Monday, June 1

சினிமா

ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “An Ordinary Man” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்

ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “An Ordinary Man” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்

சினிமா
ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “An Ordinary Man” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – இயக்குநராக தன் புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு! Ravi Mohan Studios தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான “An Ordinary Man”, நேற்று சிறப்பு பூஜையுடன்  அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்தத் திரைப்படத்தை கெனீஷா தயாரிக்கும் இந்தத் திரைப்படம் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். ஏனெனில் நடிகர் ரவி மோகன் தனது திரைப்படப் பயணத்தில் முதன்முறையாக இயக்குநராக அறிமுகமாகிறார். சினிமாவுக்கான அவரது ஆர்வமும் தனித்துவமான படைப்புத் திறனும் இந்தப் புதிய முயற்சியில் பிரதிபலிக்க உள்ளது. நகைச்சுவை மற்றும் சமூகக் கருத்துக்களை இணைக்கும் நையாண்டித்தனம் கொண்ட காமெடி-டிராமாவாக இந்தப் படம் உருவாகிறது. இதில் பிரபல நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கிறார். அவரது தனித்துவமான நகைச்சுவை பாணி மற்றும் திர...
9-வது பதிப்பு ‘ஜேப்பியார் ஐகான் விருதுகள் 2026’ கொண்டாட்டம்

9-வது பதிப்பு ‘ஜேப்பியார் ஐகான் விருதுகள் 2026’ கொண்டாட்டம்

சினிமா
9-வது பதிப்பு 'ஜேப்பியார் ஐகான் விருதுகள் 2026' கொண்டாட்டம் மரபு, அறிவுத்திறன் மற்றும் நவீன காலத்தின் சிறப்புகளை எல்லாம் ஒன்றிணைக்கும் ஒரு மாபெரும் நிகழ்வாக, ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் மிக முக்கிய விழாவான 9-வது பதிப்பு 'ஜேப்பியார் ஐகான் விருதுகள்' இன்று அதன் பிரம்மாண்டமான அரங்கில் நடைபெற்றது. தேசிய கலாச்சார வரைபடத்தில் ஒரு மைல்கல்லாக மாறியுள்ள இந்த விழா, புதுமை, தன்னலமற்ற தியாகம் மற்றும் தொழில்முனைவோர் மன உறுதி ஆகியவற்றின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்திய "சான்றோர்களையும்" "சாதனையாளர்களையும்" கௌரவிக்கிறது. பல்கலைக்கழகத்தின் அசுர வளர்ச்சிக்குக் காரணமான தொலைநோக்கு பார்வையாளர்களான ஜேப்பியார் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் ரெஜினா ஜே முரளி மற்றும் ஜேப்பியார் பல்கலைக்கழகத் தலைவர் திரு. முரளி சுப்பிரமணியன் ஆகியோர் இந்த விழாவிற்குத் தலைமை தாங்கினர். தத்தமது துறைகளில் புத...
கௌதம் ராம் கார்த்திக்கின் அதிரடி அரசியல்  களத்தில் வெளியான ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ டைட்டில் டீசர்!

கௌதம் ராம் கார்த்திக்கின் அதிரடி அரசியல்  களத்தில் வெளியான ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ டைட்டில் டீசர்!

சினிமா
‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படத்தின் அதிரடி டைட்டில் டீசரை நடிகர் ஆர்யா மற்றும் மாரி செல்வராஜ் வெளியிட்டனர்! “மனமே அனைத்திற்கும் காரணம். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே நாம் ஆகிறோம்.” என்று கவுதம புத்தர் சொன்ன பொன்மொழியுடன் Bloody Politics படத்தின் டைட்டில் டீசர் தொடங்குகிறது. தீனா ராகவன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம்,  ஒரு வலுவான அரசியல் மனோபாவத்தை உருவாக்குகிறது. டீசர் மெதுவாக தனது உலகத்திற்குள் பார்வையாளர்களை இழுத்துச் செல்கிறது. இதில் மூத்த நடிகர் ஜெயபாலன் நடித்துள்ள முதியவருக்கான கதாபாத்திரத்துக்கும், கதாநாயகனின் குரலுக்கும் இடையே நடைபெறும் உரையாடல் முக்கிய அம்சமாக உள்ளது. ஒரு கொடிக்கம்பத்தின் அர்த்தமும் அதன் அரசியல் அடையாளமும் குறித்து அவர்கள் பேசும் இந்த உரையாடல், C. N. அண்ணாதுரை முதல் நடிகர் விஜய் வரை உள்ள அரசியல் குறிப்புகளை நுட்பமாக இணைக்கிறது. இந்தக் காட்சிகளை எல்லாம் சமூக இயக்கு...
‘வடம்’ -திரைவிமர்சனம்

