ஆர். ராஜேஷ் தயாரிப்பில் கிரவுன் ராஜேஷ் இயக்கும் உருமல் படத்தின் படத்துவக்கவிழா இன்று காலை 10 மணிக்கு கேரளாவில் இனிதே நடைபெற்றது... இப்படத்தில் நாயகனாக குருகாந்த்,கார்த்திக் ஶ்ரீ, ராம் ராஜேஷ் ஆகியோர் நடிக்க நாயகியாக ஷிவன்யாராணி நடிக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜா சாகிப் , கவுன்கள் சுரேஷ், ஆனந்தா மூடர் மற்றும் ஸ்ரீதேவி அணில் ஆகியோர் நடிக்கிறார்கள்.. இப்படத்திற்கு எழுத்து இயக்கம் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு கிரவுன் ராஜேஷ், இசை கிரவுன் ஜே ஆர், சண்டை பயிற்சி புரூஸ்லி ராஜேஷ், கலை இயக்குனர் விஜயன் சேட்டையன். உத்திரபிரதேசத்தில் தமிழர்கள் அவர்களின் வாழ்வுரிமைக்காக போராடும் போராட்டத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் உத்தர பிரதேசத்தில் நடைபெற உள்ளது ஆகஸ்ட் மாதம் உத்திரபிரதேசத்...
சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!*

சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!*

சினிமா
 ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள 'வீரன்' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்! நிகழ்வில் கலந்து கொண்ட கதாநாயகி ஆதிரா ராஜ் பேசியதாவது, "ஆதி சார் பயங்கர ஃப்ரண்ட்லி மற்றும் சப்போர்ட். காட்சிகளில் ஏதாவது குழப்பம் இருந்தால் அவரிடம் கேட்பேன். நடிப்பதற்கு நிறைய சுதந்திரம் கொடுத்திருந்தார். இயக்குநர் சரவணனும் அப்படித்தான்". நடிகர் வினய் பேசியதாவது, "இந்தப் படம் எனக்கு அதிர்ஷ்டத்தால் கிடைத்தது. சில வருடங்களுக்கு முன்பு சத்ய ஜோதி பிலிம்ஸில் நான் ஒரு படம் நடித்து இருந்தேன். ஹிப்ஹாப் ஆதி குறித்தும் எனக்கு தெரியும். அதுவும் இல்லாமல் இது ஒரு சூப்பர் ஹீரோ படம். முதல் நாள் நான் படப்பிடிப்பிற்கு சென்றபோது இயக்குநர் சரவணன் மற்றும் ஆதிக்கு இடையே உள்ள கெமிஸ்ட்ரியை பார்த்தேன். அப்போதே இந்த படம் சூப்பர் ஹிட் என எனக்கு தெரிந்து விட்டது. இது எனக்கு இரண்டாவது சூப்பர் ஹீரோ திரைப்படம். இதற்கு முன்பு தெலுங்கில் ஒரு பட...
சமூக வலைத் தளங்களை தெறிக்கவிட்ட கபிலன்வைரமுத்து எழுதிய  தமிழ் பாடல்

சமூக வலைத் தளங்களை தெறிக்கவிட்ட கபிலன்வைரமுத்து எழுதிய தமிழ் பாடல்

சினிமா
சமூக வலைத் தளங்களில் எப்போது எந்த பாடல் டிரெண்டாகும் என்று யாருக்கும் தெரியாது. அப்படி சமீபத்தில் உலகம் எங்கும் ஏழு லட்சம் பேருக்கும் மேல் ரீல்ஸ் உருவாக்கி டிரெண்டாகிக் கொண்டிருப்பது ஒரு தமிழ் பாடல். நயன்தாரா அதர்வா ராஷி கண்ணா நடித்து 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இமைக்கா நொடிகள் என்ற படத்தில் இடம்பெற்ற விளம்பர இடைவெளி என்ற பாடல்தான் அது.   ஹிஹாப் தமிழா இசையில் கபிலன்வைரமுத்து எழுதிய பாடல். குறிப்பாக இந்தப் பாடலின் இறுதி வரிகளான “நான் உனதே நீ எனதா ? தெரியாமலே நான் தேய்கிறேன் - இல்லை என்றே சொன்னால் இன்றே என் மோகப் பார்வை மூடுவேன்” என்ற வரிகளைக் கொண்டு உலகம் முழுக்க ரீல்ஸ் உருவாகி பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, கனடா என்று எல்லா நாடுகளிலும் இது டிரெண்டிங்கில் இருக்கிறது. தமிழே தெரியாதவர்கள் கூட இந்தப் பாடல...
கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்

