Monday, May 25

‘வடம்’ -திரைவிமர்சனம்

வடமஞ்சு விரட்டு எனும் கிராமிய வீர விளையாட்டின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதைக்களத்தில் விமல் நாயகனாய் நடித்துள்ள படம்.

கதையின் நாயகன் விமல் பாண்டி முனி என்னும் மாட்டை சிறு வயதிலிருந்து பாசத்துடன் வளர்த்து வருகிறார்,அவருடைய தந்தையான நரேன் ,அந்த ஊரின் மதிப்புமிக்க பெரியவர் ,அவர் அடிமாடுகளை காப்பாற்றி தன் கோசாலையில் பேணிப் பாதுகாக்கும் நல்ல மனம் படைத்தவர். நட்டியால் விரட்டி அடிக்கப்பட்ட அந்த பாண்டி முனி என்னும் மாட்டிற்கு ஒரு கண் பார்வை கிடையாது, பாசத்துடன் பாண்டி முனியை விமல் வளர்த்து மஞ்சுவிரட்டு போட்டிகளுக்காக ,அந்த காளைக்கு நன்கு பயிற்சிகளை கொடுத்து அதனை போட்டிகளில் வெற்றி பெறவும் வைக்கிறார். இதற்குப் பிறகு அந்த மாட்டை நட்டி கேட்க, இருவருக்கும் இடையே மோதல் உருவாகிறது. அதன் பிறகு விமல் மீது கொலை வழக்கு, ஜாமீன் ,அவரையே கொலை செய்ய நடக்கும் முயற்சிகள் ,அவரது காதலினால் ஏற்படும் எதிர்பாராத திருப்பம், இப்படி செல்லும் விமலின் வாழ்க்கையில் அதற்கு பின் என்ன நடந்தது? என்பதுதான் ‘வடம்’  படத்தின் மீதி கதை.

வெற்றி என்னும் கதாபாத்திரத்தில் மாடுகள் மீது அன்பும் பாசமும் கொண்ட கதாபாத்திரத்தில் இளம் கிராமிய நாயகனாக விமல் நடித்துள்ளார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது நடிப்பு திறனை அவர் இந்த படத்தில் வெளிப்படுத்தி உள்ளார். ரத்னவேல் என்னும் கதாபாத்திரத்தில் நட்டி நடித்துள்ளார் மேலும் குறிப்பிட்டுச் செல்லக் கூடிய கதாபாத்திரத்தில் முனிஷ்காந்த் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். விமலின் தந்தையாக சந்தன வேல் என்னும் கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார் மற்றும் தேவகி என்னும் கதாபாத்திரத்தில் சனஸ்கா ஸ்ரீ நாயகியாகவும் தீபா சங்கர் பால சரவணன், மதுசூதன் ராவ்,என பிற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள். கிராமத்து வாழ்வியலை ,மஞ்சுவிரட்டு போட்டிக்கான சூழலை ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ் குமார் அழகாக பதிவு செய்துள்ளார்.டி இமானின் பின்னணி இசை, காட்சிகளுக்கு தேவையான அளவிற்கு உறுதுணையாக அமைந்துள்ளது ,பாடல்கள் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் ரசிக்கும்படி உள்ளன.

கிராமிய வாழ்வியல் சார்ந்த மண்ணின் மைந்தர்கள், வடமாடு மஞ்சுவிரட்டு பின்னணி போன்றவற்றை சார்ந்து இருக்கும் கதை களத்தில் வர்த்தக ரீதியான அம்சங்களையும் இணைத்து நிறைவான படமாக இயக்குனர் கேந்திரன் வி இந்த படத்தினை உருவாக்கி இருக்கிறார் .

மொத்தத்தில் இந்த ‘வடம்’ ரசிகர்களை கவரும் படம் என்றே சொல்லலாம்.

Spread the love