‘வடம்’ -திரைவிமர்சனம்

சினிமா
வடமஞ்சு விரட்டு எனும் கிராமிய வீர விளையாட்டின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதைக்களத்தில் விமல் நாயகனாய் நடித்துள்ள படம். கதையின் நாயகன் விமல் பாண்டி முனி என்னும் மாட்டை சிறு வயதிலிருந்து பாசத்துடன் வளர்த்து வருகிறார்,அவருடைய தந்தையான நரேன் ,அந்த ஊரின் மதிப்புமிக்க பெரியவர் ,அவர் அடிமாடுகளை காப்பாற்றி தன் கோசாலையில் பேணிப் பாதுகாக்கும் நல்ல மனம் படைத்தவர். நட்டியால் விரட்டி அடிக்கப்பட்ட அந்த பாண்டி முனி என்னும் மாட்டிற்கு ஒரு கண் பார்வை கிடையாது, பாசத்துடன் பாண்டி முனியை விமல் வளர்த்து மஞ்சுவிரட்டு போட்டிகளுக்காக ,அந்த காளைக்கு நன்கு பயிற்சிகளை கொடுத்து அதனை போட்டிகளில் வெற்றி பெறவும் வைக்கிறார். இதற்குப் பிறகு அந்த மாட்டை நட்டி கேட்க, இருவருக்கும் இடையே மோதல் உருவாகிறது. அதன் பிறகு விமல் மீது கொலை வழக்கு, ஜாமீன் ,அவரையே கொலை செய்ய நடக்கும் முயற்சிகள் ,அவரது காதலினால் ஏற்படும் எதிர்பாராத தி...
*சந்தானம் நடிக்கும் ” SANTA 20” படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.*

*சந்தானம் நடிக்கும் ” SANTA 20” படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.*

சினிமா
*சந்தானம் நடிக்கும் '' SANTA 20'' படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.* வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட்- K 7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் உருவாகும் ' SANTA 20 ' காலத்தை மாற்றி அமைத்து துப்பு துலக்கும் திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்தானத்தின் 'SANTA 20' படத்தின் படப்பிடிப்பு சென்னையின் முக்கியமான பகுதிகளில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இயக்குநர் சுதாமன் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் (கே. ஜே. கணேஷ்) மற்றும் K 7 ஸ்டுடியோஸ் (விஜய் கே செல்லையா) ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படம் மர்மம் -சஸ்பென்ஸ் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றின் அற்புதமான கலவையைக் கொண்ட புதிய கால பயணத்தை அடிப்படையிலான துப்பறியும் கதையாகும். 'SANTA 2...
‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு

‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு

சினிமா
'லீடர்' டீசருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பிற்கு இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் ரசிகர்களுக்கு நன்றி; படம் ஏப்ரலில் வெளியாகி அனைவரையும் பிரமிக்க வைக்கும் என்று உறுதி #LeaderTeaser  https://youtu.be/2bdOxrr7Kvw லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது. சமூக ஊடக தளங்களில் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் 'லீடர்' வெளியாகிறது. ஒரு நிமிடம் 21 நொடிகள் ஓடும் டீசரில் இடம் பெற...
*”முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் இளைஞர்களை கவரும் திரைப்படமாக ‘முஸ்தபா முஸ்தபா’ உருவாகியுள்ளது”- சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி!*

*”முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் இளைஞர்களை கவரும் திரைப்படமாக ‘முஸ்தபா முஸ்தபா’ உருவாகியுள்ளது”- சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி!*