சினிமா
தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றவுள்ளார். 'பிகில்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக அவரது 68-வது படத்திற்காக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இணைகிறது. #Thalapathy68 என்று அழைக்கப்படும் இத்திரைப்படமானது ஏஜிஎஸ்-ன் 25-வது படைப்பு என்பதோடு இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிக பிரமாண்டமான வகையில் உருவாக உள்ளது. சிறந்த உள்ளடக்கம் மற்றும் உயர்தர தயாரிப்பு என கடந்த 25 படங்களாக முத்திரை பதித்துள்ள ஏஜிஎஸ் எண்டர்ட...
மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்-விமர்சனம்

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்-விமர்சனம்

சினிமா
மாஃபியா கும்பலால் ஒரு பள்ளி குழந்தையை கடத்தப்படும்போது ,இரவு வீட்டிற்கு செல்லும் வழியில் அதை மஹத் நேரில் பார்த்து விடுகிறார்.பின்னர் இந்த சம்பவம பற்றி அருகில் உள்ள மாருதி நகர் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் அளிக்கிறார். ஆனால் அந்த ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டரே அந்த குற்ற கும்பலுடன் தொடர்புடையவரக உள்ளார் அதன் பின் மகத் கொலை செய்யப்படுகிறார். கொலை செய்யப்பட்ட மகத்தின் காதலியான வரலட்சுமியும், அவரது மூன்று நண்பர்களும் சேர்ந்து காவல் ஆய்வாளரையும் மாஃபியா கும்பல் தலைவனையும் கொல்லத் திட்டமிடுகிறார்கள். அவர்களது திட்டம் நிறைவேறியதா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை. ஜெய்குமார் என்னும் கதாபாத்திரத்தில் மஹத் ராகவேந்திரா நன்கு நடித்துள்ளார். அவரது காதலியாகவும், காவல்துறை அதிகாரியாகவும் வரும் வரலட்சுமி சரத்குமார் மிடுக்கான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார், மற்றும் நண்பர்களாக , சந்தோஷ் பிரதாப், வி...
பிச்சைக்காரன் 2 -விமர்சனம்

பிச்சைக்காரன் 2 -விமர்சனம்

சினிமா
இந்தியளவில் முதல் வரிசை செல்வந்தர்களில் ஒருவராக விஜய் குருமூர்த்தியும் , மற்றொருவராக பிச்சைக்காரன் சத்யாவும் ( விஜய் குருமூர்த்தி ,சத்யா இரண்டுமே விஜய் ஆண்டனிதான்) உள்ளார்கள் அதில் சத்யா தொலைந்து போன தன் தங்கையை தேடிக் கொண்டிருக்கிறார்.செல்வந்தர் விஜய் குருமூர்த்தியின் சொத்துக்களை கைப்பற்ற அவருக்கு மிக நெருக்கமான் நண்பர் அரவிந்த் (தேவ் கில்).அவருடன் இளங்கோ (ஜான் விஜய்) மற்றும் சிவாவும் (ஹரீஷ் பேரடி) சேர்ந்து வேறொருவரின் மூளையை விஜய் குருமூர்த்திக்கு பொருத்தி அதன் மூலம் அவரது சொத்துகளை கபளீகரம் செய்ய திட்டமிடுகின்றாகள்,இந்த திட்டத்தின் படி சத்யாவின் மூளை, குருமூர்த்தியின் உடலுடன் பொருத்தப்படுகின்றது , அதன் பின்  கண்விழிக்கும் சத்யா,தான் வேறொருவரின் உடம்பில் இருப்பதை உணர்கிறார்,அந்த மூன்று சதிகாரர்களையம் அழித்துவிட்டு விஜய் குருமூர்த்தியாகவே மாறும் அவர், ஏழை மக்களுக்காக் ‘ஆண்டி பிகிலி’ என்ற ...
“காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

“காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

சினிமா
ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் வழங்கும், நடிகர் ஆர்யா நடிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”. இப்படம் உலகமெங்கும் 2023 ஜூன் 2 ஆம் தேதி வெளியாகிறது. பட வெளியீட்டையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் கிருபாகரன் பேசியதாவது… இந்த படத்தின் டிரெய்லரை முன்னதாகவே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, எனக்கு மட்டுமில்லை எங்களின் சென்னை குழு அனைவருக்கும் பிடித்திருந்தது, அதுமட்டுமில்லை மும்பையில் ...
ஆதிபுருஷ் திரைப்பட குழுவினர் வெளியிட்டுள்ள ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாடலின் வழியே பிரபு ஸ்ரீராமின் தெய்வீகப் பேரொளியை அனுபவித்து மகிழவும் !!!

