மாஃபியா கும்பலால் ஒரு பள்ளி குழந்தையை கடத்தப்படும்போது ,இரவு வீட்டிற்கு செல்லும் வழியில் அதை மஹத் நேரில் பார்த்து விடுகிறார்.பின்னர் இந்த சம்பவம பற்றி அருகில் உள்ள மாருதி நகர் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் அளிக்கிறார். ஆனால் அந்த ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டரே அந்த குற்ற கும்பலுடன் தொடர்புடையவரக உள்ளார் அதன் பின் மகத் கொலை செய்யப்படுகிறார். கொலை செய்யப்பட்ட மகத்தின் காதலியான வரலட்சுமியும், அவரது மூன்று நண்பர்களும் சேர்ந்து காவல் ஆய்வாளரையும் மாஃபியா கும்பல் தலைவனையும் கொல்லத் திட்டமிடுகிறார்கள். அவர்களது திட்டம் நிறைவேறியதா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஜெய்குமார் என்னும் கதாபாத்திரத்தில் மஹத் ராகவேந்திரா நன்கு நடித்துள்ளார். அவரது காதலியாகவும், காவல்துறை அதிகாரியாகவும் வரும் வரலட்சுமி சரத்குமார் மிடுக்கான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார், மற்றும் நண்பர்களாக , சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், யாசர் ஆகியோர் நடித்துள்ளனர். ஏசிபி நெடுஞ்செழியன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆரவ் தனது தோற்றம் மற்றும் உடல் மொழியால் ரசிகர்களை கவர்கிறார், வில்லன்களாக நடித்துள்ள சுப்ரமணிய சிவா மற்றும் அமித் பார்கவும் நன்கு நடித்துள்ளார்கள் .
சேகர் சந்துராவின் ஒளிப்பதிவும் . ப்ரீத்தி பாபுவின் படத்தொகுப்பும் ,மணிகாந்த் கத்ரியின் பின்னணி இசையும் கதையின் காட்சி அமைப்புகளை நேர்த்தியாகவும் கோர்வையாகவும் பயணிக்க அனுமதிக்கிறது.

கன்னடத்தில் பல படங்கள் இயக்கியுள்ள தயாள் பத்மனாபன் தமிழில் இயக்கியுள்ள இரண்டாவது படம் இது , இதற்க்கு முன்பாக அவர் வரலக்ஷ்மி, சந்தோஷ் பிரதாப் நடித்த ‘கொன்றால் பாவம் படத்தை இயக்கியிருந்தார்.
க்ரைம்-த்ரில்லர் கதையினை களமாக கொண்டு, வலுவான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட் படத்தை ஆஹா ஓடிடி-யில் பார்த்து ரசிக்கலாம் .