சினிமா
*”முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் இளைஞர்களை கவரும் திரைப்படமாக ‘முஸ்தபா முஸ்தபா’ உருவாகியுள்ளது”- சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி!* 'முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. பத்திரிகையாளர்களுக்கான திரையிடல் மற்றும் சிறப்பு திரையிடலில் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் பிரதீப் மகாதேவன் மற்றும் இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த சிறப்பான வரவேற்பு காரணமாக, பார்வையாளர்கள் மத்தியிலும் படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 150-க்கும் அதிகமான திரைகளில் படம் வெளியாகிறது. தயாரிப்பாளர் பிரதீப் மகாதேவன் பகிர்ந்து கொண்டதாவது, “ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் உருவாகியுள்ள ‘மு...
*நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!*

*நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!*

சினிமா
 ‘மேட் இன் கொரியா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு! கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர், “கொரியாவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது. ஒரு பெண்ணின் கனவு நனவாவதை பற்றி உணர்வுப்பூர்வமான திரைக்கதையை கார்த்திக் படமாக்கியுள்ளார். அவருடன் எனக்கு இது இரண்டாவது படம். கொரியாவில் படமாக்கும்போது சில சவால்களை சந்தித்தோம். ஆனால், அதையும் தாண்டி நடிகர்களின் நடிப்பு, படமாக்கப்பட்ட சூழல் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது. பிரியங்கா மோகனின் பக்கத்துவீட்டு பெண் போன்ற எளிய தோற்றமே அவரை இந்த கதைக்குள் கொண்டு வந்தது. தமிழ்நாடு மட்டுமல்லாது கன்...
செல்வராகவனின் “மனிதன் தெய்வமாகலாம்” டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்!

செல்வராகவனின் “மனிதன் தெய்வமாகலாம்” டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்!

சினிமா
செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு “மனிதன் தெய்வமாகலாம்” படக்குழு அதிரடி டீசரை வெளியிட்டது. திரைப்பட இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் வலுவான திரைப் பங்களிப்புக்காக அறியப்பட்டவர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கான சிறப்பு விருந்தாக, அவரது வரவிருக்கும் திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.அது உடனடியாக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 70 விநாடிகள் நீளமான இந்த டீசர், இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் அவர்களின் திறமையான காட்சிப்படுத்தலை வெளிப்படுத்துகிறது. சிறுமி, ஆசிரியர் மற்றும் செல்வராகவன் இடையேயான குரல் உரையாடலுடன், படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வலுவான காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஒரு ஈர்க்கும் திரையரங்க அனுபவத்தை உறு...
*லாக்கப் மரணங்களை பற்றி பேசும் ‘போலீஸ் ஃபேமிலி’ திரைப்படம். மார்ச்-13ல் வெளியாகிறது.*

*லாக்கப் மரணங்களை பற்றி பேசும் ‘போலீஸ் ஃபேமிலி’ திரைப்படம். மார்ச்-13ல் வெளியாகிறது.*

சினிமா
*மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’* சமீப வருடங்களில் நடைபெற்ற சில லாக்கப் மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியதுடன் இந்திய அளவிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த லாக்கப் மரணங்கள், அது தொடர்பான பழிவாங்கல்கள், அதனால் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதை அவர்கள் சமாளிக்கும் விதம் இவற்றை மையப்படுத்தி உருவாகி உள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’. ஆத்திரம் கொண்டு பழி வாங்குதல் என்பது எந்த ஒரு விஷயத்துக்கும் தீர்வு ஆகாது.. அப்படி செய்தால் பழிவாங்கும் உணர்வு என்பது அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடரவே செய்யும். ஒருவன் அதை உணர்ந்து பழிவாங்கும் எண்ணத்தை விட்டு விட்டு மன்னிக்கும் மனதுக்கு எப்போது மாறுகிறானோ அன்று தான் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதை மையக்கருத்தாக கொண்டு இந்த ‘போலீஸ் ஃபேமிலி’ படம் உருவாகியுள்ளது... ஆன் தி டேபிள் புரொடக...