ஆதிபுருஷ் திரைப்பட குழுவினர் வெளியிட்டுள்ள ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாடலின் வழியே பிரபு ஸ்ரீராமின் தெய்வீகப் பேரொளியை அனுபவித்து மகிழவும் !!!

சினிமா
"ஆதிபுருஷ்" படத்தில் இடம் பெற்றிருக்கும் 'ஜெய் ஸ்ரீராம்' பாடல் நம் தேசத்தை மட்டுமின்றி உலகையே ஈர்த்துள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் படத்தினை காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பாளரான அஜய்-அதுல் இசையமைத்து, மனோஜ் முன்டாஷிரின் சக்திவாய்ந்த வரிகளைக் கொண்ட இந்த அசாதாரண பாடல் பிரபு ஸ்ரீராமின் வலிமை மற்றும் சக்தியை குறிக்கும் ஒரு அற்புத அடையாளமாக அமைந்துள்ளது. கண் கவரும் காட்சிகள் மூலம் மட்டுமல்லாமல், இரட்டை இசையமைப்பாளர்களான அஜய்-அதுல் மற்றும் 30+ பாடகர்கள் பங்கு கொண்டு பாடலை நிகழ்த்தியுள்ளார்கள். நாசிக் மேளமும் 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷமும் இணைந்து அதி அற்புதமான முறையில் உருவாக்கப்பட்ட பாடல், மயக்கும் அனுபவமாக இருக்கிறது . ஓம் ரவுத் ...
ஸ்ரீ கௌரி பிரியா அமேசான் பிரைம் வீடியோவின் ‘மாடர்ன் லவ் சென்னை’யில் ‘ஷோபா’ கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கிறார்!

ஸ்ரீ கௌரி பிரியா அமேசான் பிரைம் வீடியோவின் ‘மாடர்ன் லவ் சென்னை’யில் ‘ஷோபா’ கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கிறார்!

சினிமா
நடிகை ஸ்ரீ கௌரி பிரியா அமேசான் பிரைம் வீடியோவின் ‘மாடர்ன் லவ் சென்னை’யில் ‘ஷோபா’ கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கிறார்! ’தி மிஸ் ஹைதராபாத் 2018’ வென்ற இளம் நடிகையான ஸ்ரீ கௌரி பிரியா அமேசான் பிரைம் வீடியோவின் சமீபத்திய ஒரிஜினல் தொடரான ​’​மாடர்ன் லவ் சென்னை'யில் 'ஷோபா'வாக தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தற்போது பேசு பொருளாக உள்ளார். ராஜு முருகனால் தழுவி, எழுதி, இயக்கப்பட்ட முதல் அத்தியாயம் ‘லால்குண்டா பொம்மைகள்’. இதில் மென்மையான இதயம் கொண்ட டாம்போயிஷ் பெண்ணாக அவர் நடித்துள்ளார். இவரது நடிப்பு பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. சென்னைப் பெண்ணின் பாத்திரத்தில் ஸ்ரீ கௌரி பிரியாவின் சரியான தோற்றம், தன்னிச்சையான மற்றும் இயல்பான நடிப்பு போன்றவை பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. கண்கள் வழியே வெளிப்படுத்தும் நடிப்பு, சாமர்த்தியம் மற்றும் வச...
 சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் ‘அஸ்வின்ஸ்’ ஜூன் 9 அன்று தமிழக திரையரங்குகளில் வெளியாகிறது

 சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் ‘அஸ்வின்ஸ்’ ஜூன் 9 அன்று தமிழக திரையரங்குகளில் வெளியாகிறது

சினிமா
'அஸ்வின்ஸ்' படத்தின் தமிழ்நாட்டு திரையரங்கு உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி பெற்றுள்ளது. நல்ல கதையம்சத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படம் ஜூன் 9 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. திறமையான கலைஞர்களைக் கொண்டுள்ள இந்தப் படம் ஏற்கனவே வர்த்தக வட்டாரங்களில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நெட்ஃபிக்ஸ் திரையரங்குகளுக்குப் பிந்தைய OTT உரிமையைப் பெற்றபோது ‘அஸ்வின்ஸ்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் டீசரை வெளியிட்டது படம் இன்னும் பல புதிய உயரங்களை அடைய உதவியது. தற்போது தமிழக திரையரங்கு உரிமையை சக்தி ஃபிலிம் பேக்டரி பெற்றுள்ளதால், எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தனித்துவமான மற்றும் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்க இருக்கும் 'அஸ்வின்ஸ்' படத்தை ஜூன் 9 ஆம் தேதி திரையரங்குகளில் காணத் தயாராகுங்கள். சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின்...